மேலும் அறிய

மதுரை மீனாட்சி கல்லூரி மாணவிகளை கடித்த வெறிநாய்... மாநகராட்சி அலட்சியம் காரணமா?

நாய்கள் பிடிக்கப்பட்ட சில நிமிடங்களிலயே மீண்டும் நாய்கள் கல்லூரி வளாகத்திற்கு சுற்றிதிரிந்ததை பார்த்து அச்சத்தில் ஓடிய மாணவிகள்.

நாய்கள் நடமாட்டம் தொடர்பாக மாநகராட்சிக்கு பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என பொறுப்பு முதல்வர் பேட்டி.

நாய்கள் சுற்றி திரிவதாக புகார்

மதுரை மாநகர் கோரிப்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மீனாட்சி மகளிர் கலைக்கல்லூரியில், இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். மதுரை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களைச் சார்ந்த மாணவிகளும் பயின்று வருகின்றனர். இதனால் கல்லூரி வளாகத்திற்குள் மாணவிகள் விடுதியும் அமைந்துள்ளனர். இதனிடையே கல்லூரி வளாகத்திற்கும் ஏராளமான  நாய்கள் சுற்றி திரிவதாக கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் மாநகராட்சிக்கு மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் நடவடிக்கை எடுக்காத நிலையில் இன்று காலை கல்லூரி வளாகத்திற்குள் சுற்றித்திரிந்த வெறிநாய் ஒன்று திடீரென மாணவிகளை கடிக்க தொடங்கியுள்ளது.

கல்லூரி வளாகத்தில் உள்ள மாணவிகள் கடும் அச்சத்தில் உள்ளனர்

கல்லூரி வளாகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்த மாணவிகளை அடுத்தடுத்து வெறிநாய் கடித்ததில் 5 மாணவிகளுக்கு கை, கால்களில் நாய் கடித்து காயம் ஏற்பட்டது. இதையடுத்து, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மாணவிகளை நாய் கடித்தபோது ஆங்காங்கே நின்று கொண்டிருந்த மாணவிகள் அங்கும் இங்கும் ஓடியுள்ளனர். ஆனாலும் வெறி நாய் அடுத்தடுத்து மாணவிகளை கடித்ததன் காரணமாக கல்லூரி வளாகத்தில் உள்ள மாணவிகள் கடும் அச்சத்தில் உள்ளனர். இதனையடுத்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு அளித்த தகவலின் பெயரில், கல்லூரி வளாகத்திற்கு வந்த நாய்களை பிடிக்கும் வாகன மூலமாக  மாணவிகளை கடித்த நாய் உள்ளிட்ட 5 நாய்களை பிடித்துச் சென்றனர்.

மாணவிகள் அங்கும் இங்கும் பதற்றத்தில் ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது

கல்லூரி வளாகத்திற்கு இருந்த மாணவிகளை திடிரென விரட்டிய வெறி நாய் கை கால்கள் உள்ளிட்ட பகுதிகளில் கடுமையாக கடித்ததில் வலி தாங்க முடியாமல் மாணவிகள் கதறி அழுதனர். கல்லூரி வளாகத்தில் சுற்றித்திரிந்த நாய் மாணவிகளை கடித்த அதிர்ச்சி அடங்குவதற்குள், நாய்கள் பிடிக்கப்பட்ட சில நிமிடங்களிலே மீண்டும் ஏராளமான  நாய்கள் கல்லூரி வளாகத்திற்கு சுற்றி வந்தது. அதனை பார்த்த மாணவிகள் அங்கும், இங்கும் பதற்றத்தில் ஓடிய சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தியது.  மதுரை மீனாட்சி மகளிர் கல்லூரி பின்புறம் மதுரை மாநகராட்சிக்கு சொந்தமான தெருநாய்கள் கருத்தடை சிகிச்சை மையம் உள்ள நிலையில், அங்கு கொண்டு வரப்படக்கூடிய நாய்கள் தப்பியோடிவந்து அருகில் உள்ள மீனாட்சி கல்லூரி வளாகத்தில் அதிகளவிற்கு சுற்றி திரிவதால் மாணவிகள் அச்சத்தில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

கல்லூரி சார்பாக புகார்

இது குறித்து பேசிய பொறுப்பு முதல்வர் சந்திரா...,” தங்களது கல்லூரி வளாகத்தில் நாய்கள் சுற்றி திரிவது தொடர்பாக ஏற்கனவே மாநகராட்சிக்கு புகார் அளித்தோம். நடவடிக்கை எடுக்காத நிலையில், இன்று காலை கல்லூரிக்கு வந்த மாணவிகளை நாய் கடித்து காயம் ஏற்பட்ட நிலையில் ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம். பின்னர் மாநகராட்சி அதிகாரிகளுக்கு அளித்த தகவலையடுத்து மாநகராட்சி ஊழியர்கள் வருகை தந்து நாய்களை பிடித்து சென்றுள்ளனர். மேலும் மாணவிகளை பாதுகாப்பாக வைப்பதற்கான நடவடிக்கைகளை கல்லூரி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறோம்” என தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
ABP Premium

வீடியோ

Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
TVK Alliance Talks Team: வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
"அந்தரத்தில் தொங்கிய சொகுசு பேருந்து! விக்கிரவாண்டியில் நள்ளிரவில் பயங்கர விபத்து - பயணிகள் அதிர்ஷ்டவசமாக மீட்பு!"
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
Embed widget