Group 4 Answer Key: சொன்னதைச் செய்த டிஎன்பிஎஸ்சி! 10 நாளுக்குள் குரூப் 4 ஆன்சர் கீ வெளியீடு- ஆட்சேபிப்பது எப்படி?
TNPSC Group 4 Answer Key 2025: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு நடைபெற்று முடிந்து 10 நாட்களுக்கு முன்பாகவே, விடைக் குறிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.

அண்மையில் நடைபெற்று முடிந்த குரூப் 4 தேர்வுக்கான ஆன்சர் கீயை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. தேர்வு ஜூலை 12ஆம் தேதி நடைபெற்ற நிலையில், 10 நாட்களுக்கு முன்பாக, ஜூலை 21ஆம் தேதியே தற்காலிக விடைக் குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஆன்சர் கீ வெளியீடு
முன்னதாக தேர்வு நடைபெற்ற நாளன்று செய்தியாளர்களிடம் பேசிய டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர், இன்றில் இருந்து 15 நாட்களுக்கு உள்ளாக, ஆன்சர் கீ வெளியிடப்படும் என்று தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் 10 நாட்களுக்கு முன்பாக, விடைக் குறிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.
தேர்வர்களுக்கு https://www.tnpsc.gov.in/Tentative/Document/07_2025_GENEARAL_ENGLISH_GS.pdf என்ற இணைப்பில் பொது ஆங்கிலப் பாடத்துகான விடைக் குறிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளன.
https://www.tnpsc.gov.in/Tentative/Document/07_2025_GENEAL_TAMIL_GS.pdf என்ற இணைப்பில் பொது தமிழ் பாடத்துகான விடைக் குறிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளன.
விடைக் குறிப்புகளை ஆட்சேபிப்பது எப்படி?
https://www.tnpsc.gov.in/english/Answerkeychallenge.aspx?key=e1ee6bc7-f7e3-4038-a6aa-9b44ecee04fb என்ற இணைப்பை க்ளிக் செய்து, தற்காலிக விடைக் குறிப்பை ஆட்சேபனை செய்யலாம். எப்படி?
- முன்பதிவு எண், விண்ணப்ப எண் ஆகியவற்றை உள்ளீடு செய்து கொள்ளவும்.
- பிறந்த தேதி, பாடம் ஆகியவற்றையும் தனித்தனியாக உள்ளிட வேண்டும்.
- தொடர்ந்து கேள்வி எண்ணைத் தேர்வு செய்து உள்ளிட வேண்டும்.
அதேபோல கட்டாய தமிழ் மொழித் தகுதித் தேர்வு விடைக் குறிப்பையும் https://www.tnpsc.gov.in/english/Answerkeychallenge.aspx?key=b564b192-6455-4473-b60e-5b689edf0587 என்ற இணைப்பை க்ளிக் செய்து ஆட்சேபனை செய்யலாம்.
கூடுதல் தகவல்களுக்கு: https://www.tnpsc.gov.in/






















