Chennai Crime: மனைவியுடன் படம் பார்த்த புது மாப்பிள்ளை திடீர் மரணம் - திருமணமாகி ஒரு மாதம் தான்..
Chennai Crime: சென்னையில் மனைவியுடன் சேர்ந்து திரையரங்கில் பேய் படம் -பார்த்துக் கொண்டிருந்த புதுமாப்பிள்ளை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

Chennai Crime: திரையரங்கில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த நபருக்கு திருமணமாகி ஒரு மாதம் மட்டுமே ஆன தகவல் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுமாப்பிள்ளைக்கு மாரடைப்பு:
அண்மை காலமாக மாரடைப்பு என்பது இளம் பருவத்தினர் இடையே கூட அதிகரித்து வருகிறது. பள்ளி செல்லும் மாணவர்கள் தொடங்கி, உடற்பயிற்சி சென்று உடலை திடமாக வைத்திருப்பவர்கள் வரை பல்வேறு தரப்பினர் இடையே, மாரடைப்பால் நிகழும் மரணம் ஒருவித அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தான், சென்னையில் திருமணமாகி ஒரு மாதமே ஆன, இளைஞர் மனைவியுடன் சேர்ந்து திரையரங்கில் திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்த போது, திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் கேட்போர் மனதை ரனமாக்கியுள்ளது.
திருமணமாகி ஒரு மாதம் தான்..
மந்தைவெளி எஸ்.பி.,ஐ. குடியிருப்பில் வசித்து வந்த 29 வயதான மெல்வின், எழும்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் தான், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக பட்டினப்பாக்கத்தைச் சேர்ந்த காயத்ரி எனும் பெண்ணுடன் அவருக்கு திருமணம் நடந்துள்ளது. இதையடுத்து புதுமண தம்பதிகளுமான இருவரும், வார இறுதியான கடந்த ஞாயிறன்று பொழுதுபோக்க வெளியே வந்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் பயணித்த தம்பதி, பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள மெரினா மாலுக்கு சென்று சுற்றிப் பார்த்துள்ளனர். தொடர்ந்து, அங்குள்ள ஒரு திரையரங்கிலேயே படம் பார்க்கவும் டிக்கெட் வாங்கி உள்ளே நுழைந்துள்ளனர்.
மூச்சு விட சிரமப்பட்ட மெல்வின்:
ஜோடியாக சேர்ந்து படம் பார்த்துக் கொண்டிருந்தபோது, மெல்வினுக்கு திடீரென மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதை கண்ட காயத்ரியின் குரலை கேட்டதும், பட,ம் பார்க்க வந்த மற்றவர்களின் உதவியுடன் அவரது கணவர் அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள், மெல்வின் ஏற்கனவே மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனை கேட்டதும், காயத்ரி மனமுடைந்த் கதறி அழுத சம்பவம் மருத்துவமனையில் இருந்த அனைவரையும் கண் கலங்க செய்தது. அதோடு, அவர் அங்கேயா மயங்கி விழ காயத்ரியும் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்
போலீசார் விசாரணை:
இதனிடையே, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், மெல்வினின் உடலை பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, உண்மையிலேயே அவர் மாரடைப்பால் தான் இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காரணம் அண்மை காலமாக திருமணமான சில நாட்களிலேயே, கணவர்கள் திட்டமிட்டு மனைவியாலேயே கொல்லப்படுவது வடநாட்டில் அதிகரித்து வருகிறது. இதனால், சந்தேகத்தின் அடிப்படையில் இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.





















