Vladimir Putin: ஹிட்லரை விட ஆபத்தானவர் ரஷ்ய பிரதமர் புதின் - போலந்து பிரதமர் எச்சரிக்கை!
Vladimir Putin:ரஷ்ய பிரதமர் விளாதிமிர் புதின், ஹிட்லரும் இல்லை; ஸ்டாலினும் இல்லை; துர்திஷ்டவசமாக, இவர் மிகவும் ஆபத்தானவராக இருக்கிறார் என போலந்து பிரதமர் மேட்யூஸ் மொராவெக்கி தெரிவித்துள்ளார்.
ரஷ்ய பிரதமர் விளாதிமிர் புதின்(Vladimir Putin) ஹிட்லர் (Adolf Hitler) மற்றும் ஜோசப் ஸ்டாலின் (Joseph Stalin) இருவரைவிடவும் மிகவும் ஆபத்தானவர் என போலந்து பிரதமர் மேட்யூஸ் மொராவெக்கி (Mateusz Morawiecki) விமர்சனம் செய்துள்ளார்.
ரஷ்ய பிரதமர் விளாதிமிர் புதினின் அழிவை நோக்கிய நடவடிக்கைகளை குறிப்பிட்டு பேசிய மேட்யூஸ் மொராவெக்கி, புதின் கோரமான சித்தாந்தத்தை (monstrous ideology) கொண்டவராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
பிரபல பத்திரிகையான டெலிகிராப்பில் “de-Putinisation” என்ற கட்டுரைக்காக பேசியுள்ள மேட்யூஸ் மொராவெக்கி புதினின் செயல்பாடுகள் மானுடத்திற்கு ஆபத்தாக இருப்பதாக எச்சரித்துள்ளார். புதினின் சித்தாந்தம், நோக்கம் மிகவும் ஆபத்தான ஆயுதம். ஊடகத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு அவருடைய புகழையும் நோக்கத்தையும் பரப்புவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
Vladimir Putin is 'more dangerous than Hitler or Stalin', Poland's prime minister warns https://t.co/xBeMHH0DfX
— Daily Mail Online (@MailOnline) May 11, 2022
மேட்யூஸ் மொராவெக்கி புதின் பற்றி கூறுகையில், “ ரஷ்ய பிரதமர் விளாதிமிர் புதின், ஹிட்லரும் இல்லை; ஸ்டாலினும் இல்லை; துர்திஷ்டவசமாக, இவர் மிகவும் ஆபத்தானவராக இருக்கிறார்.போலாந்து -போலிஷ் போர் நடந்து வெகுகாலம் ஆகிறது. அதில் போலாந்துதான் வென்றது. ஆனால், புதின் தற்போது இணையத்தை தாக்கி பொய்யான தகவல்களை பரப்பி வருகிறார்.” என்றார்.
மேலும், மேற்கத்திய நாடுகள் எதையும் கண்டுகொள்ளமல் இருந்ததுதான் புதின் இந்த அளவுக்கு வளர்ந்திருப்பதற்கு காரணம் என்றும், 20 ஆம் நூற்றாண்டில் கம்யூனிசம் மற்றும் நாசிசன் வளர்ந்திருப்பதாகவும் கூறியுள்ளார்.
ரஷ்யா கிவ் மீதான தாக்குதலை நிறுத்தவில்லை என்றால் நாம், நம் சுதந்திரத்தையும், இறையாண்மையையும் இழந்துவிடுவோம் என்றும் எச்சரித்துள்ளார்.
உக்ரைன் எல்லையில் அமைந்துள்ள போலாந்து ரஷ்யாவின் தாக்குதகுக்கு தொடக்கத்தில் இருந்தே தன் எதிர்ப்பு குரலை பதிவு செய்து வருகிறது. மேலும், உக்ரைன் நாட்டிற்கு தேவையான ஆதரவையும் அளித்து வருகிறது. உலக நாடுகள் உக்ரைன் நாட்டிற்கு உதவ முன்வரவேண்டும் என்று போலாந்து அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்