7 Seater SUV: 7 சீட்டு.. மஹிந்திரா முதல் நிசான் வரை.. பெரிய குடும்பங்களுக்காக விற்பனைக்கு வரப்போகும் கார்கள் - எப்போது?
மஹிந்திரா, எம்ஜி உள்ளிட்ட முன்னணி கார் நிறுவனங்கள் 7 இருக்கைகள் கொண்ட எஸ்யூவி கார்களை இந்தாண்டு இறுதிக்குள் அறிமுகப்படுத்த உள்ளது.

இந்திய கார் சந்தை என்பது குடும்பங்களின் வசதிகளுக்கு ஏற்ப தங்களது வசதிகளையும் விரிவுபடுத்தி வருகிறது. அந்த வகையில் பெரிய குடும்பத்தினர் வசதியாக செல்வதற்கு ஏதுவாக 7 இருக்கைககள் கொண்ட எஸ்யூவி ரக கார்களை முன்னணி கார் நிறுவனங்கள் தயாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இந்தாண்டு இறுதிக்குள் இந்திய வாகனச் சந்தையில் வர உள்ள 7 இருக்கைககள் கொண்ட எந்தெந்த கார்கள் விற்பனைக்கு வர உள்ளது? என்பதை கீழே காணலாம்.
1. மஹிந்திரா XEV 7e:
இந்திய சந்தையின் முன்னணி நிறுவனமான மஹிந்திரா அறிமுகப்படுத்த உள்ள கார்தான் XEV 7e. நாட்டிலே மின்சார எஸ்யூவி ரக காரில் முதன்முதலாக 7 இருக்கைகள் கொண்ட காராக இந்த கார் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பாண்டின் இறுதியில் இந்த கார் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் இரண்டு பேட்டரி ஆப்ஷனுடன் விற்பனைக்கு வருகிறது. 59 கிலோ வாட் மற்றும் 79 கிலோ வாட் .
2. ரெனால்ட் போரியல்:
நீண்ட இடைவேளைக்கு பிறகு இந்திய சந்தையில் ரெனால்ட் போரியல் எஸ்யூவி காரை விற்பனைக்கு கொண்டு வருவது உறுதியாகியுள்ளது. டசியா பிக்ஸ்டெர், தி போரியல் மாடலை அடிப்படையாக கொண்டு இந்த 7 சீட் கார் வடிவமைக்கப்பட உள்ளது. 4 ஆயிரத்து 556 மில்லி மீட்டர் நீளம் கொண்டது இந்த வாகனம். 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜினும், 163 எச்பி மற்றும் 270 என்எம் வசதியும் கொண்டது இந்த கார்.
3. எம்ஜி மெஜிஸ்டர்:
இந்திய சாலைகளில் இன்று பெரிதளவு ஆதிக்கம் செலுத்தும் காராக எம்ஜி மாறியுள்ளது. ஜேஎஸ்டபுள்யூ எம்ஜி மோட்டார் இந்திய சந்தையில் மெஜிஸ்டர் எஸ்யூவி-யை அறிமுகப்படுத்த தயாராகி உள்ளது. குளோஸ்டரின் மேம்படுத்தப்பட்ட மாடலாக இந்த காரை வடிவமைக்கின்றனர். சர்வதேச சந்தைகளில் ஆதிக்கம் செலுத்தும் மேக்சஸ் டி90 எஸ்யூவி மாடலை போன்று இந்த காரும் உருவாகி வருகிறது. இந்த காரில் 2 லிட்டர் இரட்டை டர்போ டீசல் எஞ்ஜின், 216 பிஎச்பி மற்றும் 479 என்எம் வசதி இது கொண்டது. 8 கியர் இந்த காரில் உருவாக்கப்படுகிறது.
4. நியூ நிசான்:
டஸ்டர் 5 இருக்கைகள் எஸ்யூவி போன்ற தோற்றத்தில் இந்த கார் உருவாக்கப்பட உள்ளது. இந்த காரை அடுத்தாண்டு இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வர நிசான் ஆயத்தம் காட்டி வருகிறது. இந்த கார் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சனில் உருவாகிறது.
இந்திய சாலைகளுக்கு ஏற்ப பயனாளர்களின் பல்வேறு வசதிக்கு கார்களை இந்திய சந்தையில் முன்னணி கார்நிறுவனங்கள் இறக்குமதி செய்து வருகின்றனர்.





















