மேலும் அறிய

World Food Safety Day 2023: இன்று உலக உணவு பாதுகாப்பு தினம்.. வீட்டில் உணவுப்பாதுகாப்பை எப்படி உறுதிசெய்வது?

உலக உணவு பாதுகாப்பு தினம் 2023: உலக உணவுப் பாதுகாப்பு தினத்தின் முதன்மைக் குறிக்கோள், உற்பத்தி முதல் நுகர்வு வரை உணவுச் சங்கிலி முழுவதும் பாதுகாப்பான உணவு நடைமுறைகளின் அவசியத்தை வலியுறுத்துவதாகும்.

உணவுப் பாதுகாப்பின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உணவினால் ஏற்படும் அபாயங்களைக் கண்டறிந்து தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேம்படுத்தவும் ஆண்டுதோறும் ஜூன் 7ஆம் தேதி உலக உணவுப் பாதுகாப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. இது ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையால் 2018 இல் நிறுவப்பட்டது மற்றும் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) மற்றும் உலக சுகாதார அமைப்பு (WHO) ஆகியவற்றால் கூட்டாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஏன் இந்த தினம்?

உலக உணவுப் பாதுகாப்பு தினத்தின் முதன்மைக் குறிக்கோள், உற்பத்தி முதல் நுகர்வு வரை உணவுச் சங்கிலி முழுவதும் பாதுகாப்பான உணவு நடைமுறைகளின் அவசியத்தை வலியுறுத்துவதாகும். நாம் உண்ணும் உணவின் பாதுகாப்பு மற்றும் தரத்தை உறுதிசெய்து, நடவடிக்கை எடுக்க அரசாங்கங்கள், வணிகங்கள் மற்றும் தனிநபர்களை ஊக்குவிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

கை சுகாதாரம்

சுத்தமான மற்றும் சுகாதாரமான சமையலறை சூழலை பராமரிப்பதன் மூலம் இதனை தொடங்கவும். உணவைக் கையாளும் முன், குறிப்பாக கழிப்பறையைப் பயன்படுத்திய பிறகு, பச்சை இறைச்சி வெட்டிய பிறகு அல்லது அசுத்தமான மேற்பரப்புகளைத் தொட்ட பிறகு, உங்கள் கைகளை சோப்பு மற்றும் தண்ணீரில் நன்கு கழுவவும்.

World Food Safety Day 2023: இன்று உலக உணவு பாதுகாப்பு தினம்.. வீட்டில் உணவுப்பாதுகாப்பை எப்படி உறுதிசெய்வது?

பச்சை உணவுகள் மற்றும் சமைத்த உணவுகளை பிரித்து வைக்கவும்

பச்சை மற்றும் சமைத்த உணவுகளை தனித்தனியாக வைத்திருப்பதன் மூலம் உணவு மாசுபாட்டைத் தடுக்கலாம். பச்சை உணவுகள் மற்றும் சமைத்த உணவுகளை தனித்தனியாக, வெவ்வெறு பாத்திரங்களில் வைக்கவும். பச்சை இறைச்சிகள், கோழி மற்றும் கடல் உணவுகளை கசிவு இல்லாத கொள்கலன்களில் சேமித்து வைக்கவும். அவற்றின் சாறுகள் மற்ற உணவுகளில் படாமல் தடுக்கவும்.

தொடர்புடைய செய்திகள்: Rohit Sharma: ஓய்வு எப்போது என அதிரடியாக அறிவித்த ரோகித் சர்மா.. இந்தியாவின் அடுத்த கேப்டன் யார்?

நன்றாக வேக வைக்கவும்

தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை அழிக்க உணவை நன்கு சமைக்கவும். இறைச்சிகள், கோழி, கடல் உணவுகள் மற்றும் பிற அபாயகரமான உணவுகள் வேகும்போது, உட்புறம் வரை வெப்பநிலை சென்று அடைவதை உறுதிப்படுத்த வேண்டும். குறைவாக வேகவைத்து விடுவதையோ அல்லது அதிகமாக வேகவைத்து விடுவதையோ தவிர்க்க பரிந்துரைக்கப்பட்ட வெப்பநிலை வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும்.

