மேலும் அறிய

பிரபல ரவுடி ராக்கெட் ராஜா 30 வழக்கறிஞர் உடன் சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்

உச்ச நீதிமன்றம் சென்று வாரண்ட் புதுப்பிக்கும் ஆணை பெற்று சேலம் நீதிமன்றத்திற்கு பிரபல ரவுடி ராக்கெட் ராஜா வருகை.

திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த பிரபல ரவுடி ராக்கெட் ராஜா, இவர் பனங்காட்டுப்படை மக்கள் இயக்கம் என்ற கட்சியின் தலைவராகவும் இருந்து வருகிறார். இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் கடந்த 2002 ஆம் ஆண்டு சேலம் மத்திய சிறையில் பிலாலுதீன் என்ற தண்டனை கைதி அடைக்கப்பட்டிருந்தார். இலங்கையை சேர்ந்த பிலாலுதீன் என்பவர் போதை பொருட்கள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பின்னர் சேலம் மத்திய சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டார். இந்த நிலையில் குடல் இறக்கம் பிரச்சினை காரணமாக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் காவல்துறை பாதுகாப்பு அறையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், 10 பேர் கொண்ட கும்பல் பிலாலுதீன் என்பவரை கடத்தி சென்றனர். இந்த வழக்கு சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள மூன்றாவது கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இதில் சிறை தண்டனை கைதியை கடத்திய வழக்கில் ராக்கெட் ராஜா, அருள் உள்ளிட்ட 10 பேருக்கு தொடர்பு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து 10 பேர் மீதும் வழக்குபதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. 

பிரபல ரவுடி ராக்கெட் ராஜா 30 வழக்கறிஞர் உடன் சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்

இந்த நிலையில் சேலம் நீதிமன்றத்தில் வாய்தாவிற்கு ஆஜராகாமல் இருந்த நிலையில் நீதிமன்றம் சார்பாக கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் பிரபல ரவுடி ராக்கெட் ராஜா, அருள் உள்ளிட்டோர் உச்சநீதிமன்றம் சென்று பிடிவாரண்டை ரத்து செய்ய வேண்டும் என்று மனு தாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம் சேலம் நீதிமன்றத்தில் ஆஜராகி வாரண்டை புதுப்பித்துக் கொள்ளும்படி உத்தரவிட்டது. அதன்படி இன்றைய தினம் ராக்கெட் ராஜா, அருள் ஆகிய இருவரும் ஆஜராகினர். குறிப்பாக 30 க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்களுடன் நீதிமன்றத்திற்கு ராக்கெட் ராஜா ஆஜரானதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் பனங்காட்டு படை மக்கள் இயக்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் ஏராளமான நீதிமன்றத்தை சூழ்ந்து நின்றதால் பரபரப்பாக காணப்பட்டது. இதன் காரணமாக காவல்துறையினர் பாதுகாப்பு அதிகளவில் போடப்பட்டிருந்தது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Minister Ma.Su: தமிழ்நாட்டில் 1,200 மருத்துவ சீட்டுகள் பறிபோகுதா? அமைச்சர் தகவலால் அதிர்ச்சி...
தமிழ்நாட்டில் 1,200 மருத்துவ சீட்டுகள் பறிபோகுதா? அமைச்சர் தகவலால் அதிர்ச்சி...
TN Govt. New Rules: என்னது, இரவு நேரத்தில் ஹாரன் அடிக்கக் கூடாது, பட்டாசும் வெடிக்கக் கூடாதா.? அரசு புதிய உத்தரவு...
என்னது, இரவு நேரத்தில் ஹாரன் அடிக்கக் கூடாது, பட்டாசும் வெடிக்கக் கூடாதா.? அரசு புதிய உத்தரவு...
முரட்டு சத்தம்…! கதிகலங்க வைக்கும் கர்ஜனைகள்! – ஆக்ரோஷமாக மோதிக்கொள்ளும் 2 புலிகள்! வைரலாகும் வீடியோ
முரட்டு சத்தம்…! கதிகலங்க வைக்கும் கர்ஜனைகள்! – ஆக்ரோஷமாக மோதிக்கொள்ளும் 2 புலிகள்! வைரலாகும் வீடியோ
US Plane Crash: அச்சச்சோ..! நடுவானில் ஹெலிகாப்டருடன் மோதிய விமானம் - கீழே விழுந்து நொறுங்கும் வீடியோ, 64 உயிர்கள்?
US Plane Crash: அச்சச்சோ..! நடுவானில் ஹெலிகாப்டருடன் மோதிய விமானம் - கீழே விழுந்து நொறுங்கும் வீடியோ, 64 உயிர்கள்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay Aadhav Arjuna: 2026-க்கு பக்கா ஸ்கெட்ச்.. விஜயுடன் ஆதவ் அர்ஜூனா! ப்ளான் என்ன?TVK Vijay Order : ”பணம் இருந்தா பதவியா?” குமுறிய TVK நிர்வாகிகள்! விஜய் போட்ட Order!Edappadi Palanisamy: OPERATION செந்தில் பாலாஜி  ஆட்டத்தை ஆரம்பித்த EPS  ஆதவ் MASTERMINDUpanishad Ganga Series | உபநிஷத் கங்கா தொடர் மொழிபெயர்ப்பு நிகழ்ச்சி அண்ணாமலை பங்கேற்பு | Annamalai

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Ma.Su: தமிழ்நாட்டில் 1,200 மருத்துவ சீட்டுகள் பறிபோகுதா? அமைச்சர் தகவலால் அதிர்ச்சி...
தமிழ்நாட்டில் 1,200 மருத்துவ சீட்டுகள் பறிபோகுதா? அமைச்சர் தகவலால் அதிர்ச்சி...
TN Govt. New Rules: என்னது, இரவு நேரத்தில் ஹாரன் அடிக்கக் கூடாது, பட்டாசும் வெடிக்கக் கூடாதா.? அரசு புதிய உத்தரவு...
என்னது, இரவு நேரத்தில் ஹாரன் அடிக்கக் கூடாது, பட்டாசும் வெடிக்கக் கூடாதா.? அரசு புதிய உத்தரவு...
முரட்டு சத்தம்…! கதிகலங்க வைக்கும் கர்ஜனைகள்! – ஆக்ரோஷமாக மோதிக்கொள்ளும் 2 புலிகள்! வைரலாகும் வீடியோ
முரட்டு சத்தம்…! கதிகலங்க வைக்கும் கர்ஜனைகள்! – ஆக்ரோஷமாக மோதிக்கொள்ளும் 2 புலிகள்! வைரலாகும் வீடியோ
US Plane Crash: அச்சச்சோ..! நடுவானில் ஹெலிகாப்டருடன் மோதிய விமானம் - கீழே விழுந்து நொறுங்கும் வீடியோ, 64 உயிர்கள்?
US Plane Crash: அச்சச்சோ..! நடுவானில் ஹெலிகாப்டருடன் மோதிய விமானம் - கீழே விழுந்து நொறுங்கும் வீடியோ, 64 உயிர்கள்?
பாலியல் வன்கொடுமை! ஆசிட் வீச்சு! பக்கத்து வீட்டுக்காரனால் குழந்தைகள் கண்முன்னே தாய்க்கு நேர்ந்த கொடுமை!
பாலியல் வன்கொடுமை! ஆசிட் வீச்சு! பக்கத்து வீட்டுக்காரனால் குழந்தைகள் கண்முன்னே தாய்க்கு நேர்ந்த கொடுமை!
PM Modi: ”மோடி ஒன்னும் செய்ய மாட்டாரு” அடித்து சொல்லும் மக்கள் - கஷ்டத்தில் தவிக்கும் இந்தியர்கள்...
PM Modi: ”மோடி ஒன்னும் செய்ய மாட்டாரு” அடித்து சொல்லும் மக்கள் - கஷ்டத்தில் தவிக்கும் இந்தியர்கள்...
“எனக்கு ரொம்ப வருத்தம்; மய்யத்தில் நான் காம்சோர்” – கமல் கட்சியில் இருந்து விலகும் முக்கிய நடிகை!
“எனக்கு ரொம்ப வருத்தம்; மய்யத்தில் நான் காம்சோர்” – கமல் கட்சியில் இருந்து விலகும் முக்கிய நடிகை!
தாயுடன் காதல் கொண்ட நபர் – குடலை உருவிய சகோதரர்கள் – சினிமாபோல் அடுத்தடுத்து அரங்கேறிய சம்பவம்
தாயுடன் காதல் கொண்ட நபர் – குடலை உருவிய சகோதரர்கள் – சினிமாபோல் அடுத்தடுத்து அரங்கேறிய சம்பவம்
Embed widget