சூர்யா கைவிட்டு போன இன்னொரு படம்..முதுகில் குத்திய லோகேஷ்...கடுப்பில் ரசிகர்கள்
சூர்யாவுக்கு சொன்ன இரும்புக்கை மாயாவி படத்தை லோகேஷ் கனகராஜ் ஆமிர் கான் வைத்து இயக்கவிருப்பதால் சூர்யா ரசிகர்கள் லோகேஷ் கனகராஜை விமர்சித்து வருகிறார்கள்.

ஆமிர் கான் லோகேஷ் கனகராஜ் கூட்டணி
பாலிவுட் நடிகர் ஆமிர் கான் சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க இருப்பதை உறுதிபடுத்தினார். சூப்பர் ஹீரோ கதை ஒன்றை லோகேஷ் சொல்லியிருப்பதாகவும் கைதி 2 படத்தைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் நிகழ்ச்சி ஒன்றில் ஆமிர் கான் தெரிவித்தார். லோகேஷ் கனகராஜ் சூர்யாவை வைத்து இயக்கவிருந்த 'இரும்புக்கை மாயாவி' படத்தையே இந்தியில் ஆமீர் கானை வைத்து இயக்கவிருக்கிறார். இதனால் சூர்யா ரசைகர்கள் லோகேஷ் கனகராஜை விமர்சிக்கத் தொடங்கியுள்ளார்கள்.
ITS OFFICIALLY CONFIRMED!!!
— SZP on June 20 (@AamirAdmirer) June 10, 2025
Get Ready for the Biggest Ever Collaboration. Megastar #AamirKhan and #LokeshKanagaraj Coming Together to Destroy Records at the Box office 🥵🔥
BRING IT ON!! pic.twitter.com/VuTJDVAtLk
சூர்யாவின் முதுகில் குத்தினாரா லோகேஷ்
லோகேஷ் கனகராஜின் கனவுப்படம் இரும்புகை மாயாவி என்றே சொல்லலாம். இந்த படத்தின் கதையை சூர்யாவிடம் சில வருடங்களுக்கு முன்பே லோகேஷ் சொல்லியிருக்கிறார். சூர்யாவுக்கு கதை பிடித்திருந்தது. ஆனால் இருவருக்கும் மற்ற படங்கள் கமிட்மெண்ட் இருந்ததால் இந்த படம் உருவாவதில் தாமதம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த படம் ஆமிர் கானுக்கு கைமாறியது.
லோகேஷ் கனகராஜை விமர்சிக்கும் சூர்யா ரசிகர்கள்
லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படத்தில் சூர்யா ரோலக்ஸ் கேரக்டரில் கேமியோ செய்தார். இந்த கேரக்டருக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பி கிடைக்கவே ரோலக்ஸ் கதாபாத்திரத்தை மையமாக வைத்து தனியாக படம் ஒன்று உருவாக இருப்பதை லோகேஷ் உறுதிபடுத்தினார். தற்போது இரும்புகை மாயாவி திரைப்படம் ஆமிர் கான் நடிக்க இருப்பது தெரிந்ததும் சூர்யாவை லோகேஷ் ஏமாற்றிவிட்டார் , முதுகில் குத்திவிட்டார் என விமர்சித்து வருகிறார்கள். முன்னதாக சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருந்த புறநாநூறு மற்றும் இந்தியில் உருவாக இருந்த கர்ணா ஆகிய படங்கள் கைவிட்டு போயின. தற்போது ரசிகர்கள் மிகவும் ஆவலாக எதிர்பார்த்து காத்திருந்த இரும்புகை மாயாவி படமும் சூர்யா கைவிட்டு போனதால் சூர்யா ரசிகர்கள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளார்கள். மேலும் சூர்யா ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடிக்கவில்லை என்றால் விக்ரம் ஒரு மொக்கை படமாக இருந்திருக்கும் என்றும் அவர்கள் கூறி வருகிறார்கள்.





















