(Source: Matrize IANS)
சீனாவை மிஞ்சும் தமிழ்நாடு! தேடி வரும் ஆப்பிள், சாம்சங்! ரூ.30,000 கோடி முதலீடு! 60 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு!
எலக்ட்ரானிக்ஸ் உதிரிபாகங்கள் தயாரிப்பில் தமிழகம் முக்கிய மையமாக உருவெடுத்துள்ளதால் ஆப்பிள் மற்றும் சாம்சங் போன்ற நிறுவனங்கள் ஆர்வத்துடன் முதலீடு செய்து வருகின்றன.

தமிழ்நாட்டில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் உற்பத்தி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் மூலம் இந்திய அளவில் மட்டுமல்லாமல், உலக அளவில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை உற்பத்தி செய்வதில் முக்கிய இடமாக தமிழ்நாடு உருவெடுத்து வருகிறது.
தமிழ்நாட்டில் ஐபோன் உற்பத்தி
தமிழ்நாடு மின்னணு பொருட்களை உற்பத்தி செய்வதில் முன்னணி மாநிலமாக உருவெடுத்து வருகிறது. ஸ்மார்ட்போன்கள், வாஷிங் மெஷின், பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்களை அதிகளவு உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்து வருகிறது. மேலும் தமிழ்நாட்டில் ஆப்பிள் நிறுவனத்திற்காக ஃபாக்ஸ்கான் மற்றும் டாடா உள்ளிட்ட நிறுவனங்கள் ஐபோன்களை உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது.
30,000 கோடி ரூபாய் முதலீடு!
அதே போன்று மற்றொரு முன்னணி நிறுவனமான சாம்சங் தொழிற்சாலையும் தமிழ்நாட்டில் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிறுவனங்கள் மூலம் பல ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு, வேலைவாய்ப்பு கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டில் அதிக அளவு எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் மற்றும் பிற உதிரி பாகங்கள் உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில், கடந்த ஏப்ரல் மாதம் மின்னணு சாதன உற்பத்தி திட்டம் என்ற ஒரு புதிய திட்டத்தை அறிமுகம் செய்தது. இந்த திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் புதியதாக 60,000 வேலைவாய்ப்புகள் உருவாக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சுமார் 30,000 கோடி ரூபாய் முதலீடுகளை பெறுவதற்காக நடவடிக்கையில் தமிழக அரசு இறங்கியுள்ளது.
ஆப்பிள் செல்போன் உற்பத்தி சாதனை
தமிழ்நாட்டில் தற்போது ஆப்பிள் செல்போன் உற்பத்தி செய்வது சாதனை படைத்து வருகிறது. குறிப்பாக காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வரும், நிறுவனத்தில் இருந்து ஆப்பிளுக்கு தேவையான உதிரி பாகங்கள் மற்றும் செல்போன்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிறுவனம் உலக அளவிற்கு இந்த செல்போன்கள் ஏற்றுமதி செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. ஆப்பிள் நிறுவனத்திற்கு மிக முக்கிய இடமாக, தமிழகம் உருவெடுத்து வருகிறது. இதன் மூலம் அதிக அளவு பெண்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது. இதனால் ஆப்பிள் நிறுவனத்திற்கு உதிரிபாகம் தயாரிக்கும் நிறுவனங்கள் தமிழ்நாட்டின் நோக்கி படையெடுத்து வருகின்றன.
சீனாவிற்கு போட்டியாக உருவெடுக்கும் தமிழ்நாடு
ஆப்பிள் நிறுவனம் தனது ஐ-போன் உற்பத்தியை சீனாவில் செய்து வந்தது. அதன் உற்பத்தி தொழிற்சாலைகளை இந்தியாவிற்கு மாற்ற முடிவு எடுத்தது. ஆப்பிள் நிறுவனத்திற்கு இந்திய அளவில் தமிழ்நாடு மாறி இருப்பதாக வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
2025 ஆம் நிதியாண்டில் 14.65 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தமிழ்நாட்டில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது நாட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் 41.2% என் பது குறிப்பிடத்தக்கது. அடுத்த சில வருடங்களில் ஏற்றுமதி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சில வருடங்களில் 50 பில்லியன் டாலர் அளவிற்கு தமிழ் நாடு எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை ஏற்றுமதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.





















