பாக்கியலட்சுமி நடிகை சுசித்ராவின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா...
கடந்த 5 ஆண்டுகளாக விஜய் தொலைக்காட்சியில் பாக்கியலட்சுமி தொடரில் பாக்கியாவாக நடித்து வரும் நடிகை சுசித்ராவின் ஒரு நாள் சம்பளம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன

5 ஆண்டுகளை கடந்த பாக்கியலட்சுமி சீரியல்
விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாக்கியலட்சுமி. இதில் பாக்கியாவாக சுசித்ரா நடித்து லட்சக்கணக்கான இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்த நடிகையாக உருவாகியுள்ளார். தன்னுடைய சுய மரியாதைக்காக போராடுபவராகவும் , பெண்களுக்கு எதிரான கட்டமைப்புகளை கேள்வி கேட்பராகவும் , தனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொள்ளும் பெண்ணாக பாக்கியலட்சுமியின் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டிருந்தது பரவலான வரவேற்பைப் பெற்றது. இந்த கதாபாத்திரத்தில் சுசித்ரா மிக இயல்பாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.
பாக்கியலட்சுமி சுசித்ரா சம்பளம்
கடந்த 5 ஆண்டுகளாக இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்த தொடராக இருந்து வரும் பாக்கியலட்சுமி இன்னும் ஒரு சில வாரங்களில் முடிவுக்கு வர இருக்கிறது. இந்த தொடரின் இறுதிகட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ளன. படப்பிடிப்பு முடிந்த கையோடு நடிகை சுசித்ரா தனது வீடியோ ஒன்றை வெளியிட்டு தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார். மேலும் தான் அடுத்த சீரியலில் நடிக்க தொடங்கிவிட்டதாகவும் இந்த தொடருக்கு ரசிகர்கள் தங்கள் ஆதரவை கொடுக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
View this post on Instagram
பாக்கியலட்சுமி சுசித்ராவின் சம்பளம் குறித்த தகவல்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. இதன்படி ஒரு எபிசோடில் நடிப்பதற்கு சுசித்ரா ரூ 12 ஆயிரம் சம்பளமாக பெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாக்கியலட்சுமி தொடரில் இதுவரை 1444 எபிசோட்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத் தக்கது.




















