நயன்தாராவுக்கு மட்டும்தான் நோ...4 கோடிக்கு போட்ட செட்டை விஜய் படத்திற்காக விட்டுக்கொடுத்த தனுஷ்
நடிகர் விஜயின் ஜன நாயகன் படத்தின் படப்பிடிப்பிற்காக தான் செட் அமைத்த லொக்கேஷனை தனுஷ் விட்டுக்கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது

தனுஷ்
நடிகர் தனுஷ் மீது ஒரு தரப்பினர் தொடர்ச்சியாக பல விமர்சனங்களை வைத்து வருகிறார்கள். நானும் ரவுடிதான் படத்தின் காட்சிகளை என்.ஓ.சி வழங்காத தனுஷை விமர்சித்து நயன்தாரா அறிக்கை வெளியிட்டார். இதனைத் தொடர்ந்துச் சமீபத்தில் வெற்றிமாறன் சிம்பு படத்திற்கு தனுஷ் என்.ஓ.சி வழங்க 20 கோடி ரூபாய் பணம் கேட்டதாக தகவல்கள் பரவின. இதனைத் தொடர்ந்து இந்த படத்திற்கு தனுஷ் பணமே வாங்காமல் என்.ஓ.சி கொடுத்ததாக வெற்றிமாறன் வெளியிட்ட வீடியோவில் கூறியிருந்தார். அந்த வகையில் தற்போது விஜய் படத்திற்காக. தனுஷ் தனது செட்டை விட்டுக்கொடுத்த தகவல் பரவி வருகிறது.
விஜய் படத்திற்காக செட்டை விட்டுக்கொடுத்த தனுஷ்
நடிகர் விஜயின் கடைசி படமாக ஜன நாயகன் படம் உருவாகி வருகிறது. கே.வி.என் பிக்ச்சர்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது. மமிதா பைஜூ , பூஜா ஹெக்டே , பாபி தியோல் , கெளதம் மேனன் , பிரியாமனி ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்துள்ளார். 2026 ஆம் ஆண்டு ஜனவரி 9 ஆம் தேதி ஜன நாயகன் படம் திரையரங்கில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு சில மாதங்கள் முன்பு நிறைவுக்கு வந்தது. ஜன நாயகன் படத்தின் பாடல் படப்பிடிப்பிற்காக தனது படத்திற்கு 4.5 கோடியில் அமைத்த செட்டை விட்டுக்கொடுத்துள்ளார் தனுஷ். இந்த தகவல் தற்போது சமூக வலைதளத்தில் பரவலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது. சிம்பு , விஜய் என எல்லாருக்கும் தாராள மனதுடன் உதவி செய்யும் தனுஷ் நயன்தாராவுக்கு மட்டும்தான் என்.ஓ.சி தரவில்லை என்றால் தவறு அவர் பக்கம் இருந்திருக்க முடியாது என ரசிகர்கள் தனுஷூக்கு ஆதரவாக பேசி வருகிறார்கள்
#Dhanush shows class! 👏
— Santhosh Sekar (@Shandin1265) July 8, 2025
He gave up a ₹4.5Cr grand set meant for his film, allowing #Vijay's #Jananayagan team to use it for a song shoot instead.
A rare gesture of respect & brotherhood in Kollywood 💯🔥#Kollywood #TVKVijay #TamilCinema pic.twitter.com/EKAtYGxQR8
இட்லி கடை
தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான குபேரா திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றிபெற்றது. அடுத்தபடியாக தனுஷ் இயக்கி நடித்துள்ள இட்லி கடை திரைப்படம் அக்டோபர் 1 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. டான் பிக்ச்சர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது . ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். நித்யா மேனன் , ராஜ்கிரண் , அருண் விஜய் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ரெட் ஜெயன்ட் மூவீஸ் இந்த படத்தை விநியோகம் செய்கிறது.





















