மேலும் அறிய
எதிரெதிர் அணிகளில் மோதிக்கொள்ள போகும் ரொனால்டோ - மெஸ்ஸி.. போட்டியை காண ஆயத்தமான ரசிகர்கள்!
நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ சவுதி அரேபியாவில் அல் நாசர் அணிக்காகவும், லியோனல் மெஸ்ஸி அமெரிக்கா நாட்டின் இன்டர் மியாமி கிளப்பிற்காகவும் தற்போது விளையாடி வருகின்றனர்.

கிறிஸ்டியானோ ரொனால்டோ - லியோனல் மெஸ்ஸி
1/6

கால்பந்து உலகில் இந்த வீரர்கள் எதிர் அணியில் நேர் எதிராக மோதிக் கொள்ளும் போட்டியை உலக கால்பந்து ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்ப்பார்கள். அவர்கள் இருவரும் 21 நூற்றாண்டின் தலைசிறந்த கால்பந்து ஜாம்பவான்களான கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் மெஸ்ஸி.
2/6

சாம்பியன்ஸ் லீக் போட்டியில், கிறிஸ்டியானோ ரொனால்டோ ரியல் மேட்ரிட் அணிக்காகவும் , மற்றொரு கால்பந்து நட்சத்திரமான லியோனல் மெஸ்ஸி பார்சிலோனா கிளப் அணிக்காகவும் விளையாடினார்கள்.
3/6

ரியல் மேட்ரிக் மற்றும் பார்ஸிலோனா கிளப் ஆகிய அணிகளுக்கு இடையிலான போட்டி என்றாலே ரசிகர்களிடையே சலசலப்பு ஏற்படும். இந்த இரு அணிகளும் மோதிக் கொள்ளும் போட்டிகளுக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
4/6

தற்போது லியோனல் மெஸ்ஸியும் கிறிஸ்டியானோ ரொனால்டாவும் ஐரோப்பிய கால்பந்து உலகில் இருந்து வெளியேறிவிட்டனர்.
5/6

நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ சவுதி அரேபியாவில் அல் நாசர் அணிக்காகவும், லியோனல் மெஸ்ஸி அமெரிக்கா நாட்டின் இன்டர் மியாமி கிளப்பிற்காகவும் தற்போது விளையாடி வருகின்றனர்.
6/6

இந்த இரு அணிகளும் அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் சவுதி கால்பந்து தொடரில் மோதி கொள்ளப் போவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. எனினும் ரசிகர்கள் இவ்விரு அணிகளும் மோதிக் கொள்ளும் போட்டியை காண ஆயத்தமாகி வருகின்றனர்.
Published at : 24 Nov 2023 11:16 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
கிரிக்கெட்
பொழுதுபோக்கு
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion