Indonesia : 34 பில்லியனில் 3 தலைநகரம்...மாஸ் காட்டும் இந்தோனேசியா! சில சுவாரஸ்யங்கள்..
அந்த நாட்டின் ஜனாதிபதி ஜோகோ விடோடோவின் லட்சியத் திட்டமாக இது கருதப்படுகிறது.
இந்தோனேசிய அரசு அதன் குடியரசுத் தலைவரின் கனவுத் திட்டத்தின்படி தனது புதிய தலைநகருக்கான கட்டுமானங்களை வருகின்ற ஆகஸ்ட் மாதத்தில் தொடங்க இருக்கிறது. இதற்கான முதலீடு 34 பில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது. அந்த நாட்டின் ஜனாதிபதி ஜோகோ விடோடோவின் லட்சியத் திட்டமாக இது கருதப்படுகிறது. இதன்படி இந்தோனேசியா தனது புதிய தலைநகரில் அரசாங்க கட்டிடங்களை ஆகஸ்ட் மாதம் தொடங்கும்.
View this post on Instagram
இதன்மூலம் அந்த நாட்டு ஜனாதிபதி ஜோகோ விடோடோ தனது 34 பில்லியன் டாலர் லட்சிய நகரத்தை புதிதாக கட்டமைக்கிறார். நீர் அமைப்புகள், சுகாதாரம் மற்றும் சுங்கச்சாவடிகள் உட்பட பல முன்மாதிரி வடிவமைப்புக்களுக்கு பெயர்போன தலைநகராக புதிய நகர் அறியப்படும் என பொதுப்பணித்துறை அமைச்சர் பாசுகி ஹடிமுல் ஜோனோ தெரிவித்துள்ளார். இதையடுத்து நுசந்தராவில் உள்கட்டமைப்பை அரசாங்கம் உருவாக்கத் தொடங்கும் என்றும் அமைச்சர் கூறினார். இதுகுறித்த விளக்கத்தை அமைச்சர் ஜனாதிபதிக்கு அளித்ததாகவும் தெரிய வருகிறது. இதன்படி மூன்று முக்கிய நகரங்களை புதிதாக நிர்மாணிக்க அந்த அரசு திட்டமிட்டுள்ளது.இதில் கிழக்கு கலிமந்தன், ஜாவா மற்றும் நுசந்தரா ஆகிய நகரங்கள் அடங்கும்.
இந்தோனேசியா தனது தலைநகரை ஜகார்த்தாவில் இருந்து கிழக்கு கலிமந்தனுக்கு மாற்ற திட்டமிட்டுள்ளது, மேலும் பொருளாதாரம் மற்றும் வளர்ச்சியை செல்வம் மிகுந்த தீவான ஜாவாவிற்கு வெளியே கொண்டு வர திட்டமிட்டுள்ளது. நுசன்தாரா சுற்றுச்சூழலுக்கு உகந்த நகரமாக திட்டமிடப்பட்டுள்ளது, இது முற்றிலும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலைப் பயன்படுத்தும், அதன் கட்டுமானம் உலகின் பழமையான மழைக்காடுகளில் ஒன்றை அச்சுறுத்தும் என்ற விமர்சனம் இருந்தபோதிலும் இதற்கான பணிகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
மேலும் இவை வெள்ள பாதிப்புகள் அண்டாத நகரமாக இருக்கும் என்றும் அந்த நாட்டு அரசு தெரிவித்துள்ளது.