தமிழ் சினிமாவின் முதல் பேய் படம்.. நடிப்பு சக்கரவர்த்தி துல்கர்.. காந்தா டீசர் எப்படி இருக்கு?
துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள காந்தா படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

துல்கர் சல்மான், சமுத்திரக்கனி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள காந்தா படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படம் 1950 களில் மெட்ராஸ் மாகாணத்தை அடிப்படையாக கொண்டு பீரியட் டிராமாவாக இந்தப் படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் நடிகை பாக்யஸ்ரீ முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
தந்தை மகனுக்கும் இடையே நடக்கும் ஈகோ அதன் பின்பு திரைப்படத்தில் வெள்ளி விழா நாயகனாக வலம் சந்திரமோகனாக துல்கர் சல்மான் நடித்திருக்கிறார். டீசரின் ஒபனிங் காட்சியே அந்தக்கால கருப்பு வெள்ளை சினிமாவுக்குள் கதை தொடங்குவது போன்ற ஆர்வத்தை தூண்டுகிறது. தமிழ் சினிமாவின் முதல் பேய் படம் சாந்தா என கூறும் வசனத்தோடு டீசர் தொடங்குகிறது. இதில், சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் துல்கர் சல்மானின் வளர்ச்சிக்கு சமுத்திரக்கனி முக்கிய பங்காற்றியிருப்பது தெரிய வருகிறது.
ஒரு காட்சியில் பாக்யஸ்ரீ பெரிய அய்யாவை ஏன் மதிக்க மாட்டேங்குறீங்க என கேட்க என்னை மாதிரி யாரும் அவரை உயர்ந்த மதிப்பிடத்தில் வைத்ததில்லை என துல்கர் சொல்கிறார். பிறகு சமுத்திரக்கனிக்கும் துல்கருக்கும் படப்பிடிப்பு தளத்தில் சண்டை நடப்பது போன்ற காட்சிகளும் இடம்பெறுகின்றன. அதன் பின்னர் சமுத்திரக்கனி நடிகை பாக்யஸ்ரீயிடம் நான் கதா ஆசிரியர். நான் சொல்றேன் இந்த படத்தோட நாயகன், நாயகி எல்லாம் நீதான் எனக்கூறுவதும், அடுத்த நொடியே படத்தின் காட்சிகளில் இருந்து அனைத்தையும் துல்கர் மாற்ற சொல்வது போன்ற காட்சிகள் இடம்பிடிக்கிறது. படத்தின் பெயர் சாந்தா இல்லை காந்தா என்றும் குறிப்பிடுவதோடு டீசர் முடிவடைகிறது.
காந்தா படத்தின் டீசரை காணும் போது ரசிகர்களுக்கு நிச்சயம் ஒரு ஃபீரியட் படம் பார்த்த அனுபவத்தை தரும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. துல்கர் சல்மானின் மீசை அந்த கால ஸ்டைலில் மெல்லியதாக உள்ளது. நடிப்பு சக்கரவர்த்தியாக துல்கர் மிளிர்கிறார். சமுத்திரக்கனி நடிப்பால் அசால்ட் செய்துவிடுகிறார். இப்படம் 3 கதாப்பாத்திரங்களை சுற்றி நடக்கும் கதை போன்று டீசரில் இடம்பிடித்திருக்கிறது. ஈகோவால் அழிந்த நாயகனை பற்றிய கதை போன்று இருக்கிறது. இருப்பினும் சாவித்திரி படத்தை பார்த்ததை போன்ற அனுபவமும் கிடைக்கும் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Celebrate the golden age of silver screens with us. Watch the first teaser of @kaanthamovie, out now on YouTube.
— Dulquer Salmaan (@dulQuer) July 28, 2025
Tamil - https://t.co/CeblGqiDFT
Telugu - https://t.co/gqUKMsBjTH
A @SpiritMediaIN and @DQsWayfarerFilm production.#Kaantha #DulquerSalmaan #RanaDaggubati… pic.twitter.com/3QEkvVjUzD





















