மேலும் அறிய
PBKS vs KKR: கடைசி ஓவர் வெற்றியால் இன்னும் ப்ளே ஆஃப் ஆட்டத்தில் களம் காணும் பஞ்சாப் கிங்ஸ்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ்
1/6

நடப்பு ஐபிஎல் சீசனின் 45-வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் ஃபீல்டிங் தேர்வு செய்தது.
2/6

முதலில் பேட்டிங் களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு சுப்மன் கில், வெங்கடேஷ் ஐயர் ஓப்பனிங் களமிறங்கினர். பவுண்டரியோடு போட்டியை தொடங்கினார் வெங்கடேஷ் ஐயர். ஆனால், ஹர்ஷதீப் சிங் வீசிய 4வது ஓவரில் கில் க்ளீன் பவுல்டாகி வெளியேறினார்.
3/6

கில் அவுட்டானதை தொடர்ந்து, இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த வெங்கடேஷ் ஐயர், திரிபாதி இணை பார்ட்னர்ஷிப் அமைத்து அணியின் ஸ்கோரை உயர்த்தியது. பரபரப்பாக சென்ற இந்த ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில், கொல்கத்தா அணி 7 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தது.
4/6

அதனை அடுத்து, இலக்கை சேஸ் செய்ய களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு ராகுலும், மயாங்க் அகர்வாலும் சிறப்பான ஓப்பனிங் தந்தனர். 9வது ஓவரை இந்த இணை களத்தில் நின்றது. அணியின் ஸ்கோர் 70-ஐ எட்டியப்போது வருண் சக்ரவர்த்தி பந்துவீச்சில் மயாங்க் அவுட்டாகினார். இந்த போட்டியில் அரை சதம் கடந்த ராகுல், ஐபிஎல் தொடரில் தனது 26வது அரை சதத்தை நிறைவு செய்தார்.
5/6

டெத் ஓவர்களில் களமிறங்கினார் தமிழ்நாடு வீரர் ஷாரூக்கான். வந்தவுடன் அவர் அடித்த 1 சிக்சர், 1 பவுண்டரி பஞ்சாப் அணியின் ஸ்கோர் இலக்கை நெருங்கியது. பஞ்சாப் அணி வெற்றி பெற 4 ரன்கள் தேவை என்ற நிலையில், ஸ்ட்ரைக்கிங் எண்டில் இருந்த ஷாரூக்கான் சிக்ஸ் அடித்து பஞ்சாப் அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
6/6

நேற்றைய போட்டியில், பஞ்சாப் அணிக்காக ஷாரூக்கானும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக தினேஷ் கார்த்திக், வருண் சக்ரவர்த்தி போன்ற தமிழ்நாடு வீரர்கள் களமிறங்கி இருந்தனர்
Published at : 02 Oct 2021 06:59 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
க்ரைம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion