இரும்புக் கம்பியால் மனைவியை அடித்துக் கொன்ற கொடூரம்.. காவல்துறை வலையில் சிக்கிய நபர்
உத்தரப் பிரதேசத்தில் இரும்புக் கம்பியால் மனைவியை அடித்துக் கொலை செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். உத்தரப்பிரதேச மாநில மஹ்ராஜ்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த நபர் ஹேமந்த். இவர் ஒரு குடி நோயாளி. வழக்கமாகவே இவர் குடித்து விட்டு மனைவியுடன் தகராறு செய்வது அடிப்பது என்பதை வாடிக்கையாகவே கொண்டுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் இரும்புக் கம்பியால் மனைவியை அடித்துக் கொலை செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். உத்தரப்பிரதேச மாநில மஹ்ராஜ்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த நபர் ஹேமந்த். இவர் ஒரு குடி நோயாளி. வழக்கமாகவே இவர் குடித்து விட்டு மனைவியுடன் தகராறு செய்வது அடிப்பது என்பதை வாடிக்கையாகவே கொண்டுள்ளார்.
இந்நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இவர் வழக்கம்போல் குடித்துவிட்டு வீட்டுகு வந்துள்ளார். மனைவி பிரதீபாவுடன் சண்டை போட்ட அவர் ஒருகட்டத்தில் அவரை தலையில் இரும்புக் கம்பி கொண்டு அடித்துள்ளார். இதில் பிரதீபா ரத்த வெள்ளத்தில் சரிந்தார். பின்னர் அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்க்க அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் கூறிவிட்டனர். இது தொடர்பாக குக்ளி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கணவர் ஹேமந்த் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள்:
நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக கடந்த 2021-ம் ஆண்டில் 4.28 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது, 2020-ம் ஆண்டைக் காட்டிலும் 15.3% அதிகம் ஆகும். கரோனா பேரிடர் காரணமாக பொதுமுடக்கம் அமலில் இருந்த 2020-ல் 3.71 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இது, 2019-ல் பதிவான 4.05 லட்சம் வழக்குகளைவிட 8.3% குறைவாகும்.
கடந்த 2021-ல் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் பெண்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட குற்ற வழக்குகளில், கணவரால் அல்லது உறவினர்களால் கொடுமைப்படுத்தப்பட்ட வழக்குகளின் பங்கு 31.8% ஆக (1.36 லட்சம்வழக்குகள்) இருந்தது. இது, முந்தைய 2020 உடன் ஒப்பிடுகையில் 2% அதிகம்.
கணவர் அல்லது நெருங்கிய சொந்தங்களால் பெண்கள் கொடுமைப்படுத்தப்பட்டது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் பங்கு 2020-ல் 30 சதவீதம் ஆகவும், 2019-ல் 30.9% ஆகவும் இருந்தன.
பாலியல் வன்கொடுமை:
தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்ட முந்தைய புள்ளிவிவரங்கள் நம் நாட்டில் பெண்களின் பாதுகாப்பு நிலையை படம்போட்டுக் காட்டுவதாக அமைந்தது. அந்த அறிக்கையின்படி, 2021-ல் பெண்களை குறிவைத்து தாக்கப்பட்டது தொடர்பான வழக்குகளின் பங்கு 20.8% ஆகவும், அதைத்தொடர்ந்து கடத்தல் (17.6%), பாலியல் வன்முறை (7.4%) ஆகிய பிரிவுகளில் பதியப்பட்ட வழக்குகளும் கணிசமான அளவில் இருந்தன.
2020-ல் பதிவு செய்யப்பட்ட மொத்த வழக்குகளில் பாலியல் வன்முறை தொடர்பான வழக்குகளின் பங்கு 7.5 சதவீதம் ஆகவும், 2019-ல் இது 7.9% ஆகவும் இருந்தன.
எண்ணிக்கைஅடிப்படையில் கடந்த 2021-ல் பாலியல் வன்கொடுமை தொடர்பாக 31,677 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில், பாதிக்கப்பட்ட பெண்களில் 18 வயதுக்கும் குறைவானவர்கள் 3,038 பேரும். 6-12 வயது வரையில் 183 பேரும், 6 வயதுக்கும் குறைவானோர் 53 பேரும் அடங்குவர்.
இந்த புள்ளிவிவரங்களை தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (NCB) வெளியிட்டுள்ளது.