மேலும் அறிய
ஓரணியில் தமிழ்நாடு ; திமுக உறுப்பினர் சேர்க்கையில் OTP பெறுவதற்கான தடை நீக்கக் கோரி மனு !
ஓரணியில் தமிழ்நாடு தி.மு.க., உறுப்பினர் சேர்க்கையின் போது OTP பெறுவதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி மனுத் தாக்கல் - நாளை விசாரணைக்கு வருகிறது.

ஓரணியில் தமிழ்நாடு
Source : whats app
தமிழ்நாடு தி.மு.க., உறுப்பினர் தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். ஓ.டி.பி., எண் பெறுவதற்கு விதிக்கப்பட்ட தடையை விலக்க வேண்டும் - நீதிமன்றத்தில் மனு தாக்கல்.
OTP பெறுவதற்கு மட்டும் தடை
தி.மு.க., நடத்திவரும் ‘ஓரணியில் தமிழ்நாடு‘ உறுப்பினர் சேர்க்கை முகாமிற்கு தடை கோரி அ.தி.மு.க., தொடர்ந்த வழக்கில், OTP பெறுவதற்கு மட்டும் தடை விதித்தது நீதிமன்றம். ஆனால் முகாமிற்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுத்த நிலையில், அ.தி.மு.க.,வை, குறிப்பாக எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து, திமுக சார்பில், அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்நிலையில் ஓரணியில் தமிழ்நாடு தி.மு.க., உறுப்பினர் சேர்க்கையின் போது OTP பெறுவதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தி.மு.க., வழக்கறிஞர் மனுத்தாக்கல்
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பேரவைத் தொகுதி ஓரணியில் தமிழ்நாடு தொகுதி பொறுப்பாளர் வழக்கறிஞர் வினோத், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில்...,” தி.மு.க., நடத்தி வரும் ‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்க்கையில் வாக்காளர்களின் ஆதார் நம்பர் மற்றும் தனிப்பட்ட தகவல்கள் சேகரிக்கப்படவில்லை. 6.1.2025ல் புதிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அது பொது ஆவணம். அதில் உள்ள வாக்காளர்களின் விபரங்களின் அடிப்படையில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
தகவல் உண்மையில்லை
போலி வாக்காளர் சேர்ப்பை தவிர்க்கவும், வாக்காளர்களின் கைபேசி எண்ணை உறுதிப்படுத்தவும் ஓ.டி.பி., நம்பர் அனுப்பப்படுகிறது. இந்த ஓ.டி.பி.,யும் திமுக தளத்திற்குள் நுழைவதற்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. மனுதாரர் எதிர்கட்சியை சேர்ந்தவர். தி.மு.க., மீது களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக எந்த ஆதாரமும் இல்லாமல் அரசியல் காரணங்களுக்காக இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். மனுதாரர் வசிக்கும் அதிகரையில் திமுகவினர் இன்னும் உறுப்பினர் சேர்க்கையை தொடங்கவில்லை. மனுவுடன் அவர் இணைத்துள்ள புகைப்படம் அதிகரையில் எடுக்கப்பட்டது இல்லை. ஆதார் கார்டு கேட்பதாக மனுவில் தி.மு.க., மீது குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரத்தையும் மனுதாரர் தாக்கல் செய்யவில்லை.
தனியுரிமை மீறல் மற்றும் தரவு மீறல் இல்லை.
ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை முகாம் 01.07.2025ல் தொடங்கப்பட்டது. இதற்கு தனி செயலி பயன்படுத்தப்படுகிறது. அதில் வாக்காளர்கள் அவர்களாக அளிக்கும் தகவல்களை தவிர வேறு எந்த விபரங்களும் பெறப்படுவதில்லை. எந்த வற்புறுத்தலும் இல்லாமல் வாக்காளர்களிடம் தகவல்கள் சேகரிக்கப்படுகிறது. யாரிடமும் தனிப்பட்ட விபரங்களை ஒருபோதும் கோருவதில்லை.
இதை ஏற்பவர்களுக்கு மட்டுமே ஓ.டி.பி., அனுப்பப்படுகிறது. டிஜிட்டல் தரவு பாதுகாப்பு மீறல் இருப்பதாக மனுதாரர் குற்றம்சாட்டியுள்ளார். இது வழக்கிற்கு தொடர்பு இல்லாதது. தேர்தல் ஆணையத்தின் தரவு அடிப்படையில் உறுப்பினர் சேர்க்கை நடைபெறுகிறது. இதில் தனியுரிமை மீறல் மற்றும் தரவு மீறல் இல்லை. எனவே ஓரணியில் தமிழ்நாடு தி.மு.க., உறுப்பினர் தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். ஓடிபி எண் பெறுவதற்கு விதிக்கப்பட்ட தடையை விலக்க வேண்டும்” எனவும் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விசாரணைக்கு வரவுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
பொழுதுபோக்கு
பொது அறிவு





















