மேலும் அறிய

Mayiladuthurai Power Shutdown (29.07.2025) : மயிலாடுதுறை மின் தடை: "நாளை உங்க ஏரியாவில் கரண்ட் இருக்குதாம்" முழு விவரம் இதோ!

Mayiladuthurai Power Shutdown 29.07.2025: மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை பல்வேறு இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.

Mayiladuthurai Power Shutdown: மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை (29.07.2025) மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பல இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது. 

மாதாந்திர மின் பராமரிப்பு பணி 

தமிழ்நாட்டில் மின்வாரியத்தின் சார்பில் மாதந்தோறும் ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இதன் காரணமாக, மாதத்தில் ஒருநாள் மின்தடை செய்யப்படுவது வாடிக்கை. மயிலாடுதுறை மாவட்டத்திலும் ஒவ்வொரு பகுதிகளிலும் மாதத்தில் ஒரு நாள் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட்டு வருகிறது.  மேலும் மின்சாரம் நிறுத்தப்படும்போது அதுபற்றி முந்தைய நாளன்று அறிவிக்கப்படும்.

மின்நிறுத்த நேரம் 

பராமரிப்பு பணிக்காக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சம்பந்தப்பட்ட பகுதியில் மின்சேவை நிறுத்தப்படும். வழக்கமாக காலை 9 அல்லது 10 மணியிலிருந்து மாலை 5 மணிவரை, அல்லது 9 காலை மணி முதல் மதியம் 2 மணிவரை மின்சார பராமரிப்பு பணிகளுக்கான மின்சேவை நிறுத்தம் செய்யப்படும். இதுபோன்ற பராமரிப்பு பணியின் பொழுது, சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம் மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம். 

குத்தாலம் மற்றும் கடலங்குடி துணை மின்நிலையம்

அந்த வகையில் மயிலாடுதுறை மின்கோட்டத்திற்கு உட்பட்ட குத்தாலம், கடலங்குடி, நீடூர் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளைய தினம் 29.09.2025 செவ்வாய்கிழமை மாதந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின்விநியோகம் பெரும் பகுதிகளில் நாளை காலை 9.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என குத்தாலம் உதவிசெயற்பொறியாளர் அருள்செல்வன் மற்றும் மயிலாடுதுறை நகர் உதவி செயற்பொறியாளர் கலியபெருமாள் ஆகியோர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளனர்.

மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்

குத்தாலம் டவுன், குத்தாலம் தேரடி, மாதிரிமங்கலம், சேத்திரபாலபுரம், அரையபுரம், தொழுதாலங்குடி, கீழவெளி, வாணாதிராஜபுரம், சோழம்பேட்டை, மாப்படுகை, கோழிகுத்தி, முருகமங்கலம், திருமணஞ்சேரி , ஆலங்குடி, நீடூர் , கங்கணபுத்தூர், கொற்கை , தாழஞ்சேரி, வடகரை, வில்லியநல்லூர், அறுவாபடி, மணலூர், ஆனந்திமங்கலம், மொழையூர், கொற்றவைநல்லூர், கொண்டல், பாலக்குடி, மல்லியகொல்லை, நடராஜபுரம், உட்கடை, மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.

மாறுதலுக்கு உட்பட்டது 

மேலும் அன்றையதினம் மின்நிறுத்தம் செய்வது மின்கட்டமைப்பு மற்றும் இதர காரணங்களைப் பொறுத்து கடைசி நேர மாறுதலுக்குட்பட்டலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. இதனை அடுத்து பொதுமக்கள் தங்கள் மின்சாரம் சார்ந்த தேவைகளை முன்னாக திட்டமிட்டு ஏற்படும் சிரமங்களை தவிர்த்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

