Annamalai vs EPS | "2026 பாஜக ஆட்சி தான்"கூட்டணியில் மீண்டும் பூகம்பம் குட்டையை குழப்பும் அண்ணாமலை
தமிழகத்தில் கூட்டணி ஆட்சிதான்.அமித்ஷா கூறுவதே எனக்கு வேத சத்தியம். இதில் அதிமுக-வுக்கு மாற்றுக் கருத்து இருந்தால் அவர்கள் அமித்ஷாவுடன் பேசட்டும் என்று அண்ணாமலை பேசியுள்ளது தேசிய ஜன நாயக கூட்டணியில் மீண்டும் புயலைகிளப்பியுள்ளது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக இணைந்ததில் இருந்தே அதிமுகவிற்கும் பாஜகவிற்கும் ஏழாம் பொருத்தமாக இருக்கிறது. அமித்ஷா 2026-ல் தமிழ் நாட்டில் கூட்டணி ஆட்சிதான் என்று கூறி வருகிறார். மறுபுறம் தேசிய ஜனநாயக கூட்டணியின் தமிழக தலைவராக இருக்கும் எடப்படி பழனிசாமி கூட்டணி ஆட்சியெல்லம் இல்லை எங்கள் கூட்டணி தான் ஆட்சி அமைக்கும். அமித்ஷா இப்படி தான் சொன்னார் என்றும் நான் தான் இந்த கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் என்று கூறிவருகிறார்.
இச்சூழலில் தான் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பிரச்சரத்திலும் கூட்டணி வலுவாக இருக்கிறது எங்கள் கூட்டணியில் எந்த பிரச்சனையில் இல்லை என்று இபிஎஸ் கூறிவருகிறார். முன்னதாக பாஜக தலைவர்களான நயினார் நாகேந்திரன், எல்.முருகன். வானதி சீனிவாசன் உள்ளிட்டோர்களுடன் இணைந்து தான் கோவையில் இபிஎஸ் இந்த பிரச்சாரத்தை தொடங்கினார். அதேபோல், இபிஎஸ்-ன் பிரச்சாரத்தின் போது பாஜக தொண்டர்களும் திரளாக கலந்துகொள்கின்றனர்.
ஆனால், அண்ணாமலை மட்டும் தான் பிரச்சாரம் தொடங்கப்பட்ட போது
இபிஎஸை சந்திக்க போகவில்லை. தொடர்ந்து அவருடன் முரண்டு பிடித்து வருகிறார்.
இந்த நிலையில் தான் நேற்றைய செய்தியாளர்கள் சந்திப்பில் . தமிழகத்தில் கூட்டணி ஆட்சி நடைபெறும் என அமித்ஷா கூறுவதே எனக்கு வேத சத்தியம். அவர் பலமுறை மிகத் தெளிவாகவே சொல்லிய பிறகு, ஒரு தொண்டனாக நான் கருத்தை மாற்றிக் கொண்டு ‘கூட்டணி ஆட்சி இல்லை’ எனச் சொல்ல முடியாது. அப்படிச் சொன்னால், இந்தக் கட்சியில் தொண்டனாக இருக்க எனக்குத் தகுதி இல்லை என்று கூறியிருந்தர். இவரது இந்த பேச்சு தான் தற்போது விவாத பொருளாக மாறியுள்ளது.
கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது ஜெயலலிதா மற்றும் அண்ணா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் அண்ணாமலை பேச அதற்கு அதிமுகவினர் பதிலடி கொடுக்க இறுதியில் அந்த கூட்டணி முறிந்தது. அதனால் பாஜக மற்றும் அதிமுக இரண்டு கட்சிகளும் தனித்தனியாக போட்டியிட்டது. எங்கும் வெற்றி பெற முடியவில்லை.
அதனால் திமுகவிற்கு மீண்டும் சட்டமன்ற தேர்தலில் வாய்ப்பு கொடுத்து விடக்கூடாது என்று தேசிய ஜன நாயக கூட்டணியுடன் அதிமுக இணைந்துள்ளதாக இபிஎஸ் கூறிவரும் நிலையில் அண்ணாமலையின் இந்த பேச்சு தேசிய ஜன நாயக கூட்டணியில் மீண்டும் புயலைகிளப்பியுள்ளது.





















