TN Weather Update: ஜூலை 28 வரை வெளுக்கப்போகும் கனமழை; எந்தெந்த மாவட்டங்கள்ல தெரியுமா.?
Tamilnadu Weather Update: சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், வரும் 28-ம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. அது எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா.?

ஜூலை 28-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள் குறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும், சென்னையின் நிலை என்ன.? பார்க்கலாம்.
வானிலை ஆய்வு மைய அறிக்கை சொல்வது என்ன.?
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வடக்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல், ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாக தெரிவித்துள்ளது. மேலும், தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, தமிழ்நாட்டில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓரிரு இடங்களில் தரைக்காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் எனவும், நீலகிரி, தேனி, தென்காசி மற்றும் கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
நாளைய(23.07.25) நிலவரம்
தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலு, புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று 50 கிலோ மீட்டர் வேகம் வரை வீசக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
24, 25-ம் தேதிகளில் நிலவரம் என்ன.?
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை, காரைக்கால் பகுதிகளிலும், ஓரிரு இடங்களில் மிதமான மழையுடன், ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்ர் வேகத்தில் வீசக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், நீலகிரி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் கோவை, நெல்லை மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
26-ம் தேதி நிலவரம்
தமிழகத்தில் ஓரிரு இடங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், ஓரிரு இடங்களில் 50 கிலோ மீட்டர் வேகம் வரையிலான பலத்த தரைக்காற்று வீசக்கூடும்.
நீலகிரி, தேனி, தென்காசி மற்றும் கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
27, 28 தேதிகளில் நிலவரம் என்ன.?
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை, காரைக்கால் பகுதிகளிலும், மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
சென்னையின் வானிலை நிலவரம் என்ன.?
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 முதல் 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
நாளை(23.07.25) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 முதல் 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை என்ன.?
இன்று முதல் 26-ம் தேதி வரை, தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீச வாய்ப்புள்ளதால், மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.





















