Senthil Balaji : "சீக்கிரம் என் கார்ல ஏத்துங்க" விபத்தில் சிக்கிய இளைஞர்கள்! ஓடிவந்த செந்தில் பாலாஜி
கரூர் அருகே கார் மற்றும் வேன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான நிலையில் - காயமடைந்தவர்களை முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தனது காரில் ஏற்றி சிகிச்சைக்கு அனுப்பி வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
கரூர் மாவட்டம், நங்கவரம் பகுதியில் நடந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மாயனூர் கதவணை பகுதிக்கு தனது காரில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது மகாதானபுரம் பெட்ரோல் பங்க் அருகே கரூர் பகுதியில் இருந்து திருச்சி நோக்கி வந்த கார் ஒன்று கரூர் நோக்கி சென்று கொண்டிருந்த கனரக வேனும் நேருக்கு நேர் மோதி சாலை ஓரத்தில் கவிழ்ந்து கிடந்தது.
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தனது காரில் இருந்து இறங்கி வந்து காரில் காயம்பட்டு உயிருக்கு போராடி கொண்டிருந்த இரண்டு இளைஞர்களை மீட்டு, தனது காரில் கரூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார்.
தொடர்ந்து காயமடைந்தவர்களுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்தார். இந்த செயலை கண்ட அப்பகுதி பொதுமக்கள் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் விபத்தில் சிக்கியவர்களுக்கு செய்த உதவியை வெகுவாக பாராட்டினர்.





















