மேலும் அறிய

”அஜித்குமார் LOCKUP DEATH!வாய் திறங்க ஸ்டாலின்” கொந்தளித்த VIJAY! Sivagangai Custodial Death

சிவகங்கை காவல்துறை மரணத்தில் திமுக அரசை அராஜக அரசு என்றும், சிறப்பு விசாரணைக்குழு விசாரணை தேவை என்றும் தவெக தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.

சிவகங்கை மாவட்டத்தில் காவல்துறை விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை தமிழ்நாடு முழுவதும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இந்த விவகாரத்தில் அரசியல் கட்சிகள் அனைத்தும் திமுக-வை விமர்சித்த நிலையில், தவெக தலைவர் விஜய் மட்டும் வாய் திறக்காமலே இருந்தார். 

இந்த நிலையில், தவெக தலைவர் விஜய் இந்த விவகாரத்தில் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இதுதொடர்பாக, தனது எக்ஸ்  பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், திருப்புவனம் அஜித்குமார் காவல் மரண வழக்கில் உயர்நீதிமன்ற நேரடிக் கண்காணிப்பில், சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை நடத்தி விரைந்து தீர்ப்பு வழங்க வேண்டும். அஜித்குமார் காவல் மரண வழக்கில் மக்கள் மனதில் பல்வேறு கேள்விகள் எழுகின்றன.எந்த அளவிற்குக் கொடூரமாக, மனிதாபிமானம் அறவே அற்று, சாமானியருக்கு அநீதி இழைக்கும் அறமற்ற துறையாக, தமிழக உள்துறை அமைச்சர்  மு.க.ஸ்டாலின் அவர்களது நேரடிக் கண்காணிப்பில் இயங்கும் காவல் துறை நடந்துகொள்கிறது என்பதை இந்தச் சம்பவம், வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. 

தமிழக அரசு, முதலில் குற்றவாளிகளைக் காப்பாற்ற முயன்றது. தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் அழுத்தத்திற்குப் பிறகும், உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை தலையீட்டிற்குப் பிறகும் தான் காவல் துறை தனது நடவடிக்கைகளைத் தொடங்கியது என்பதை நாடறியும். 

இந்த ஆட்சியின் போது நடந்த பல்வேறு காவல் மரண வழக்குகளின் தற்போதைய நிலை என்ன, அவ்வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவர் மீதும் கொலை வழக்கு பதியப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதியை இந்த அரசு பெற்றுத் தந்துள்ளதா? கடந்த நான்கு ஆண்டுகளில் 24 பேர் காவல் நிலையத்தில் மரணம் அடைந்திருப்பதாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதியரசர்கள் அதிருப்தி தெரிவித்துள்ள நிலையில், அந்த 24 பேரின் மரணம் தொடர்பாக, வெள்ளை அறிக்கையைத் தமிழ்நாடு உள்துறை அமைச்சர் உடனடியாக வெளியிட வேண்டும். 

அஜித்குமார் காவல் மரண வழக்கில் காவல் துறையினரே கொலைக் குற்றவாளிகள் என்பதால், இதனைத் தமிழ்நாடு காவல் துறை விசாரித்தால், விசாரணை நியாயமாக நடைபெறாது. எனவே, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், உயர்நீதிமன்ற நேரடிக் கண்காணிப்பில் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு, விரைந்து தீர்ப்பு வழங்கப்பட்டது. அது போலவே இந்த வழக்கிலும் உயர்நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில் சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து, விரைந்து விசாரணை நடத்தி நீதியை நிலைநாட்ட வேண்டும். 

இத்தகைய கொடூர சம்பவம் இனி ஒருபோதும் நடைபெறாது என்று உள்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டு மக்களுக்கு உடனடியாக உறுதியும் உத்திரவாதமும் அளிக்க வேண்டும். இல்லையேல் பாமர மக்களை வதைக்கும் அதிகார துஷ்பிரயோக மு.க.ஸ்டாலின் தலைமையிலான இந்த அராஜக அரசுக்கு வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில், தமிழக வரலாற்றில் திமுக நினைத்துக்கூடப் பார்க்க முடியாத தோல்வியை மக்கள் பரிசாக அளிப்பார்கள் என்பதை எச்சரிக்கையாகத் தெரிவித்துக்கொள்கிறேன்.இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

விஜய் முதலமைச்சர் என்று குறிப்பிடாமல் உள்துறை அமைச்சர் என்றே மு.க.ஸ்டாலினை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

