மேலும் அறிய
Wheat Momos: ஆரோக்கியமான, சுவை மிகுந்த கோதுமை மோமோஸ் - ரெசிபி இதோ!
Wheat Momos: கோதுமை மாவை பயன்படுத்தி மோமோஸ் எப்படி செய்வதென்று பார்க்கலாம்.

கோதுமை மோமோஸ்
1/5

ஒரு கப் கோதுமை மாவு தேவையான அளவு உப்பு சேர்த்து கோதுமை மாவு பதத்தில் பிசைந்து கொள்ள வேண்டும்.கடைசியாக இதன் மீது எண்ணெய் தடவி ஒரு மூடி போட்டு அப்படியே வைத்து விட வேண்டும்.
2/5

கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து சூடானதும், அரை ஸ்பூன் சோம்பு, நறுக்கிய நான்கு பெரிய வெங்காயம், ஒரு சிறிய கேரட் துருவியது, முட்டைக்கோஸ் அரை கப் சேர்த்து வதக்கி விட வேண்டும். வெங்காயம் ஓரளவு வதங்கியதும், இதனுடன் அரை ஸ்பூன் இஞ்சி- பூண்டு விழுது சேர்த்து நறுக்கிய ஒரு பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி விட வேண்டும்.
3/5

கால் ஸ்பூன் மஞ்சள் தூள், அரை ஸ்பூன் தனி மிளகாய்த்தூள், ஒரு ஸ்பூன் தனியா தூள், கால் ஸ்பூன் கரம் மசாலா சேர்த்து மசாலாவிற்கு தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி விட வேண்டும். கடைசியாக நறுக்கிய கொத்தமல்லி தழை சேர்த்து கிளறி விட்டு இறக்கி கொள்ளலாம்
4/5

மாவில் இருந்து சப்பாத்திக்கு மாவு உருண்டை எடுப்பதை விட சற்று சிறிய உருண்டையாக எடுத்து சப்பாத்தி திரட்டுவது போல் திரட்டிக் கொள்ள வேண்டும். இதனுள் நாம் தயாரித்து வைத்துள்ள கலவையை உங்களுக்கு தேவையான அளவு வைத்து மோமோஸ் போன்று மடித்துக் கொள்ளவும்
5/5

இட்லி கொத்தில் அடுக்கி, இட்லி பாத்திரத்தில் வைத்து இட்லி அவிப்பது போல் அவித்து எடுத்துக் கொள்ளவும். 4-ல் இருந்து 5 நிமிடம் வேக வைத்து எடுத்தால் போதுமானது. இதை அப்படியே சாப்பிடலாம். குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும் என்றால் கடாயில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து குலோப் ஜாமுன் பொரிப்பது போல் இரண்டு பக்கமும் வேக வைத்து எடுத்தால் மொறு மொறுவென க்ரிஸ்பியாக இருக்கும்.
Published at : 16 Aug 2024 06:34 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
இந்தியா
அரசியல்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion