WTC Final: வீணான பிசிசிஐயின் ராஜ தந்திரம்.. கையைவிரித்த ஐசிசி! இங்கிலாந்துக்கு அடித்த ஜாக்பாட்
அடுத்த மூன்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளின் இறுதிப் போட்டிகளை நடத்தும் பொறுப்பை ICC இங்கிலாந்துக்கு ஒப்படைத்துள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் அடுத்த 3 இறுதிப் போட்டிகளை இங்கிலாந்து நடத்தும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அறிவித்துள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்:
டெஸ்ட் போட்டிகளுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் நடைப்பெற்று வருகிறது. இது வரை மூன்று இறுதிப்போட்டிகளில் நடந்து முடிந்துள்ள நிலையில் மூன்று வெவ்வேறு அணிகள் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. அதன்படி 2021 நியூசிலாந்தும், 2023 ஆஸ்திரேலியாவும், 2025 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்றது.
இந்த நிலையில் அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை இந்தியாவில் நடத்தும் முயற்சியில் பிசிசிஐ இறங்கி இருந்தது.
கையைவிரித்த ஐசிசி:
ஆனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் அடுத்த 3 இறுதிப் போட்டிகளை இங்கிலாந்து நடத்தும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அறிவித்துள்ளது. இதுவரை நடைபெற்ற மூன்று WTC இறுதிப் போட்டிகளும் இங்கிலாந்தில் நடைபெற்றன, இப்போது 2027, 2029 மற்றும் 2031 இறுதிப் போட்டிகளும் இங்கிலாந்து மண்ணில் நடைபெறும். சில காலத்திற்கு முன்பு, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை நடத்த பிசிசிஐ விருப்பம் தெரிவித்திருந்தது, ஆனால் ஐசிசியின் இந்தப் புதிய அறிவிப்பால், குறைந்தபட்சம் 2031 வரை இந்தியாவில் இறுதிப்போட்டியை நடத்த முடியாது
அதிகார்வபூர்வ அறிவிப்பு:
"கடந்த மூன்று WTC இறுதிப் போட்டிகளை வெற்றிகரமாக நடத்தியதைக் கருத்தில் கொண்டு, 2027, 2029 மற்றும் 2031 ஆம் ஆண்டுகளில் நடைபெறவிருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியை நடத்தும் பொறுப்பு இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியத்திடம் (ECB) ஒப்படைக்கப்படும் என்பதை ICC உறுதிப்படுத்துகிறது" என்று ICC அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டது.
முன்னதாக, கிரிக்கெட் நிபுணர்களும் பல வீரர்களும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை ஆசிய ஆடுகளங்களில் நடத்த வேண்டும் என்றும், போட்டித்தன்மையை அதிகரிக்க வேண்டும் என்றும், அதில் பல்வேறு வகைகளைக் கொண்டுவர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தனர். 2027 இறுதிப் போட்டியை நடத்த பிசிசிஐ விருப்பம் தெரிவித்திருந்தது, ஆனால் இந்தியா இறுதிப் போட்டிக்கு வர முடியாவிட்டால், இறுதிப் போட்டியைக் காண வரும் ரசிகர்களின் எண்ணிக்கை குறையக்கூடும். இந்தியாவும் பாகிஸ்தானும் ஏற்கனவே ஒருவருக்கொருவர் எதிராக உள்ளன. பிசிசிஐயின் கோரிக்கை நிராகரிக்கப்படுவதற்கு இந்த அம்சங்களும் காரணமாக இருக்கலாம்.





















