மேலும் அறிய
IPL Auction 2025 : இது Homecoming நேரம்! சொந்த அணிகளுக்கே மீண்டும் திரும்பிய டாப் 5 வீரர்கள்
IPL Auction 2025: தங்கள் முன்னாள் ஐபிஎல் திரும்பிய டாப் ஐந்து வீரர்கள் யார் என்பதை இந்த தொகுப்பில் காண்போம்

ஐபிஎல் ஏலம் 2025
1/5

இந்திய அணியின் ஆஃப் ஸ்பின்னரான ரவிச்சந்திரன் அஷ்வினை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் 2025 ஏலத்தில் ரூ. 9.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. 2009 - 2015 ஆண்டு வரை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அஷ்வின் விளையாடி இருந்தார். அதன் பிறகு பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், அணிகளுக்காக விளையாடினார். இந்நிலையில் தற்போது 10 ஆண்டுகள் கழித்து சென்னை அணிக்காக அஸ்வின் களமிறங்கவுள்ளார்.
2/5

நியூசிலாந்து அணி வீரரான டிரெண்ட் போல்ட்டை மும்பை இந்தியன்ஸ் அணி 12.50 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. இதன் மூலம் 2021க்கு பிறகு மும்பை இந்தியன்ஸ் அணியில் மீண்டும் போல்ட் விளையாட உள்ளார்.
3/5

டெல்லி அணியில் 2012-ஆம் ஆண்டு தனது ஐபிஎல் பயணத்தை மேக்ஸ்வெல் தொடங்கினாலும், 2014 பஞ்சாப் அணியில் இணைந்த பிறகு தான் தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார், கடந்த 4 சீசனாக ஆர்சிபி அணிக்கு ஆடிய அவர் தற்போது மீண்டும் பஞ்சாப் கிங்ஸ் அணியில் இடம்பெற்றுள்ளார்.
4/5

இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் 2018 இல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அறிமுகமானர். 2020 வரை ராயல்ஸ் அணிக்காக விளையாடிய பின்பு 2021,2022 சீசன்களை காயத்தால் தவறவிட்டார். 2023-ல் மும்பை அணிக்காக ஓப்பந்தமாகி 5 போட்டிகளில் மட்டுமே விளையாடினார். அதன் பின்னர் காயம் காரணமாக அவர் 2024 தொடரில் விளையாடவில்லை. 2025 ஏலத்தில் ராஜஸ்தான் அணி 12.50 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.
5/5

இடது கை ஆட்டக்காரரான படிக்கல் தனது ஐபிஎல் வாழ்க்கையை 2020 இல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுடன் தொடங்கினார், அந்த சீசனில் 473 ரன்கள் குவித்த அவர் அடுத்த சீசனில் அதே ஃபார்மில் இருந்தார். அதன் பிறகு ராஜஸ்தான் அணிக்காக இரண்டு சீசன் ஆடிய அவரை 2024 ஆம் ஆண்டு லக்னோ அணியில் டிரேடிங் முறையில் இடம்பிடித்தார். இந்நிலையில் தற்போது மீண்டும் தனது சொந்த அணியான ஆர்சிபிகே மீண்டும் திரும்பியுள்ளார்.
Published at : 28 Nov 2024 03:41 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
வேலைவாய்ப்பு
அரசியல்
க்ரைம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion