KKR vs RR: ரிங்கூ-நிதிஷ் அசத்தல்... 5 தோல்விகளுக்கு பிறகு முதல் வெற்றியை ருசித்த கேகேஆர்.. !
ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியை கொல்கத்தா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய ராஜஸ்தான் அணியில் கேப்டன் சஞ்சு சாம்சன் 54 ரன்கள் எடுத்தார். இதனால் 20 ஓவர்களின் முடிவில் ராஜஸ்தான் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் குவித்தது.
153 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணியில் தொடக்க ஆட்டக்காரர் ஆரோன் ஃபிஞ்சு 4 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான பாபா இந்தர்ஜீத் 15 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் கொல்கத்தா அணி 6 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 32 ரன்கள் எடுத்தது.
50-run partnership comes up between Nitish Rana and Rinku Singh.
— IndianPremierLeague (@IPL) May 2, 2022
Live - https://t.co/fVVHGJTNYn #KKRvRR #TATAIPL pic.twitter.com/i8jB5Kxapm
இதைத் தொடர்ந்து ஜோடி சேர்ந்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் நிதிஷ் ரானா கொல்கத்தா அணியின் ஸ்கோரை நிதானமாக உயர்த்தினர். இருவரும் மூன்றாவது விக்கெட்டிற்கு 60 ரன்கள் சேர்த்தனர். அதன்பின்னர் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 32 பந்துகளில் 3 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் விளாசி 34 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
15 ஓவர்களின் முடிவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 107 ரன்கள் எடுத்தது. கடைசி 5 ஓவர்களில் கொல்கத்தா அணி வெற்றி பெற 46 ரன்கள் தேவைப்பட்டது. அதன்பின்னர் ரிங்கூ சிங் மற்றும் நிதிஷ் ரானா ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் 19.1 ஓவர்களில் இலக்கை எட்டி கொல்கத்தா அணி அசத்தல் வெற்றி பெற்றது. கடைசி வரை ஆட்டமிழக்காமல் நிதிஷ் ரானா 37 பந்துகளில் 48* ரன்களுடனும், ரிங்கூ சிங் 23 பந்துகளில் 42* ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்