யார் இந்த பவாரியா கும்பல். ? அதிமுக MLA கொடூர கொலை வழக்கில் இன்று தீர்ப்பு .!!
யார் இந்த பவாரியா கும்பல். ? அதிமுக MLA கொடூர கொலை வழக்கில் இன்று தீர்ப்பு .!!
UK Citizenship: குடும்பங்களுக்கு ஆப்படித்த இங்கிலாந்து.. கடுமையாகும் குடியுரிமை விதிகள் - சிக்கலில் இந்தியர்கள்
UK Citizenship: குடும்பங்களுக்கு ஆப்படித்த இங்கிலாந்து.. கடுமையாகும் குடியுரிமை விதிகள் - சிக்கலில் இந்தியர்கள்
Top 10 News Headlines: முதலமைச்சர் சூளுரை, காலநிலை மாநாட்டில் தீ விபத்து, இங்கி., திணறல்  - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: முதலமைச்சர் சூளுரை, காலநிலை மாநாட்டில் தீ விபத்து, இங்கி., திணறல் - 11 மணி வரை இன்று
TN Weather Update: சென்னையில் மழை, 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: சென்னையில் மழை, 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..தமிழக வானிலை அறிக்கை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kaliyammal TVK | தவெகவில் காளியம்மாள்? விஜய்யின் MASTERPLAN! ஆட்டத்தை ஆரம்பித்த தவெக
ஜோதிமணி ARREST! தரதரவென இழுத்த POLICE! போராட்டக் களத்தில் விஜயபாஸ்கர்
மாமுல் தராத ஆட்டோக்காரர் ! ஓட ஓட விரட்டிய கும்பல்.. பகீர் கிளப்பும் வீடியோ
’தைரியமா இருங்க’’உடைந்து அழுத தந்தை! ஆறுதல் கூறிய அன்பில் மகேஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
யார் இந்த பவாரியா கும்பல். ? அதிமுக MLA கொடூர கொலை வழக்கில் இன்று தீர்ப்பு .!!
யார் இந்த பவாரியா கும்பல். ? அதிமுக MLA கொடூர கொலை வழக்கில் இன்று தீர்ப்பு .!!
UK Citizenship: குடும்பங்களுக்கு ஆப்படித்த இங்கிலாந்து.. கடுமையாகும் குடியுரிமை விதிகள் - சிக்கலில் இந்தியர்கள்
UK Citizenship: குடும்பங்களுக்கு ஆப்படித்த இங்கிலாந்து.. கடுமையாகும் குடியுரிமை விதிகள் - சிக்கலில் இந்தியர்கள்
Top 10 News Headlines: முதலமைச்சர் சூளுரை, காலநிலை மாநாட்டில் தீ விபத்து, இங்கி., திணறல்  - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: முதலமைச்சர் சூளுரை, காலநிலை மாநாட்டில் தீ விபத்து, இங்கி., திணறல் - 11 மணி வரை இன்று
TN Weather Update: சென்னையில் மழை, 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: சென்னையில் மழை, 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..தமிழக வானிலை அறிக்கை
Chief Justics Of India: இன்றே கடைசி, ஓய்வு பெறுகிறார் கவாய்..! நாட்டின் 53வது தலைமை நீதிபதி யார்? பின்புலம், பணி அனுபவம்
Chief Justics Of India: இன்றே கடைசி, ஓய்வு பெறுகிறார் கவாய்..! நாட்டின் 53வது தலைமை நீதிபதி யார்? பின்புலம், பணி அனுபவம்
Gambhir Gill: கடைசியில் கில்லுக்கே ஆப்படித்த கம்பீர்.. ரெஸ்ட் வேணும்னு நெனச்சா, நீ ஒதுங்கிடு - காட்டமான அட்வைஸ்
Gambhir Gill: கடைசியில் கில்லுக்கே ஆப்படித்த கம்பீர்.. ரெஸ்ட் வேணும்னு நெனச்சா, நீ ஒதுங்கிடு - காட்டமான அட்வைஸ்
கை நிறைய கொட்டும் பணம்.! 10வது படித்திருந்தாலே போதும்- இளைஞர்களுக்கு அரசின் அசத்தல் சான்ஸ்
கை நிறைய கொட்டும் பணம்.! 10வது படித்திருந்தாலே போதும்- இளைஞர்களுக்கு அரசின் அசத்தல் சான்ஸ்
சென்னை விமான நிலையத்தில் புதிய மாற்றம்! மாற்றுத்திறனாளிகள், முதியோர்களுக்கு இனி 15 நிமிடம் இலவசம்!
சென்னை விமான நிலையத்தில் புதிய மாற்றம்! மாற்றுத்திறனாளிகள், முதியோர்களுக்கு இனி 15 நிமிடம் இலவசம்!
Embed widget