மேலும் அறிய
Ramzan Special Trains: தென் மாவட்ட மக்களே... ரம்ஜானுக்கு ஊருக்கு போறீங்களா? சிறப்பு ரயில் முன்பதிவு துவங்கியாச்சு !
Ramzan Special Trains: ரம்ஜான் பண்டிகை விடுமுறை கூட்ட நெரிசலை சமாளிக்க சென்னை - கன்னியாகுமரி இடையே சிறப்பு ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.

ரம்ஜான் சிறப்பு ரயில்
Source : Other
ரம்ஜான் பண்டிகை விடுமுறை கூட்ட நெரிசலை சமாளிக்க தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.
ரம்ஜான் பண்டிகை விடுமுறை
புனித ரமலான் ( ரம்ஜான் ) 2025 நெருங்கி வருவதால், உலகெங்கிலும் உள்ள கோடி கணக்கான இஸ்லாமியர்கள் நோன்பு, பிராத்தனை செய்து வருகின்றனர். இந்நிலையில் ரம்ஜான் பண்டிகை விடுமுறை கூட்ட நெரிசலை சமாளிக்க சென்னை - கன்னியாகுமரி இடையே சிறப்பு ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி தாம்பரம் - கன்னியாகுமரி சிறப்பு ரயில் (06037) மார்ச் 28 அன்று தாம்பரத்தில் இருந்து மாலை 06.00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 08.00 மணிக்கு கன்னியாகுமரி சென்று சேரும். மறு மார்க்கத்தில் கன்னியாகுமரி - தாம்பரம் சிறப்பு ரயில் (06038) மார்ச் 31அன்று கன்னியாகுமரியில் இருந்து இரவு 08.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 08.55 மணிக்கு சென்னை தாம்பரம் சென்று சேரும்.
Ramzan Special Trains!
— Southern Railway (@GMSRailway) March 22, 2025
To accommodate the extra rush of passengers during the #Ramzan festival, Train No. 06037/06038 #Tambaram – #Kanniyakumari – Tambaram Festival Specials will be operated.
Advance Reservation will open at 08.00hrs on 23.03.25#SouthernRailway pic.twitter.com/pZb8FI5HGq
ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு
இந்த ரயில் செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர், நாகர்கோவில் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களில் 14 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் ஆகியவை இணைக்கப்படும். இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு இன்று ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 23) காலை 8 மணி முதல் துவங்கியது
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - கொலை செய்ய திட்டமிட்டு வாள்களுடன் சுற்றித்திருந்த கும்பல்.. மதுரையில் சினிமாவை போல நடந்த சம்பவம்
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Madurai HC: சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் மத்திய அரசுக்கு தான் உள்ளது - உயர்நீதிமன்ற கிளை
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
ஐபிஎல்
நிதி மேலாண்மை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion