மேலும் அறிய
கால்சியம் சத்து நிறைந்த புளிச்சக்கீரை ரைஸ் -இதோ ரெசிபி!
Gongura Pulihora: புளிச்சக்கீரை சாதம் எப்படி செய்வது என்பது பற்றி காணலாம்.

புளிச்சக்கீரை சாதம்
1/5

தேவையான பொருட்கள் நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் வேர்க்கடலை - 1 டீ ஸ்பூன் கடலைப்பருப்பு - 1 டீ ஸ்பூன் உளுத்தம் பருப்பு - 1 டீ ஸ்பூன் சீரகம் - 1/2 டீ ஸ்பூன் கடுகு - 1/2 டீ ஸ்பூன் சிவப்பு மிளகாய் - 5 பச்சை மிளகாய் - 5 பெருங்காய தூள் - 1/2 டீ ஸ்பூன் மஞ்சள் தூள் - 1/2 டீ ஸ்பூன் உப்பு - 1/2 டீ ஸ்பூன் கறிவேப்பிலை புளிச்சக்கீரை - 1 கட்டு புளி தண்ணீர் சாதம் நெய் - 1 டீ ஸ்பூன்..
2/5

ஒரு கடாயில் நல்லெண்ணெய், வேர்க்கடலை, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு சேர்த்து வறுக்கவும்.
3/5

அடுத்து சீரகம், கடுகு, சிவப்பு மிளகாய், பச்சை மிளகாய் சேர்த்து கலந்து விடவும்.
4/5

கடுகு பொரிந்ததும் பெருங்காய தூள், கறிவேப்பிலை சேர்த்து கலந்து விடவும். பிறகு மஞ்சள் தூள், உப்பு சேர்த்து மிதமான தீயில் வைத்து கலந்து விடவும்.
5/5

புளிச்சக்கீரையை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். அடுத்து புளி தண்ணீர் சேர்த்து கலந்து விட்டு, குறைந்த தீயில் 15 நிமிடம் வேகவிடவும். வேகவைத்த சாதத்துடன் புளித்த கீரை கலவையை சேர்த்து நன்கு கலக்கவும். இறுதியாக சிறிதளவு நெய் சேர்த்து சூடாக பரிமாறவும். சுவையான புளிச்சக்கீரை சாதம் தயார்.
Published at : 11 Oct 2024 01:44 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
தேர்தல் 2025
இந்தியா
தமிழ்நாடு
ஆன்மிகம்
Advertisement
Advertisement