மேலும் அறிய

கோவையில் போலி மருத்துவக் கல்லூரி? மாணவர் வாழ்க்கை கேள்விக்குறி- வெளியான அதிர்ச்சித் தகவல்!

BAMS பாடப்பிரிவிற்கு நீட் கட்டாயம் என்ற விதியை மீறி நீட் தேர்வு எழுதாதவர்களை BAMS பாடப் பிரிவில் சேர்த்தியுள்ளதாக மாணவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

கோவையில் மருத்துவப் படிப்பிற்கான போலிக் கல்லூரி இயங்கி வருவதாகவும் அதனால், 300-க்கும் மேற்பட்ட மாணவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளதாகவும் குற்றம் சாட்டி உள்ள அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் தமிழ்நாடு மாநிலக் குழு, தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது. 

இதுகுறித்து அக்குழுவின் செயலாளரும் தலைவரும் கூறும்போது,

’’கோவை மாவட்டம், கிணத்துக்கடவு அருகே உள்ள மஹாராஜாஸ் மருத்துவ அறிவியல் கல்வி நிறுவனத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இங்கு Bsc. Cardiac, Diploma Nursing, BAMS, BNYS உள்ளிட்ட 8 பாடப் பிரிவுகள் உள்ளன.

நீட் கட்டாயம் இல்லையா?

இக்கல்லூரியில், கடந்த கல்வியாண்டில், எந்த பாடப்பிரிவிற்கும் இரண்டாம் பருவத் தேர்வுகள் நடைபெறவில்லை. முதல் பருவத் தேர்வில், மூன்று பாடங்களுக்கு தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 8 பாடங்களுக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன. மேலும், போதுமான வகுப்பறைகள், தகுதியான ஆசிரியர்கள், ஆய்வக வசதிகளோ இல்லை.  மேலும், BAMS பாடப்பிரிவிற்கு நீட் கட்டாயம் என்ற விதியை மீறி நீட் தேர்வு எழுதாதவர்களை BAMS பாடப் பிரிவில் சேர்த்தியுள்ளதாக மாணவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இக்கல்லூரி ராஜஸ்தானில் உள்ள Sunrise University-இன் கீழ் செயல்படுவதாக நிர்வாகத் தரப்பில் இருந்து தெரிவிக்கின்றனர். ஆனால், இப்பல்கலைக்கழகத்திற்கு பல்கலைக்கழக மானியக்குழுவில் இருந்து அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், இப்பல்கலைக்கழகமானது ராஜஸ்தான் மாநிலத்திற்கு வெளியில் எங்கும் கல்வி நிறுவனத்தை தொடங்கக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. மேலும், இக்கல்லூரி தமிழ்நாடு அரசின் அனுமதியையோ, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் அனுமதியையோ பெறவில்லை என மாணவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

உண்மையிலேயே இது ஒரு கல்லூரிதானா?

மேற்கண்டவை உள்ளிட்டு ஏராளமான பிரச்சினைகளை மாணவர்கள் சந்தித்து வருகின்றனர். இதனால், உண்மையிலேயே இது ஒரு கல்லூரிதானா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் துணையோடு 60க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் கடந்த 23.07.2025 அன்று கோவை மாவட்ட ஆட்சித் தலைவரிடம், மகாராஜா கல்லூரியின் அங்கீகாரம் தொடர்பாகவும், மாணவர்களின் கல்வியைப் பாதுகாக்கக் கோரியும் மனு அளித்தனர்.

மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் 23.07.2025 அன்று மாலை கிணத்துக்கடவு தாசில்தார், வருவாய் ஆய்வாளர், கிணத்துக்கடவு காவல் ஆய்வாளர் உள்ளிட்டோரும், 24.07.2025 அன்று காலை கோவை அரசு மருத்துவமனை முதல்வர் அவர்களும் கல்லூரியில் நேரடியாக விசாரணை மேற்கொண்டனர்.

இப்பிரச்சினைகளை மூடி மறைக்க கல்லூரி நிர்வாகம் பல்வேறு வழிகளில் செயல்பட்டு வருகிறது. மாணவர்களை ஏமாற்றி கல்லூரியில் சேர்த்தி, மோசடியாக பணம் பறிப்பதை மட்டுமே இந்நிறுவனம் நோக்கமாக கொண்டுள்ளதாக கருத வேண்டியுள்ளது.

கால தாமதமின்றி ஆய்வு

எனவே, இக்கல்லூரியின் நிலை குறித்த உண்மை நிலையை "காலதாமதமின்றி"  ஆய்வு செய்து நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், மாணவர்களின் கல்வியைப் பாதுகாக்கவும் உரிய நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும்’’.

இவ்வாறு அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் தமிழ்நாடு மாநிலக் குழு  வலியுறுத்தி உள்ளது.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
அரசு பள்ளிகளை அழிக்க சதி? தமிழ்நாட்டில் கல்வி நிதி ஒதுக்கீடு 25 ஆண்டுகளில் 1/3 பங்காக சரிவு
அரசு பள்ளிகளை அழிக்க சதி? தமிழ்நாட்டில் கல்வி நிதி ஒதுக்கீடு 25 ஆண்டுகளில் 1/3 பங்காக சரிவு
எளிய சோதனைகள் மூலம் தேவகோட்டை மாணவர்களுக்கு அறிவியல் ஆர்வம்!
எளிய சோதனைகள் மூலம் தேவகோட்டை மாணவர்களுக்கு அறிவியல் ஆர்வம்!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Kanimozhi: ”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
CM Vijay: காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
Cheapest CNG AT SUV: நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் சிஎன்ஜி எஸ்யுவி - விலை, மைலேஜ், அம்சங்கள், வசதிகள்
நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் சிஎன்ஜி எஸ்யுவி - விலை, மைலேஜ், அம்சங்கள், வசதிகள்
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Embed widget