Thug Life 7 Days Box Office: சோலி முடிஞ்சுது.. ஒரு வாரத்தில் 'தக் லைஃப்' செய்த மொத்த வசூல் இவ்வளவுதானா?
கமல்ஹாசன் மற்றும் சிம்பு ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீசான 'தக் லைஃப்' திரைப்படம் ஒரு வாரத்தில் எவ்வளவு வசூல் செய்துள்ளது, என்பது பற்றிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

இயக்குனர் மணிரத்னம் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் இருவரும் நாயகன் படத்திற்கு பின்னர், 38 ஆண்டுகள் கழித்து மீண்டும் இணைந்து பணியாற்றிய திரைப்படம் 'தக் லைஃப்' இந்த படத்தில், இளம் நடிகர் சிம்பு, கமல்ஹாசனுக்கு நிகரான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
கேங் ஸ்டார் கதைக்களத்தில் உருவான இந்த திரைப்படத்தில், இவர்களுடன் இணைந்து திரிஷா, ஜோஜூ ஜார்ஜ், அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி, அபிராமி, போன்ற பலர் நடித்திருந்தனர். ஏ ஆர் ரகுமான் இசையில் உருவான இப்படம், ஜூன் 5ஆம் தேதி உலகம் முழுவதும் சுமார் 3000 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது.

முன்பதிவிலேயே நல்ல வரவேற்பை பெற்ற ' தக் லைஃப்' திரைப்படம், வசூலில் ரூ.500 கோடியை அசால்டாக எட்டும் என படத்தின் ரிலீசுக்கு முன்பே பல திரைப்பட வணிக நிபுணர்கள் கூறிவந்த நிலையில், 'தக் லைஃப்' திரைப்படத்திற்கும் மிக பிரமாண்டமாக புரமோஷன் செய்யப்பட்டது. ஆனால் முதல் நாளே எதிர்மறையான விமர்சனங்கள் இப்படத்திற்கு கிடைத்தது. இதுவே இப்படத்தின் படுதோல்விக்கு வழி வகுத்தது. அதேபோல் திரிஷாவின் கதாபாத்திரம் கடுமையான ட்ரோல்களுக்கு ஆளாது.
இந்நிலையில் 'தக் லைஃப்' திரைப்படம், வெளியாகி ஒரு வாரத்தை எட்டி உள்ள நிலையில்... தற்போது இந்த படத்தின் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி முதல் நாளிலேயே 'தக் லைஃப்'' திரைப்படம் ரூபாய் 46 கோடி வசூல் செய்த நிலையில், படத்தின் மோசமான விமர்சனங்கள் காரணமாக வசூல் படிப்படியாக குறைய தொடங்கியது. தற்போதைய லேட்டஸ்ட் தகவலின் படி ஒரு வாரத்தில் 'தக் லைஃப்' ரூ. 86 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. பல திரையரங்குகளில் 'தக் லைஃப்' திரைப்படத்திற்கு வரவேற்பு கிடைக்காத நிலையில், திரையரங்கை விட்டு இப்படத்தை தூக்கி விட்டு வேறு சில படங்களை ஒளிபரப்பி வருவதாக கூறப்படுகிறது.





