பாதுகாப்பான உணவு சேமிப்பு

கெட்டுப்போகும் உணவுகளை அவற்றின் புத்துணர்ச்சியைப் பராமரிக்கவும், தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்கவும் ஒழுங்காக சேமித்து வைக்கவும். குளிரூட்டப்பட்ட உணவுகளை 40°F (4°C) அல்லது அதற்குக் குறைவாகவும், உறைந்த உணவுகளை 0°F (-18°C) அல்லது அதற்குக் கீழே வைக்கவும். உணவு காலாவதி தேதிகளில் எப்போதும் கண்ணாக இருங்கள். புதிய பொருட்களை பயன்படுத்துவதற்கு முன்பு பழைய பொருட்களைப் காலி செய்ய பழகுங்கள்.

World Food Safety Day 2023: இன்று உலக உணவு பாதுகாப்பு தினம்.. வீட்டில் உணவுப்பாதுகாப்பை எப்படி உறுதிசெய்வது?

பாதுகாப்பான டிஃப்ராஸ்ட் முறை

பாக்டீரியா வளர்ச்சியைத் தடுக்க உறைந்த உணவுகளை தனித்தனியாக பிரிக்கும்போது, பாதுகாப்பாக செய்ய வேண்டும். குளிர்சாதன பெட்டியிலேயே டிஃப்ராஸ்ட் செய்யலாம். அல்லது மைக்ரோவேவில் டிஃப்ராஸ்ட் அமைப்பைப் பயன்படுத்தி உணவுகளை சாதாரண தட்பவப்பநிலைக்கு கொண்டு வரலாம். அல்லது குளிர்ந்த நீரில் கழுவி பிரிக்கலாம்.அறை வெப்பநிலையில் உணவுகளை பிரிப்பதைத் தவிர்க்கவும், ஏனெனில் இது பாக்டீரியாவை விரைவாகப் பெருக்க அனுமதிக்கிறது.

குளிரவைத்த உணவுகளை கையாளும் முறை

உணவினால் பரவும் நோய்களைத் தவிர்க்க எஞ்சிய உணவுகளை கவனமாகக் கையாளவும். உணவுக்குப் பிறகு உடனடியாக எஞ்சியவற்றை குளிர்சாதன பெட்டியில் வைக்கவும் அல்லது உறைய வைக்கவும். அதோடு ஒரு சில நாட்களுக்குள் அவற்றை உட்கொள்ள வேண்டும். எஞ்சியவற்றை மீண்டும் வேகவைக்க, அதிக வெப்பநிலையில் மீண்டும் சூடாக்கவும். உணவின் அனைத்து பகுதிகளும் குறைந்தபட்சம் 165 ° F (74 ° C) ஐ அடைவதை உறுதிசெய்து, எந்த பாக்டீரியாவையும் அழிக்கலாம்.

வழக்கமான சுத்தம் மற்றும் பராமரிப்பு

கவுண்டர்டாப்புகள், கட்டிங் போர்டுகள், பாத்திரங்கள் மற்றும் உபகரணங்களை தொடர்ந்து சுத்தம் செய்வதன் மூலம் சமையலறையை சுத்தமாக பராமரிக்கவும். பாசிகள் போன்ற பாக்டீரியாக்கள் உருவாகும் பகுதிகளுக்கு கவனம் செலுத்துங்கள். அவற்றை அடிக்கடி மாற்றி, முறையாக சுத்தப்படுத்தவும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

''ஆசிரியர்களை விற்கத் துடிக்கும் பள்ளிக் கல்வித்துறை; பெரும் அவமானம்''- அன்புமணி கண்டனம்; காரணம் என்ன?
''ஆசிரியர்களை விற்கத் துடிக்கும் பள்ளிக் கல்வித்துறை; பெரும் அவமானம்''- அன்புமணி கண்டனம்; காரணம் என்ன?
”நடிகை கஸ்தூரி முன் ஜாமீன் மனு தள்ளுபடி” விரைவில் கைதாக வாய்ப்பு..!
”நடிகை கஸ்தூரி முன் ஜாமீன் மனு தள்ளுபடி” விரைவில் கைதாக வாய்ப்பு..!
Kanguva movie : காலையிலே சோகம்.! கங்குவா பார்த்து நொந்து போன சூர்யா ரசிகர்கள்.. நீங்களே பாருங்க!
Kanguva movie : காலையிலே சோகம்.! கங்குவா பார்த்து நொந்து போன சூர்யா ரசிகர்கள்.. நீங்களே பாருங்க!
”ஆதவ் அர்ஜூனா வீட்டில் ED ரெய்டு”  சிக்குகிறாரா லாட்டரி மார்டின்..?
”ஆதவ் அர்ஜூனா வீட்டில் ED ரெய்டு” சிக்குகிறாரா லாட்டரி மார்டின்..?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vignesh Mother | ’’ஒழுங்கா TREATMENT பாக்கலடாக்டர் தரக்குறைவா நடத்துனாரு’’விக்னேஷின் தாய் கதறல்Khalistani Terrorist attack Ram Temple | ”ராமர் கோயிலை இடிப்போம்”தேதி குறித்த தீவிரவாதிகள்Guindy Doctor Stabbed Accused Video | டாக்டருக்கு சரமாரி  கத்திக்குத்து!கூலாக நடந்து வந்த இளைஞன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
''ஆசிரியர்களை விற்கத் துடிக்கும் பள்ளிக் கல்வித்துறை; பெரும் அவமானம்''- அன்புமணி கண்டனம்; காரணம் என்ன?
''ஆசிரியர்களை விற்கத் துடிக்கும் பள்ளிக் கல்வித்துறை; பெரும் அவமானம்''- அன்புமணி கண்டனம்; காரணம் என்ன?
”நடிகை கஸ்தூரி முன் ஜாமீன் மனு தள்ளுபடி” விரைவில் கைதாக வாய்ப்பு..!
”நடிகை கஸ்தூரி முன் ஜாமீன் மனு தள்ளுபடி” விரைவில் கைதாக வாய்ப்பு..!
Kanguva movie : காலையிலே சோகம்.! கங்குவா பார்த்து நொந்து போன சூர்யா ரசிகர்கள்.. நீங்களே பாருங்க!
Kanguva movie : காலையிலே சோகம்.! கங்குவா பார்த்து நொந்து போன சூர்யா ரசிகர்கள்.. நீங்களே பாருங்க!
”ஆதவ் அர்ஜூனா வீட்டில் ED ரெய்டு”  சிக்குகிறாரா லாட்டரி மார்டின்..?
”ஆதவ் அர்ஜூனா வீட்டில் ED ரெய்டு” சிக்குகிறாரா லாட்டரி மார்டின்..?
Breaking News LIVE 14th Nov 2024: அப்போலோ மருத்துவமனையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அனுமதி.
Breaking News LIVE 14th Nov 2024: அப்போலோ மருத்துவமனையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அனுமதி.
அரசுப் பள்ளி ஆசிரியர்கள் வார்டன் வேலைக்கு செல்லலாம்; அரசின் அறிவிப்பால் எழும் எதிர்ப்புகள்!
அரசுப் பள்ளி ஆசிரியர்கள் வார்டன் வேலைக்கு செல்லலாம்; அரசின் அறிவிப்பால் எழும் எதிர்ப்புகள்!
Doctors Strike: அய்யய்யோ! தமிழ்நாடு முழுவதும் டாக்டர்கள் இன்று வேலைநிறுத்தம் - லட்சக்கணக்கான மக்கள் அவதி
Doctors Strike: அய்யய்யோ! தமிழ்நாடு முழுவதும் டாக்டர்கள் இன்று வேலைநிறுத்தம் - லட்சக்கணக்கான மக்கள் அவதி
Kanguva: உலகெங்கும் ரிலீசானது கங்குவா! தியேட்டரை திருவிழாவாக மாற்றும் சூர்யா ஃபேன்ஸ்!
Kanguva: உலகெங்கும் ரிலீசானது கங்குவா! தியேட்டரை திருவிழாவாக மாற்றும் சூர்யா ஃபேன்ஸ்!
Embed widget