Chennai Power Shutdown(Jul 10th): சென்னையில நாளைக்கு எங்கெங்க மின்சார துண்டிப்பு பண்ணப் போறாங்கன்னு தெரியுமா.? இத படிங்க
சென்னையில், பராமரிப்பு பணிகளுக்காக, நாளை(10.07.25) எங்கெங்கு மின்சார துண்டிப்பு செய்யப்பட உள்ளது என்பது தெரியுமா.? அந்த விவரங்களை பார்க்கலாம்.

சென்னையில் பல்வேறு இடங்களில் பரமரிப்பு பணிகளுக்காக நாளை(10.07.25) மின்சார விநியோகம் நிறுத்தப்பட உள்ளது. காலை 9 மணியிலிருந்து, மதியம் 2 மணி வரை கீழ்வரும் இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்படும் என என மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
அம்பத்தூர்
சென்னை அம்பத்தூர் பகுதியில் உள்ள கேலக்ஸி ரோடு, பெரியார் தெரு, சிவபாதம் தெரு ஆகிய இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.
திருமுல்லைவாயல்
அம்பேத்கர் நகர் மெயின் ரோடு, ஆட்டந்தாங்கல், பாலமுருகன் நகர், பிள்ளையார் கோயில் தெரு, கண்ணன் கோயில், ஆட்டந்தாங்கல் பாலம், கே.கே.நகர், சிவந்தி ஆதித்தனார் நகர், பெருமாள் நகர், வி.பி.ஆர் நகர், சக்தி நகர்.
அடையாறு
பெசன்ட் நகர் 6 முதல் 15-வது குறுக்குத் தெரு, 1-வது, 2-வது பிரதான சாலை, ஆர்பிஐ குடியிருப்புகள், கக்கன் காலனி, 4-வது, 16-வது, 29-வது குறுக்குத் தெரு, 2-வது, 3-வது, 7-வது அவென்யூ, டைகர் வர்தாச்சாரியார் சாலை நீட்டிப்பு.
சோழிங்கநல்லூர்
ராஜேஷ் நகர், அதிபுரீஸ்வரர் தெரு, அஷ்டலட்சுமி நகர், கோவலன் நகர், வேளச்சேரி மெயின் ரோடு, பெரியார் நகர், கவிமணி தெரு, ஓம்சக்தி நகர், வெங்கடேஸ்வரா நகர், தாமரை தெரு, சோமு நகர், தேவி கருவிழி நகர், யுனைடெட் காலனி, வேளச்சேரி மெயின் ரோடு, பெல் நகர் 4-வது, 5-வது கிராஸ் தெரு.
தாம்பரம்
மாடம்பாக்கம் மெயின் ரோடு, சுதர்சன் நகர், விஜிபி சரவணா நகர், ஸ்ரீதேவி நகர், அரவிந்த் நகர், கருமாரி அம்மன் நகர், அம்பிகா நகர், காயத்திரி கார்டன், பார்வதி நகர், சிவசக்தி நகர், சரவணா நகர் ஒரு பகுதி, சீனிவாச நகர், சுந்தர் அவென்யூ.
கோயம்பேடு மார்க்கெட்
ஜெயலட்சுமி நகர், தனலட்சுமி நகர், மூகாம்பிகை நகர், பாலகிருஷ்ணா நகர், ராஜீவ் காந்தி நகர், ஜானகிராம் காலனி, புவனேஸ்வரி நகர், ராமலிங்க நகர், தாமரை அவென்யூ.
மேற்கண்ட பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நிறைவடைந்த உடன், மதியம் 2 மணிக்குள் மின் விநியோகம் மீண்டும் வாங்கப்படும் என்று மின் வாரியம் தெரிவித்துள்ளது.





















