"திமுக ஒரு ஆண்டு வேதனையான சாதனையை மக்கள் நன்கு அறிவார்கள்" - ஜி.கே.வாசன்
திமுக மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை, முக்கிய வாக்குறுதிகள் பற்றி கட்சி கவலைப்படவில்லை
அதிமுகவில் நடைபெறும் சிறு சிறு பிரச்சினைகளுக்கு எல்லாம், அக்கட்சியே நல்ல தீர்வை ஏற்படுத்தும் என்று தாமாக தலைவர் ஜி.கே.வாசன் பேட்டி. ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்கும் குழு விரைந்து செயல்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
சேலத்தில் பாரதிய ஜனதா கட்சியின் துணைத் தலைவரும், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான கே.பி.ராமலிங்கம் இல்லத் திருமண விழாவிற்கு வருகை தந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் மணமக்களை வாழ்த்தினார். அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் பேசியது, குடியரசு தேர்தலுடைய அதிகாரப்பூர்வமான பாரதிய ஜனதா கட்சி கூட்டணி வேட்பாளரின் பெயர் முறையாக வருகின்ற நாட்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் மக்கள் விரும்புகின்றவர், அனைத்து தரப்பு மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் கூடிய நல்ல வேட்பாளரை மத்திய அரசு அறிவிக்கும் என்றாா். சட்டம் அனைவருக்கும் சமம், சட்டம் தனது கடமையை செய்கிறது அதன் அடிப்படையில்தான் இரண்டு மூன்று நாட்களில் அமலாக்கத்துறை தனது பணியை செய்து கொண்டிருக்கிறார்கள் என்றார். மேலும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரை தமிழகத்தில் பலமான இயக்கமாக தொண்டர்கள் பலத்தோடு குக்கிராமங்களிலும் வாக்குகளும், தொண்டர்களும் உள்ள இயக்கமாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. கடந்த தேர்தலின் போதும் குறைந்த வாக்குகளின் அடிப்படையில் வெற்றி வாய்ப்பை இழந்தார்கள். அதிமுகவில் நடைபெறும் சிறு சிறு பிரச்சினைகளுக்கு எல்லாம் அக்கட்சியே நல்ல தீர்வை ஏற்படுத்தும் மரியாதைக்குரிய தலைவர்களெல்லாம் பல்வேறு பொறுப்புகளில் செயல்பட்டவர்கள், தொண்டர்கள் மற்றும் மக்களுடைய எண்ணங்களை நன்கு அறிவார்கள் மூத்த நிர்வாகிகள் அனுபவம் வாய்ந்தவர்கள். திராவிட முன்னேற்ற கழகத்தின் ஒரு ஆண்டு வேதனையான சாதனையை மக்கள் நன்கு அறிவார்கள்.
மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை, முக்கிய வாக்குறுதிகள் பற்றி கட்சி கவலைப்படவில்லை மக்கள் ஏமாந்து நிலையிலுள்ள தான் உண்மை நிலை எனவும் கூறினார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பொருத்தவரை கவலைக்கிடமாக உள்ளது என்பதுதான் உண்மை நிலை, தமிழகத்தில் மகளிருக்கு பாதுகாப்பு கிடையாது, நகை பறிப்பு சம்பவங்கள் வழக்கமான ஒன்றாக மாறிக் கொண்டிருக்கிறது. நகரங்களில் துவங்கி கிராமங்கள் வரை, வீட்டை விட்டு வெளியே சென்றால் குறிவைத்து திருட கூடிய நிலை தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது. காவல்துறை பொருத்தவரை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் என்பதுதான் என் கருத்து உள்ளது. ஆன்லைன் சூதாட்டம் முடிவுக்கு வர வேண்டும் உடனடியாக அவசர சட்டத்தின் மூலம் நிறுத்தவேண்டும் என்பதுதான் தமாகாவின் கோரிக்கை. ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்கும் குழு விரைந்து செயல்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.