மேலும் அறிய

Nagaland Election: நாகாலாந்தில் பின்வாங்கிய காங்கிரஸ் வேட்பாளர்.. போட்டியின்றி வெற்றிபெற்ற பா.ஜ.க வேட்பாளர்..

நாகாலாந்தில் உள்ள அகுலுட்டோ சட்டமன்ற தொகுதியில் பா.ஜ.க வேட்பாளர் கசெட்டோ கிமினி போட்டியின்றி வெற்றி பெற்றதாக தேர்தல் அலுவலர் சஷாங்க் சேகர் அறிவித்துள்ளார்

நாகாலாந்தில் உள்ள அகுலுட்டோ சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் தனது மனுவை வாபஸ் பெற்றதால், பா.ஜ.க வேட்பாளர் கசெட்டோ கிமினி போட்டியின்றி வெற்றி பெற்றதாக தேர்தல் அலுவலர் சஷாங்க் சேகர் அறிவித்துள்ளார்.

நாகாலாந்து, மேகாலயா, திரிபுரா சட்டப்பேரவை தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையர் அறிவித்திருந்தார், அதன்படி, 60 தொகுதிகள் கொண்ட திரிபுரா மாநிலத்தில் பிப்ரவரி 16ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. 

மேகாலயா, நாகாலாந்து - பிப்ரவரி 27 

60 தொகுதிகளை கொண்ட மேகாலயா, நாகாலாந்து  சட்டப்பேரவைக்கு பிப்ரவரி 27ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

நாகாலாந்து சட்டசபையின் பதவிக்காலம் மார்ச் 12 ம் தேதியும், மேகாலயா சட்டசபையின் பதவிக்காலம் மார்ச் 15ம் தேதியும், திரிபுரா சட்டசபையின் பதவிக்காலம் மார்ச் 22ம் தேதியும் முடிவடைய இருக்கிறது. 

இதன் அடிப்படையில், நாகாலாந்து சட்டமன்றத்தின் 60 சட்டமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க, பிப்ரவரி 27-ஆம் தேதி வாக்குப்பதிவும், மார்ச் 2-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற இருக்கிறது. அதேபோல் மேகாலயாவிலும், திரிபுராவிலும் தேர்தல் நடைபெறுகிறது.

ஈரோடு கிழக்கில் பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல்:

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா மறைந்ததையடுத்து இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வாக்கு எண்ணிக்கை மார்ச் 2ம் தேதி நடைபெற இருக்கிறது. 

மார்ச் 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை:

3 மாநில தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்களில் பதிவாகும் வாக்குகள் மார்ச் 2ம் தேதி எண்ணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் வகையில், நடப்பாண்டில் மட்டும் 9 மாநிலங்களில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. குறிப்பிட்ட தேர்தலில் கிடைக்கும் முடிவுகள் ஆளும் பாஜக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் மீதான, மற்ற மாநில மக்களின் பார்வையை மாற்றும் என்பதால், இந்த தேர்தல் முடிவுகள் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

60 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட நாகாலாந்தில், முதலமைச்சர்  நெய்பியு ரியோ தலைமையில் நாகாலாந்து ஜனநாயக மக்கள் முன்னணி கட்சி ஆட்சி செய்து வருகிறது. நாகாலாந்தில் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க வினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுஒபட்டு வருகின்றனர். வேட்ப மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், நேற்று மனுக்களை வாபஸ் பெற கடைசி தினம்.

இந்நிலையில் நாகாலாந்தில் உள்ள அகுலுட்டோ சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்திருந்த கெகாஷே சுமி, தனது மனுவை நேற்று வாபஸ் பெற்றார். இதன் மூலம் அந்த தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்த கசெட்டோ கிமினி போட்டியின்றி வெற்றி பெற்றதாக தேர்தல் அலுவலர் சஷாங்க் சேகர் அறிவித்துள்ளார். கசெட்டோ கிமினி இந்த தேர்தலில் தனது பதவியை தக்க வைத்தும் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்தடுத்து நடைபெற உள்ள தேர்தல்

கர்நாடகா, மத்தியபிரதேசம், ராஜஸ்தான்,மிசோரம், சத்தீஷ்கார் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களிலும் நடப்பாண்டில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

SIR Electroral: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
SIR Electroral: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
Robotics Labs: அரசுப் பள்ளிகளில் ரோபோட்டிக்ஸ் புரட்சி; மாணவர்கள் எதிர்காலத்தை வடிவமைக்கும் புதிய லேப்கள் தொடக்கம்!
Robotics Labs: அரசுப் பள்ளிகளில் ரோபோட்டிக்ஸ் புரட்சி; மாணவர்கள் எதிர்காலத்தை வடிவமைக்கும் புதிய லேப்கள் தொடக்கம்!
தமிழ் கலை ஆசிரியர்கள் பணி: ரூ.1.25 லட்சம் ஊதியம்- என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
தமிழ் கலை ஆசிரியர்கள் பணி: ரூ.1.25 லட்சம் ஊதியம்- என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
ABP Premium

வீடியோ

Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்
TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SIR Electroral: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
SIR Electroral: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
Robotics Labs: அரசுப் பள்ளிகளில் ரோபோட்டிக்ஸ் புரட்சி; மாணவர்கள் எதிர்காலத்தை வடிவமைக்கும் புதிய லேப்கள் தொடக்கம்!
Robotics Labs: அரசுப் பள்ளிகளில் ரோபோட்டிக்ஸ் புரட்சி; மாணவர்கள் எதிர்காலத்தை வடிவமைக்கும் புதிய லேப்கள் தொடக்கம்!
தமிழ் கலை ஆசிரியர்கள் பணி: ரூ.1.25 லட்சம் ஊதியம்- என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
தமிழ் கலை ஆசிரியர்கள் பணி: ரூ.1.25 லட்சம் ஊதியம்- என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
PIT BULL , ROTTWEILLER DOG: பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
குஷியோ குஷி..! 34ஆயிரம் விவசாயிகளுக்கு அடித்தது ஜாக்பாட்- மின்வாரியம் சூப்பர் அறிவிப்பு
குஷியோ குஷி..! 34ஆயிரம் விவசாயிகளுக்கு அடித்தது ஜாக்பாட்- மின்வாரியம் சூப்பர் அறிவிப்பு
SIR Electoral: 1 கோடி பேர் காலி? தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் - SIR முடிவுகளை இன்று வெளியிடும் தேர்தல் ஆணையம்
SIR Electoral: 1 கோடி பேர் காலி? தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் - SIR முடிவுகளை இன்று வெளியிடும் தேர்தல் ஆணையம்
Tamilnadu Round Up: SIR முடிவுகள், உயர்நீதிமன்றம் தீர்ப்பு, விஜய் மீது அட்டாக், செவிலியர் போராட்டம் - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: SIR முடிவுகள், உயர்நீதிமன்றம் தீர்ப்பு, விஜய் மீது அட்டாக், செவிலியர் போராட்டம் - தமிழ்நாட்டில் இதுவரை
Embed widget