மேலும் அறிய
CSK Victory : 5 முறை கோப்பையை வென்ற சிஎஸ்கே.. இறுதிப்போட்டியில் எந்தெந்த அணிகளுடன் மோதியது?
CSK Victory : இதுவரை ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை வென்ற சென்னை அணி, ஐந்து முறையும் வெவ்வேறு அணிகளுடன் மோதியது.

சென்னை சூப்பர் கிங்க்ஸ் (Photo Credits : PTI)
1/5

2010 ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் இறுதிப்போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதி வெற்றி பெற்றது சென்னை சூப்பர் கிங்க்ஸ். முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே, 5 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்களை குவித்தது. அடுத்து களமிறங்கிய மும்பை அணி, 20 ஓவர் முடிவில் 146 ரன்களை எடுத்து தோல்வி அடைந்தது. (Photo Credits : PTI)
2/5

முதல் வெற்றியை ருசித்த சென்னை அணி, அடுத்த சிரீஸில் (2011) தொடர்ந்து இரண்டு முறை கோப்பையை அடித்தது. ஆர்சிபியுடன் மோதிய சென்னை அணி, 5 விக்கெட் இழப்பிற்கு, 205 ரன்களை குவித்தது. 20 ஓவர் முடிவில் 147 ரன்களை எடுத்து தோல்வி அடைந்தது பெங்களூர் அணி. (Photo Credits : PTI)
3/5

2018 ஆம் ஆண்டின் இறுதிப்போட்டியில், ஹைதராபாத் அணி 178 ரன்களை அடித்து முடித்தது. பின் களமிறங்கிய சென்னை அணி, இரண்டு விக்கெட் இழப்பிற்கு 18.3 ஓவர் முடிவில் 181 ரன்களை எடுத்து மூன்றாவது முறை ஐபிஎல் கோப்பையை வென்றது.(Photo Credits : PTI)
4/5

2021ல் முதலில் விளையாடிய சென்னை, 3 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்களை எடுத்தது. இலக்கை நோக்கி களம் கண்ட கேகேஆர், 20 ஓவர் முடிவில் 165 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வி பெற்றது. (Photo Credits : PTI)
5/5

கடந்தாண்டு குஜராத் - சென்னை மோதியது. முதலில் பேட் செய்த குஜராத் 214 ரன்களை குவித்தது. மழை பெய்ததன் காரணமாக, டக்வொர்த்-லூயிஸ் முறையில் 15 ஓவருக்கு கொடுக்கப்பட்ட டார்கெட்டை (171) பூர்த்தி செய்து ஐந்தாவது முறை கோப்பையை வென்றது சென்னை அணி. (Photo Credits : PTI)
Published at : 27 Apr 2024 01:35 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
இந்தியா
தமிழ்நாடு
பட்ஜெட் 2025
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion