மேலும் அறிய
கீர்த்தி சுரேஷுக்கு போட்டி வந்தாச்சு; ஹீரோயினாக அறிமுகமாகும் பிரபல தமிழ் நடிகையின் மகள்!
பிரபல தமிழ் நடிகையின் ஒரே மகள் இப்போது, ஹீரோயினாக அறிமுகமாக உள்ள தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.
ஊர்வசியின் மகள் தேஜா லட்சுமி ஹீரோயினாக அறிமுகமாகிறார்
1/8

கேரளாவில் பிறந்திருந்தாலும், தமிழில் ஏராளமான படங்களில் நடித்து, நடிப்பு ராட்சசி என பெயர் எடுத்தவர் தான் ஊர்வசி. 1979-ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக மலையாள படம் ஒன்றில் அறிமுகமானார். இதை தொடர்ந்து 3 வருடத்தில் தமிழில் வெளியான 'முந்தானை முடிச்சு' படம் இவரை ஹீரோயினாக மாற்றியது.
2/8

பாக்யராஜ் எழுதி - இயக்கி ஹீரோவாக நடித்திருந்த இந்த படத்தில், ஊர்வசி ஏற்று நடித்த பரிமளம் கதாபாத்திரம் நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து மலையாளத்திலும் ஹீரோயினாக நடிக்க துவங்கினாலும், தமிழில் இவர் நடித்த அபூர்வ சகோதரிகள், தாவணி கனவுகள், கொம்பேறி மூக்கன், நெருப்புக்குள் ஈரம் , என தேர்வு செய்து நடித்த படங்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றது.
3/8

தமிழ், மலையாள மொழிகளை தவிர... தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் இதுவரை சுமார் 700-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவரது குடும்பமே கலை குடும்பம் என்று சொல்வதற்கு ஏற்ப... ஊர்வசியின் சகோதரிகளான கலாரஞ்சனி, மற்றும் கல்பனா ஆகியோரும் நடிகைகள் தான்.
4/8

ஊர்வசிக்கு தற்போது 56 வயது ஆகும் நிலையில்... தொடர்ந்து சிறந்த கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஜெ பேபி, மற்றும் அப்பத்தா போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
5/8

முன்னணி நடிகையாக இருக்கும் போதே... பிரபல மலையாள நடிகர் மனோஜ் கே ஜெயன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ஊர்வசி. 2000-ஆம் ஆண்டு இவருக்கு திருமணம் நடந்த நிலையில், இவர்களுக்கு 2001-ல் தேஜா லட்சுமி என்கிற மகள் ஒருவரும் பிறந்தார். பின்னர் ஊர்வசி அதீத குடிக்கு அடிமையாகிவிட்டதாக கூறப்பட்ட நிலையில், இருவரும் 2008-ல் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
6/8

முதல் கணவரை பிரிந்த பின்னர், 2013-ல் சிவ பிரசாத் என்பவரை ஊர்வசி இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு, இஷான் பிரஜாபதி என்கிற 10 வயது மகன் ஒருவர் உள்ளார்.
7/8

ஊர்வசி - மனோஜ் கே ஜெயனின் மகள் தேஜா லட்சுமி கல்லூரி படிப்பை முடித்துவிட்டு, ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த நிலையில், தற்போது மலையாள சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகி உள்ளார். இதுகுறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
8/8

இந்த திரைப்படத்தை நடிகர் பினு பீட்டர் இயக்குகிறார். ஹீரோவாக சர்ஜானோ காலித் என்பவர் நடிக்க தேஜா லட்சுமி ஹீரோயினாக நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு 'சுந்தரியாயவால் ஸ்டெல்லா' என பெயரிடப்பட்டுள்ளது. காதல் கதையை மையப்படுத்தி இந்த படம் உருவாக உள்ளது. இவரது அறிமுகத்தை தொடர்ந்து இவரது வருகை வாரிசு நடிகைகளாக திரையுலகில் கால் ஊன்றிய கீர்த்தி சுரேஷ், கல்யாணி ப்ரியதர்ஷன் ஆகியோருக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Published at : 12 Jun 2025 06:20 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