கணவரின் போனில் இருந்த நிர்வாண வீடியோக்கள்... 3 ஆண்டு திருமண வாழ்க்கை இப்படியா முடியணும்
கணவரின் போனில் இருந்த நிர்வாண வீடியோக்கள்... 3 ஆண்டு திருமண வாழ்க்கை இப்படியா முடியணும்
கோர்ட் வாசலில் சபதம்.. சொன்ன படியே தாய் கண்முன்னே அஜித் அலறல்.. அதிர வைக்கும் பின்னணி!
கோர்ட் வாசலில் சபதம்.. சொன்ன படியே தாய் கண்முன்னே அஜித் அலறல்.. அதிர வைக்கும் பின்னணி!
ஓயாமல் எந்நேரமும் டார்ச்சர் செய்த கல்யாணி.. கதறவிட்ட ஷபி.. காட்டிக் கொடுத்த டாட்டூ.. சினிமாவை மிஞ்சிய சம்பவம்!
ஓயாமல் எந்நேரமும் டார்ச்சர் செய்த கல்யாணி.. கதறவிட்ட ஷபி.. காட்டிக் கொடுத்த டாட்டூ.. சினிமாவை மிஞ்சிய சம்பவம்!
நள்ளிரவில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்! மயிலாடுதுறை அருகே திமுக பிரமுகர் கொடூரக் கொலை - போலீஸ் குவிப்பு!
நள்ளிரவில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்! மயிலாடுதுறை அருகே திமுக பிரமுகர் கொடூரக் கொலை - போலீஸ் குவிப்பு!

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Dharapuram By Election: என்னை கேவலமா பேசுறாங்க.. நான் எந்த தப்பும் பண்ணல.. விஜய் முன்னால் கண்ணீர் விட்ட சத்யபாமா!
Dharapuram By Election: என்னை கேவலமா பேசுறாங்க.. நான் எந்த தப்பும் பண்ணல.. விஜய் முன்னால் கண்ணீர் விட்ட சத்யபாமா!
TVK: கூட்டணி சேர்ந்து கத்தினாலும், கதறினாலும் ஒன்னும் நடக்காது.. திமுக, அதிமுகவை வெளுத்து வாங்கிய தவெக!
TVK: கூட்டணி சேர்ந்து கத்தினாலும், கதறினாலும் ஒன்னும் நடக்காது.. திமுக, அதிமுகவை வெளுத்து வாங்கிய தவெக!
TN Weather News: கனமழை பொளக்க போகுது..! இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - சென்னை? தமிழக வானிலை
கனமழை பொளக்க போகுது..! இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - சென்னை? தமிழக வானிலை
Dengue: தமிழ்நாட்டை அச்சுறுத்தும் டெங்கு.. தூங்குகிறதா சுகாதாரத்துறை? ஸ்பீட் ஏத்துங்க அருண்ராஜ் சார்!
Dengue: தமிழ்நாட்டை அச்சுறுத்தும் டெங்கு.. தூங்குகிறதா சுகாதாரத்துறை? ஸ்பீட் ஏத்துங்க அருண்ராஜ் சார்!
ஆசிய விளையாட்டு போட்டியில் ஒரே நாளில் 4 தங்க பதக்கங்கள்... புள்ளி பட்டியலில் வேகமாக முன்னேறும் இந்தியா...
ஆசிய விளையாட்டு போட்டியில் ஒரே நாளில் 4 தங்க பதக்கங்கள்... புள்ளி பட்டியலில் வேகமாக முன்னேறும் இந்தியா...
Bank Holidays: குவியும் பண்டிகைகள்..! அக்டோபர் மாதத்தில் 16 நாட்கள் வங்கிகள் இயங்காது - விடுமுறை பட்டியல் இதோ..!
குவியும் பண்டிகைகள்..! அக்டோபர் மாதத்தில் 16 நாட்கள் வங்கிகள் இயங்காது - விடுமுறை பட்டியல் இதோ..!
தவெக-விற்கு சவால் தரும் தாராபுரம்! 3 மாதங்களுக்கு முன்பு நடந்தது என்ன? என்ன செய்வார் விஜய்?
தவெக-விற்கு சவால் தரும் தாராபுரம்! 3 மாதங்களுக்கு முன்பு நடந்தது என்ன? என்ன செய்வார் விஜய்?
Skoda Price: இருக்குற 4 கார்களுக்கும் விலையையேற்றம்..! ஸ்கோடா கொடுத்த ஷாக் - எந்த மாடலுக்கு எவ்வளவு தெரியுமா?
இருக்குற 4 கார்களுக்கும் விலையையேற்றம்..! ஸ்கோடா கொடுத்த ஷாக் - எந்த மாடலுக்கு எவ்வளவு தெரியுமா?
Embed widget