Parotta : வில்லனாக மாறிய பரோட்டா....11ஆம் வகுப்பு மாணவி உயிரிழந்த சோகம்...கேரளாவில் அதிர்ச்சி...
கேரளாவில் பரோட்டா சாப்பிட்டதால் 11ஆம் வகுப்பு மாணவி உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உணவு பிரியர்களில் அதிக பெருக்கு பிரியாணி மிகவும் பிடித்த உணவாக அமைந்துள்ளது. அதற்கு சமமாக அல்லது அடுத்தப்படியாக அனைவருக்கும் பிடித்த உணவாக அமைந்துள்ளது பரோட்டா தான். பரோட்டா சால்னா என்றவுடன் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களுக்கு அடுத்து கேரளாவில் பிரபலம். பரோட்டா சால்னா காம்பினேஷன் சும்மா நம்மை கட்டி இழுக்கும் வகையில் அமைந்திருக்கும். அப்படி இருக்கும் பட்சத்தில் சும்மாவே பரோட்டா என்றால் நம்முடைய இளைஞர்கள் ஓடி சென்று சாப்பிடுவார்கள். இந்த பரோட்டோ சிலருக்கு உடல் உபாதைகளை ஏற்படுத்தும். அதன்படி, கேரளாவில் அனைவரையும் அதிர்ச்சியூட்டும் வகையில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பரோட்டா சாப்பிட்டதால் மாணவி பலி
அதன்படி, கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள வாழத்தோப்பு என்ற பகுதியைச் சேர்ந்தவர் சிஜு கேப்ரியல். இவரின் மகள் நயன்மரியா(16). இவர் அதே பகுதியில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ் மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன் அந்த பகுதியில் உள்ள ஹோட்டலில் பரோட்டா சாப்பிட்டுள்ளார்.
இதனை சாப்பிட்ட மறுநாள் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதுமட்டுமின்றி, உடலில் சில மோசமான அறிகுறிகளும் ஏற்பட்டது. இதனை அறிந்த அவரது பெற்றோர்கள் அந்த மாணவியை இடுக்கி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் அவர் நேற்று மதியம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அலர்ஜி
மாணவி நயன்மரியாவுக்கு மைதா மற்றும் கோதுமையால் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் அலர்ஜி ஏற்படுவதாக அவரின் பெற்றோர்கள் கூறினர். சில நாட்களுக்கு இதுபோன்ற அலர்ஜிகள் ஏற்படாமல் இருந்தது. இதனால் நயன்மரியா மைதாவால் செய்யப்பட்ட உணவுப்பொருட்களை சாப்பிட தொடங்கினார். அப்படிதான் பரோட்டோ சாப்பிட்டுள்ளார். பரோட்ட சாப்பிட்ட இவருக்கு அலர்ஜி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்பு, சிகிச்சை பலனின்றி அவர் நேற்று மதியம் உயிரிழந்துள்ளார்.
மைதா
மைதாவால் செய்யப்பட்ட உணவுகள் ருசியான உணவாக இருந்தாலும் இதை உண்பதால் நமது உடலிற்கு பலவித தீமைகளை ஏற்படுத்துகின்றன. மைதாவால் செய்யப்படும் உணவுகள் அனைத்தும் நமது உடலில் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். இது நமது ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கிறது. மைதாவில் அதிக அளவிலான கிளைசெமிக் இன்டெஸ் கொண்டது.
இதனை நீங்கள் அதிகளவில் உட்கொண்டால் நீரிழிவு நோயினை ஏற்படுத்துவதோடு, செரிமான கோளாறு போன்ற பிரச்சனைகளும் ஏற்படும். மேலும், இருதய பிரச்சனை, அல்சர், மலச்சிக்கல் ஆகிய பிரச்சனைகளை நமது உடலில் இந்த மைதா ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரிப்பது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
தமிழ்நாட்டில் 8 இடங்களில் அகழாய்வு பணிகள்.. கோரிக்கை வைத்த தமிழ்நாடு.. அனுமதி வழங்கிய மத்திய அரசு..!