மேலும் அறிய

Minister Raja kannappan: தொடர்ந்து ஏற்பட்ட சர்ச்சை! சரிந்ததா ராஜகண்ணப்பனின் சாம்ராஜ்யம்?

எல்லாவற்றுக்கும் மேலாக அமைச்சர் ராஜ கண்ணப்பனுக்கும், திமுகவினருக்கும் இடையிலான உறவு மிகமிக மோசமாகவும் இடைவெளியோடும் இருந்தது என கூறப்படுகிறது

அமைச்சர் ராஜ கண்ணப்பன் வகித்துவந்த போக்குவரத்துத் துறை அமைச்சர் பொறுப்பு பறிக்கப்பட்டு, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை வழங்கப்பட்டுள்ளது. இதற்கான தகவல் ஆளுநர் மாளிகையில் இருந்து வெளியாகியுள்ளது. இதற்கு முதுகுளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் புகார் மட்டுமின்றி வேறு சில காரணங்களும் கூறப்படுகின்றன.

தொடர்ந்து அவர் மீது வைக்கப்பட்ட புகார்கள், மாவட்டத்தில் அவர் கடைபிடித்த கோஷ்டிபிளவு  உள்பட  ஏற்பட்ட சர்ச்சைகள் இவை அனைத்தும் சேர்ந்து தான் இன்று ராஜ கண்ணப்பனின் சாம்ராஜ்யம் சரிவைச் சந்தித்துள்ளது.இது ராஜ கண்ணப்பனின் ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. படுபயங்கர அதிகார பலத்துடன் வலம் வந்தவர் தற்போது மிகவும் அதிகார பலம் குறைந்த துறையின் அமைச்சராக நியமிக்கப்பட்டு இருப்பது அவர்களுடைய பார்வையில் இது அவருக்கு ஒரு மோசமான திருப்பமாகவே  பார்க்கப்படுகிறது.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன், முதுகுளத்தூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், போக்குவரத்துக்கழக அமைச்சருமான எஸ்.ராஜ கண்ணப்பன் தன்னை சாதியைச் சொல்லித் திட்டியதாக பகிரங்கமாக புகார் கூறியிருந்தார். இந்நிலையில் இன்று மாலையிலேயே, ராஜ கண்ணப்பனிடம் இருந்து போக்குவரத்துத் துறை பறிக்கப்பட்டுள்ளது. வெறுமனே வட்டார வளர்ச்சி அலுவலரின் புகார் மட்டும்தான் காரணம் என்றால், அவரது அமைச்சர் பதவியே பறிக்கப்பட்டிருக்கும். ஆனால், போக்குவரத்துத் துறை பறிக்கப்பட்டதற்கு காரணம், அந்தத் துறையில் அவர் செய்த தவறுகள்தான் காரணம் என்கிறார்கள் அவரின் எதிர் தரப்பு  திமுகவினர்.

Minister Raja kannappan: தொடர்ந்து ஏற்பட்ட சர்ச்சை! சரிந்ததா ராஜகண்ணப்பனின் சாம்ராஜ்யம்?

நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்தின்போது, அந்தப் போராட்டத்துக்கு திமுக ஆதரவளித்தாலும்கூட அரசு அலுவலகங்கள் வழக்கம்போல் இயங்கும் என்றும், அரசுப் பேருந்துகள் வழக்கம்போல ஓடும் என்றும் திமுக அரசு கூறியிருந்தது. அதையே போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜ கண்ணப்பனும் கூறியிருந்தார். ஆனால், நேற்று (28-ம் தேதி) தமிழகத்தில் 15 சதவீத பேருந்துகள்கூட ஓடவில்லை. இதனால் பள்ளி மாணவர்கள், வேலைக்குச் செல்லும் பெண்கள் உள்பட அனைவரும் பாதிக்கப்பட்டார்கள். இது திமுக அரசு மீது அதிருப்தியை ஏற்படுத்தியது. போக்குவரத்துக் கழகத்தில் டெண்டர், பணி நியமனம் தொடர்பான சில புகார்களும் வந்ததாகத் தெரிகிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக அமைச்சர் ராஜ கண்ணப்பனுக்கும், திமுகவினருக்கும் இடையிலான உறவு மிகமிக மோசமாகவும் இடைவெளியோடும் இருந்தது. அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட பிறகு கடந்த 2000 ஆம் ஆண்டில் சாதிக்காரர்களின் சப்போர்ட்டில் தொடங்கப்பட்ட "மக்கள் தமிழ் தேசம்" கட்சித்தலைவர் என்ற நினைவோடுதான் வலம் வந்தார். ராமநாதபுரம் மாவட்டத்தில் மாவட்ட செயலாளர் முத்துராமலிங்கத்துடன் தொடர் மோதல் போக்கை கடைபிடித்துவந்தார் ராஜ கண்ணப்பன். அண்டை மாவட்ட அமைச்சரும், அதே யாதவர் சமுதாயத்தைச் சேர்ந்தவருமான ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பனிடமும் இவருக்கு நல்ல உறவு இல்லை. கட்சியினருடன் எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ளாமல் தனி கோஷ்டியாக அவர் செயல்பட்டுவந்ததும், தன்னை ஒரு திமுககாரராகவே கருதாமல் தனி ஆவர்த்தனம் செய்ததுமே அவரது துறை பறிப்புக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

