விஜய்யின் நண்பர் சஞ்சீவ் துணை முதலமைச்சரா? அவரே தந்த அப்டேட்!
விஜய்யின் நெருங்கிய நண்பர் சஞ்சீ்வ் தன்னை துணை முதலமைச்சர் என்ற ரசிகருக்கு பதில் அளித்துள்ளார்.

தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரம் நடிகர் விஜய். கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட அவர் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை கடந்தாண்டு அறிமுகப்படுத்தினார். அவர் கட்சி தொடங்கிய பிறகு தமிழ்நாடு அரசியல் சூடுபிடித்தது. அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், விஜய்யின் தவெக தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.
துணை முதலமைச்சர் சஞ்சீவா?
நடிகர் விஜய்யின் நெருங்கிய நண்பர் சஞ்சீவ். இவரும் நடிகர் ஆவார். இவர் விஜய்யின் நண்பராக ஏராளமான படங்களில் நடித்துள்ளார். திருமதி செல்வம் சீரியல் நடித்ததன் மூலமாக அவர் தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமாக உள்ளார். நிகழ்ச்சித் தொகுப்பாளர், நடிகராக உள்ள அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் உடற்பயிற்சி செய்யும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இருந்தார்.

அதில் ரசிகர் ஒருவர், 2026 துணை முதலமைச்சர் எங்கள் அண்ணன் சின்னத்தளபதி அவர்கள் என்று பதிவிட்டிருந்தார். இந்த பதிவைப் பார்த்த சஞ்சீவ் வெங்கட் சகோதரா இல்லை.. தயவுசெய்து அப்படி சொல்ல வேண்டாம். நன்றி என்று பதிவிட்டிருந்தார். அதற்கு அந்த ரசிகரும் சரி என்று பதிவிட்டிருந்தார். தற்போது இந்த பதிவு வைரலாகி வருகிறது.
விஜய்யின் நெருங்கிய நண்பர்:
நடிகர் சஞ்சீவ் விஜய்யின் நெருங்கிய நண்பர் ஆவார். விஜய்யின் ஆரம்ப கால பல படங்களில் அவருடன் இணைந்து நண்பராக நடித்துள்ளார். பின்னர், சஞ்சீவ் சீரியல்களில் கவனம் செலுத்த தொடங்கினார். விஜய் அரசியல் களத்திற்குள் வந்ததற்கு அவருக்கு வாழ்த்து தெரிவித்த பலரில் சஞ்சீவும் முக்கியமானவர் ஆவார். ஆனால், சஞ்சீவ் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் எந்தவொரு பொறுப்பிலோ இல்லை. மேலும், அவர் தவெக-வின் அரசியல் நிகழ்விலும் இதுவரை பங்கேற்றது இல்லை.

நடிகர் சஞ்சீவ் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவரது உடல்மொழி சீரியல்களில் நடிகர் விஜய்யின் சாயலிலே சமீபகாலமாக இருந்து வருகிறது. இதன் காரணமாகவே அவரை பலரும் விமர்சித்து வருகின்றனர். ஆனாலும், அவர் திருமதி செல்வத்தில் இருந்தது போல இயல்பான நடிப்பை வெளிப்படுத்தவில்லை என்ற விமர்சனம் இருந்து வருகிறது. தேர்தல் சமயத்தில் விஜய்க்கு ஆதரவாக நண்பர் என்ற முறையில் சஞ்சீ்வ் பரப்புரையில் ஈடுபடுவாரா? என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.





















