Karthigai Deepam: பெட்டில் படுக்க அழைத்த ரேவதி.. கார்த்திக் அடுத்து செய்தது என்ன? சூடுபிடிக்கும் கார்த்திகை தீபம்
கார்த்திகை தீபம் சீரியலில் கார்த்திக் மீது காதல் வயப்பட்ட ரேவதி என்ன செய்கிறாள்? என்பதை இன்றைய எபிசோடில் காணலாம்.

தமிழில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் ஒளிபரப்பாகி வரும் சீரியல் கார்த்திகை தீபம். இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த சீரியலுக்கு என்று ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சந்திரகலா கார்த்திக் மீது பழி போட ரேவதி அவனுக்கு துணையாக நின்ற நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
பெட்டில் படுக்க அழைத்த ரேவதி:
அதாவது, கார்த்திக் ரேவதி ரூமுக்குள் இருக்,க ரேவதி கட்டிலிலும் கார்த்திக் தரையிலும் படுத்திருக்க திடீரென கார்த்திக் ஆஸ்திரேலியா எப்போ போறீங்க என்று கேட்கிறான். ரேவதி போக மனசில்லை என்பதை வெளியே சொல்லாமல் கொஞ்சம் டைம் ஆகும் என்று சொல்கிறாள்.
இதனை தொடர்ந்து ரேவதி கார்த்தியை பெட்டில் படுத்து கொள்ள சொல்ல கார்த்திக் வேண்டாம் என்று மறுத்து விடுகிறான். ரேவதி கார்த்தியை காதலுடன் பார்த்தபடி இருக்கிறாள்.
சாமுண்டீஸ்வரியை அவமானப்படுத்த திட்டம்:
அடுத்து சந்திரகலா துர்காவிடம் நடப்பதையெல்லாம் சொல்லி வீட்டை விட்டு ஓடி போய்ட்டு என்று மனதை மூளை சலவை செய்கிறாள். அடுத்த நாள் துர்கா வீட்டை விட்டு வெளியேற சந்திரகலா சிவனாண்டிக்கு போன் செய்து இதை வைத்து சாமுண்டீஸ்வரியை அவமானப்படுத்தலாம் என்று ஐடியா கொடுக்கிறாள்.
அடுத்து இருவரையும் சிவனாண்டி ஆட்கள் துரத்த துர்கா நவீன் கோவிலுக்குள் தஞ்சமடைகின்றனர். சிவனாண்டி கோவிலுக்குள் வைத்து கதவை அடைகிறான். எல்லாருக்கும் தகவல் சொல்லி ஒன்று கூட்டுகிறான்.
மேலும் சாமுண்டீஸ்வரையும் கோவிலுக்கு வர வைத்து கதவை திறக்க முயற்சிக்க, கார்த்திக் கோவிலுக்குள் புகுந்து துர்கா நவீனை தப்பிக்க வைக்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பதை இன்றைய எபிசோடில் காணலாம்.




















