“என் பையனை காப்பாத்துங்க”ரஷ்யாவில் கைதான மாணவன் கதறி அழும் கடலூர் பெற்றோர் Russia Ukraine War
மருத்துவம் பயிலச் சென்ற கடலூர் மாணவர் பொய் வழக்கில் சிறையில் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் மாணவனை உக்ரைன் போருக்கு அனுப்ப உள்லதாகவும் காப்பாற்ற வேண்டு என்றும் கதறி அழுது கோரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் ஸ்ரீ முஷ்ணம் அடுத்துள்ள பாளையங்கோட்டை கீழ்ப்பாதியில் வசிப்பவர் சரவணனின் மகன் கிஷோர் இவர் கடந்த 2021ஆம் ஆண்டு ரஷ்யாவில் மருத்துவ படிப்பிற்காக சென்றுள்ளார். அப்பொழுது இவருடன் எடப்பாடியை சேர்ந்த நித்திஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் அறை எடுத்து தங்கி உள்ளனர். இதன் நடுவே மூன்றாம் ஆண்டு மருத்துவ படிப்பை முடித்து உள்ளனர்.
இந்நிலையில் படிப்பு செலவிற்காக நண்பர்களுடன் சேர்ந்து பகுதி நேர வேலை வாய்ப்பு தேடி வந்துள்ளனர். அப்பொழுது கொரியர் நிறுவனத்தில் வேலை இருப்பதை அறிந்த கிஷோர் மற்றும் நித்திஸ் இருவரும் வேலைக்கு சேர்ந்துள்ளனர். அப்பொழுது வாடிக்கையாளர்களிடம் பொருட்களை டெலிவரி செய்யும் போது அதில் ரஷ்ய நாட்டல் தடைசெய்யப்பட்ட பொருள் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த ரஷ்ய காவல்துறையினர் கடந்த 2023 ஆம் ஆண்டு மே மாதம் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதனை அடுத்து கடலூர் மாவட்டத்தில் உள்ள அவர்களது பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது அந்த தகவலின் அடிப்படையில் பெற்றோர்கள் அவர்களை முன்ஜாமியில் எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் இதனைக் குறித்து முதல் அமைச்சர், துறை சார்ந்த அதிகாரிகள், அமைச்சர்களை சந்தித்து இந்தியா அழைத்து வர ஏற்பாடு செய்து வந்தனர்.
திடீரென ரஷ்ய நாட்டு காவல் துறையினர் அவர்களை திடீரென உள் நாட்டில் நடைபெறும் உக்ரின் போருக்கு அழைத்துச் செல்ல வலுக்கட்டாயமாக அவர்களை தனி அறையில் பூட்டி சித்திரவதை செய்து அவர்களிடம் ஆவணத்தில் கையெழுத்து பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து அவர் உயிருக்கு பாதுகாப்பு வேண்டி ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் இந்த ஆடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதில் தனது உயிருக்கு ஆபத்தான சூழ்நிலை உள்ளது என்னை போருக்கு அனுப்பினால் உயிருக்கு பாதுகாப்பில்லை எப்படியாவது என்னை மீட்டு விடுங்கள் என அவர்களின் பெற்றோருக்கு ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் அவர்கள் உறவினருக்கு தெரிவிக்கும்போது எங்களது மகனை சிறையிலேயே வைத்து விடுங்கள் போருக்கு அனுப்ப வேண்டாம் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என கதறி அழுதனர்.
இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்திய தூதரகம் அதிகாரிகள் மற்றும் முதல்வர் அமைச்சர்கள் தலையிட்டு உடனடியாக எனது மகனை போருக்கு அனுப்பாமல் மீட்டு இந்தியா அழைத்து வர கோரிக்கை விடுத்துள்ளனர்.





















