சாத்தான்குளம் வழக்கில் பரபரப்பு திருப்பம்... இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் அப்ரூவராக மாற விருப்பம், நீதி கிடைக்குமா?
அப்ரூவராக மாற விரும்புவதாக மதுரை சிறையில் இருக்கும் முன்னாள் சாத்தான்குளம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் மனுத்தாக்கல்.

நான் அப்ரூவராக மாறி அனைத்து காவலரும் செய்த குற்றங்களை சொல்ல விரும்புகிறேன். - சிறையில் இருந்து முன்னாள் இன்ஸ்பெக்டர் மனுத்தாக்கல்.
சாத்தான்குளம் ஜெயராஜ் - பென்னிக்ஸ் வழக்கு
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை மகனான ஜெயராஜ் - பென்னிக்ஸ் கடந்த 2020-ம் வருடம் ஜூன் 19-ஆம் தேதி போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் விசாரணையின்போது போலீசார் தாக்கியதில் உயிரிழந்தனர். இருவர் உயிரிழந்தது தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டின் கீழ் தொடரடப்பட்ட வழக்கில் சாத்தான்குளம் காவல்நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உள்ளிட்ட ஒன்பது பேரின் மீது சி.பி.ஐ தரப்பில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. ஜெயராஜ் - பென்னிக்ஸ் வழக்கு தமிழகத்தில் தற்போதும் முக்கிய வழக்காக பார்க்கப்பட்டு வருகிறது. இது தொடர்பான வழக்கில் பல நீதிபதிகள் மாறிவிட்டனர். இந்த வழக்கு எப்போது முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.





