Minister Raja kannappan: தொடர்ந்து ஏற்பட்ட சர்ச்சை! சரிந்ததா ராஜகண்ணப்பனின் சாம்ராஜ்யம்?

ஏற்கெனவே, தன்னை சந்திக்க வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனை சாதாரண பிளாஸ்டிக் நாற்காலியில் அமரவைத்துவிட்டு, இவர் அரியணை போன்ற பெரிய சோபாவில் உட்கார்ந்திருந்தது சாதி ரீதியான சர்ச்சைக்கு வித்திட்டது. இந்தச் சூழலில், முதுகுளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரனை சாதியைச் சொல்லி திட்டியதாக எழுந்த புகாரும் சேர்ந்துகொண்டிருக்கிறது. எனவே, இந்தப் புகாருக்கும்கூட அவரது துறை பறிப்பில் பங்கிருக்கலாம் என்றும் கூறுகிறார்கள்.

மேலும்,  கடந்த சில நாட்களுக்கு முன்னர் போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பனின் கட்டுப்பாட்டில் உள்ள சென்னை துணை போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் நடந்த லஞ்ச ஒழிப்புத் துறை சோதனையில் ரூ.35 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. போக்குவரத்து துணை ஆணையர் நடராஜன், தனது துறையில் கண்காணிப்பாளர்களாக பதவி உயர்வு பெற தகுதியுடையவர்களிடம் 3 லட்சம் முதல் ரூ5 லட்சம் ரூபாய் வரை பணம் பெற்றதாக லஞ்சம் ஒழிப்புத் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் நடத்திய சோதனையில் தான் கட்டுக் கட்டாக லஞ்சப் பணம் சிக்கியது. ஆனால் இதுகுறித்து அமைச்சர் ராஜகண்ணப்பன் எதுவுமே கூறவில்லை என்ற காரணமாகவும் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

ராஜகண்ணப்பன் மீது தீபாவளி சமயத்திலேயே ஒரு புகார் வந்தது. போக்குவரத்து ஊழியர்களுக்கு வழங்கும் தீபாவளி ஸ்வீட்ஸ்களை ஆவின் நிறுவனத்தில் வாங்காமல் கமிஷனுக்காக வேறு ஒரு தனியார் நிறுவனத்திடம் வாங்க டெண்டர் கொடுக்க உள்ளதாக தகவல் வெளியானது. ஆரம்பத்திலேயே இந்த விவகாரம் ஊடகங்கள் மூலம் வெளியே வந்ததால் ஆவின் நிறுவனத்துக்கு டெண்டர் கொடுக்கப்பட்டது.

இதற்கெல்லாம் உச்சமாக மண்டல போக்குவரத்து மேலாளர் பொறுப்புகளுக்கு புதிதாக நியமிக்க வேண்டிய காலியிடங்களில் தன் சமுதாயத்தைச் சார்ந்தவர்களை அதிகம் நியமித்ததாகவும், அது முதல்வரின் கவனத்திற்கு எதிர்தரப்பினரால்  கொண்டு செல்லப்பட்டதும் அந்த நியமன ஆணை ரத்து செய்யப்பட்டு நிறுத்தப் பட்டு விட்டதாகவும் தகவல் வெளியாகியிருந்தது. இந்த சம்பவம் அவர், அவர் சார்ந்த சமுதாயத்தின் மீது இருக்கும் பற்றையும் பிற சமுதாயத்தின் மீது காட்டும் வெறுப்பையும் எடுத்துக்காட்டும் விதமாக அமைந்திருந்தது. இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. எது எப்படியோ தொடர்ந்து வந்த சர்ச்சை, அவர் மீது பாய்ந்த புகார்கள் என அனைத்தும் ஒன்று சேர்ந்து அவருடைய சாம்ராஜ்யத்தில் சரிவை ஏற்படுத்தி இருக்கிறது என கூறப்படுகிறது

