மேலும் அறிய
கடைசி வரை போராடிய பிரேசில்.. வெற்றி பெற்ற அர்ஜென்டினா!
அர்ஜென்டினா கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் நிகோலஸ் அர்ஜென்டினா அணிக்கு தனது முதல் கோலை பதிவு செய்து அணிக்கு வெற்றியை உறுதி செய்தார்.

அர்ஜென்டினா VS பிரேசில்
1/6

2026 கால்பந்து உலகக்கோப்பை தகுதி சுற்று ஆட்டத்தில் நடப்பு உலகக்கோப்பை சாம்பியன் அர்ஜென்டினா கால்பந்து அணியும் பலம் வாய்ந்த பிரேசில் கால்பந்து அணியும் மோதின.
2/6

இரு அணி வீரர்களும் கோல் அடிக்க கடுமையாக போராடினார்கள். ஆட்டத்தின் சீரான இடைவேளையில் இரு அணிகளும் மாறி மாறி தாக்கிக்கொண்டனர்
3/6

ஆட்டத்தின் நடுவர் ஆக்ரோஷமாக களத்தில் மற்ற வீரர்களை தாக்கும் வீரர்களுக்கு மஞ்சள் கார்ட் கொடுத்து எச்சரித்தார்.எனினும் முதல் பாதி ஆட்ட நேர முடிவில் இரு அணியும் கோல் எதுவும் அடிக்காமல் முடித்துக்கொண்டது.
4/6

இரண்டாவது பாதி ஆட்டத்தை தொடங்கிய சில நொடிகளில் ஆட்டம் விறுவிறுப்பான கட்டத்துக்கு சென்றது.முழு நேர ஆட்டத்தின் முடிவில் 1-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா கால்பந்து அணி வெற்றி பெற்றது.
5/6

அர்ஜென்டினா கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் நிகோலஸ் அர்ஜென்டினா அணிக்கு தனது முதல் கோலை பதிவு செய்து அணிக்கு வெற்றியை உறுதி செய்தார்.
6/6

இதற்கு முன்பு உருகுவே அணியுடன் அர்ஜென்டினா அணி தோற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
Published at : 23 Nov 2023 10:01 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
உலகம்
கிரிக்கெட்
ஆட்டோ
Advertisement
Advertisement