School Leave: என்னது? இந்த மாசம் 3 நாள் லீவா? குஷியில் பள்ளி மாணவர்கள், அரசு ஊழியர்கள்! யார் யாருக்கு, எப்போ?
ஜூலை 23, 24 மற்றும் 28ஆம் தேதிகளில் பல்வேறு மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் அரசு விடுமுறையை எதிர்பார்த்துக் காத்திருப்பது வழக்கம். இந்த ஆண்டு மொஹரம் பண்டிகை, ஞாயிற்றுக்கிழமை அன்று வரும் நிலையில், எல்லோரும் சோகத்தில் ஆழ்ந்தனர். எனினும் வெவ்வேறு மாவட்டங்களில் 3 நாட்கள் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, ஜூலை 23, 24 மற்றும் 28ஆம் தேதிகளில் பல்வேறு மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
யார் யாருக்கு எப்போது?
அரியலூர் மாவட்டத்துக்கு ஜூலை 23ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சோழ மாமன்னர் முதலாம் ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ராஜேந்திர சோழனின் அசாத்திய திறன், மேலாண்மை நிர்வாகம், வரலாற்று சாதனைகளைக் கொண்டாடி நினைவுகூறும் பொருட்டு, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விழா எடுக்கப்பட்டு வருகிறது.
அதேபோல ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ஜூலை 23ஆம் தேதி இதற்காகவும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் பொருட்டு, ஜூலை 26ஆம் தேதி பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு முழு வேலை நாளாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஜூலை 24ஆம் தேதி விடுமுறை
அதேபோல கன்னியாகுமரியில் உள்ள பள்ளிகளுக்கு ஜூலை 24ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆடி அமாவாசையை ஒட்டி இந்த விடுப்பு வழங்கப்பட்டு உள்ளது. ஆடி அமாவாசையை முன்னிட்டு, கூடும் கூட்டத்தை சமாளிக்கும்பொருட்டு, உள்ளூர் நிர்வாகம் விடுமுறையை அறிவித்துள்ளது. இந்த விடுமுறை அரசு, தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தும்.
ஜூலை 28ஆம் தேதி விடுப்பு யாருக்கு?
ஜூலை 28ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆடிப்பூரம் கொண்டாடப்படுவதை ஒட்டி, விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஆகஸ்ட் 9ஆம் தேதி பள்ளிகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதேபோல விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப் பூர நட்சத்திரத்தின் தோரோட்டம் நடைபெற உள்ளது. இதனால் அங்கு உள்ளூர் விடுமுறை விடுக்கப்பட வாய்ப்பு உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.