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
646
Active
28426
Recovered
157
Deaths
Last Updated: Sat 12 July, 2025 at 10:55 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எப்படி? தேர்வர்கள் கருத்து- குறையும் கட் ஆஃப்?
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எப்படி? தேர்வர்கள் கருத்து- குறையும் கட் ஆஃப்?
இனி கடைசி இருக்கையே கிடையாது; ப வடிவ இருக்கை முறை- பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!
இனி கடைசி இருக்கையே கிடையாது; ப வடிவ இருக்கை முறை- பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!
முடியாது.. முடியாது .. அதிமுக தனித்துதான் ஆட்சி.. அமித்ஷா முடிவுக்கு நோ சொன்ன எடப்பாடி!
முடியாது.. முடியாது .. அதிமுக தனித்துதான் ஆட்சி.. அமித்ஷா முடிவுக்கு நோ சொன்ன எடப்பாடி!
குரூப் 4 வினாத்தாள் கசிவு சர்ச்சை ஏன்? குரூப் 2 அறிவிப்பு எப்போது? டிஎன்பிஎஸ்சி தலைவர் பேட்டி!
குரூப் 4 வினாத்தாள் கசிவு சர்ச்சை ஏன்? குரூப் 2 அறிவிப்பு எப்போது? டிஎன்பிஎஸ்சி தலைவர் பேட்டி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

800 கோடி.. BOAT CLUB-ல் 1 ஏக்கர்! மாறன் BROTHERS டீல்! ஸ்டாலின்,வீரமணி சம்பவம்
தைலாபுரத்தில் அன்புமணி ENTRY! 5 நிமிடத்தில் பேசி முடித்த ராமதாஸ்! மயிலாடுதுறையில் நடந்தது என்ன?
Nayanthara Divorce | விக்னேஷ் சிவனுடன் விவாகரத்தா?வெளியான பரபரப்பு தகவல் நயன்தாரா கொடுத்த ரியாக்‌ஷன்
Pothupani Thilagam | ’நீர்வளத்துறையில் முறைகேடு?’ துரைமுருகனுக்கே விபூதி அடித்த பொதுப்பணி திலகம்!
EPS with Amit Shah | களம் இறங்கும் அமித்ஷா உறுதி அளித்த நயினார்! இபிஎஸ் பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எப்படி? தேர்வர்கள் கருத்து- குறையும் கட் ஆஃப்?
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எப்படி? தேர்வர்கள் கருத்து- குறையும் கட் ஆஃப்?
இனி கடைசி இருக்கையே கிடையாது; ப வடிவ இருக்கை முறை- பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!
இனி கடைசி இருக்கையே கிடையாது; ப வடிவ இருக்கை முறை- பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!
முடியாது.. முடியாது .. அதிமுக தனித்துதான் ஆட்சி.. அமித்ஷா முடிவுக்கு நோ சொன்ன எடப்பாடி!
முடியாது.. முடியாது .. அதிமுக தனித்துதான் ஆட்சி.. அமித்ஷா முடிவுக்கு நோ சொன்ன எடப்பாடி!
குரூப் 4 வினாத்தாள் கசிவு சர்ச்சை ஏன்? குரூப் 2 அறிவிப்பு எப்போது? டிஎன்பிஎஸ்சி தலைவர் பேட்டி!
குரூப் 4 வினாத்தாள் கசிவு சர்ச்சை ஏன்? குரூப் 2 அறிவிப்பு எப்போது? டிஎன்பிஎஸ்சி தலைவர் பேட்டி!
TNPSC Group 4: குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது? காலியிடங்கள் இன்னும் அதிகரிக்கும்- சூப்பர் அப்டேட் தந்த டிஎன்பிஎஸ்சி தலைவர்!
TNPSC Group 4: குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது? காலியிடங்கள் இன்னும் அதிகரிக்கும்- சூப்பர் அப்டேட் தந்த டிஎன்பிஎஸ்சி தலைவர்!
விஜய்தான் வேண்டும்.. அடம்பிடிக்கும் அமித்ஷா.. என்ன செய்யப்போகிறார் எடப்பாடியார்?
விஜய்தான் வேண்டும்.. அடம்பிடிக்கும் அமித்ஷா.. என்ன செய்யப்போகிறார் எடப்பாடியார்?
TNPSC Group 4: தொடங்கிய டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு; தனியார் பேருந்தில் எடுத்துச்செல்லப்பட்ட வினாத்தாள்- கசிந்ததா? 
TNPSC Group 4: தொடங்கிய டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு; தனியார் பேருந்தில் எடுத்துச்செல்லப்பட்ட வினாத்தாள்- கசிந்ததா? 
Compact Suvs: காம்பேக்ட் எஸ்யுவிக்களுக்கு இனி பஞ்சமில்லை -  மாருதி Vs டாடா, பட்ஜெட்டா? வசதிகளா? கார் லிஸ்ட்
Compact Suvs: காம்பேக்ட் எஸ்யுவிக்களுக்கு இனி பஞ்சமில்லை - மாருதி Vs டாடா, பட்ஜெட்டா? வசதிகளா? கார் லிஸ்ட்
Embed widget