மேலும் அறிய
சாதனை படைத்த கிறிஸ்டியானோ ரொனால்டோ.. 5-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற அல்நசர் அணி!
கால்பந்து உலகின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ இந்த போட்டியில் கோல் அடித்ததன் மூலம் சவுதி அரேபியா அல் நசர் அணிக்காக 50 கோல் அடித்துள்ளார்.

அல்நசர் vs அல் ஷபாப்
1/6

புகழ்பெற்ற சவுதி அரேபியா கிங்ஸ் கோப்பை கால் இறுதி போட்டியில் முன்னாள் இரவு பலம் வாய்ந்த அல் நசர் அணியும் அல் ஷபாப் அணியும் மோதின.
2/6

இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த இரு அணிகளும் மாறி மாறி பந்தை வலைக்குள் தள்ள கடுமையாக போராடின.
3/6

ஆட்ட நேர முடிவில் அல் நசர் அணி 5-2 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. இதில் அல்நசர் அணி சார்பாக எஸ்.போஃபானா 17', எஸ். மானே 28', ஏ. கரீப் 45+4', சி. ஆர். ரொனால்டோ 74' எம். மரான் 90+6' நிமிடங்களில் தங்களுடைய அணிக்காக கோலை பதிவு செய்து அணிக்கு வெற்றியை தேடித் தந்தார்கள்.
4/6

அல் ஷபாப் அணியின் சார்பாக கார்லோஸ் 24' பாபாரி 90' நிமிடங்களில் கோலை பதிவு செய்தனர்.
5/6

போர்ச்சுக்கல் தேசிய கால் பந்து அணியின் கேப்டனும் சர்வதேச கால்பந்து உலகின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ இந்த போட்டியில் கோல் அடித்ததன் மூலம் சவுதி அரேபியா அல் நசர் அணிக்காக 50 கோல் அடித்துள்ளார்.
6/6

அதுமட்டுமல்லாமல் அதிவேகமாக 50 கோல்களை அடித்த முதல் வீரர் என்ற சாதனையையும் கிறிஸ்டியானோ ரொனால்டோ பெற்றுள்ளார்.
Published at : 13 Dec 2023 04:47 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
அரசியல்
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion