ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு நேர்ந்த கொடூரம்! குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிப்பு- நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
ஓடும் ரயிலில் கர்பிணி பெண்ணை பாலியல் தொல்லை கொடுத்து கொலை முயற்சி செய்த நபருக்கு வாழ்நாள் சிறை, 85000ஆயிரம் அபராதத்தொகை விதித்து திருப்பத்தூர் மாவட்ட நீதிபதி பரபரப்பு தீர்ப்பளித்துள்ளார்.

ஓடும் ரயிலில் கர்பிணி பெண்ணை பாலியல் தொல்லை கொடுத்து கொலை முயற்சி செய்த நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பத்தூர் மாவட்ட நீதிபதி பரபரப்பு தீர்ப்பளித்துள்ளார்.
கொலை முயற்சி:
ஆந்திரா மாநிலம் சித்தூரைச் சேர்நத்த ரேவதி 4- மாத கர்ப்பிணிப் பெண் இவர் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனி ஒன்றில் டெய்லராக பணியாற்றி வருகிறார்.
தனது சொந்த ஊரான சித்தூருக்கு செல்வதற்கு கடந்த இரண்டாம் மாதம் திருப்பூர் ரயில்வே நிலையத்தில் கோயம்புத்தூர் வழியாக திருப்பதி செல்லும் இன்டர் சிட்டி விரைவு ரயிலில் பயணம் செய்தார்
அப்போது அந்த ரயில் கேவி குப்பம் அருகே வந்து கொண்டிருந்தபோது கர்ப்பிணி பெண் கழிவறைக்கு சென்றார் அப்போது ஒருவர் தொடர் பாலியல் தொல்லை கொடுத்த நிலையில் பெண் கூச்சலிட்டதால் ஆத்திரமடைந்த அந்த நபர் கர்ப்பிணி பெண்ணை கீழே தள்ளிவிட்டு அங்கிருந்து இறங்கி சென்றார்.ரயிலில் இருந்து கீழே தள்ளி விட்டதில், கர்ப்பிணிக்கு கை கால் முறிவு ஏற்பட்டு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுருக்கிறது.
இச்சம்பவம் குறித்து ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் கர்ப்பிணியை மீட்ட ரயில்வே காவல்துறையினர் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்
கருவில் குழந்தை பலி:
அப்போது கர்பிணி பெண் வேலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி கருவில் இருந்த குழந்தை உயிரிழந்தது.கர்ப்பிணிப் பெண் ஹேமராஜின் புகைப் படத்தை அடையாளம் கண்டு கூறி இருக்கிறார்.இதனை அடுத்து ஹேமராஜை கேவி குப்பம் செல்லும் வழியில் ரயில்வே போலிசார் கைது செய்தனர். மேலும் இவர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
குற்றவாளி என நிருபிப்பு:
இதன் வழக்கு திருப்பத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு நடைப்பெற்று வந்த நிலையில் கடந்த 11.07.25அ ன்று ஹேமராஜ் குற்றவாளி என நிருபிக்கப்பட்டது. மாவட்ட நீதிபதி அறிவித்து திங்களன்று தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவித்து இருந்தார்.
ஆயுள் தண்டனை விதிப்பு:
பாலியல் வன்முறை மற்றும் நான்கு மாத கர்ப்பிணி வயிற்றில் இருந்த குழந்தையை கொலை செய்ததாக பல்வேறு பிரிவுகளின் கீழ்
ஹேமராஜை குற்றவாளி என அறிவித்து வாழ்நாள் முழுவதும் சிறை வழங்கியும் சிறை தண்டனை அனுபவிக்கும் போது சிறையில் எந்த ஒரு சலுகையும் கொடுக்கக் கூடாது.
மேலும் சிறையில் இருந்து ஒரு நாளைக்கு அரை மணி நேரம் மட்டுமே வெளியே வரவேண்டும்
அதை மாநில அரசு கண்காணிக்க வேண்டும் என்றும் மேலும் அபராத தொகையாக 85 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும் அதிரடியாக தீர்ப்பளித்தார்
மேலும் பாதிக்கப்பட்ட பெண் கர்ப்பிணி பெண்ணுக்கு மாநில அரசு 50 லட்சம் ரூபாயும் இந்திய ரயில்வேநிர்வாகம் 50 லட்சம் ரூபாயும் டெபாசிட் தொகையாக ஒரு மாதத்திற்குள் வழங்க வேண்டும்.
தொடர்ந்து வாழ்நாள் முழுவதும் அவருடைய மருத்துவ சிகிச்சைக்காக மாநில அரசு வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற உத்தரவிட வேண்டும் என்று அதிரடியான தீர்ப்பையும் அளித்தார்






















