மேலும் அறிய

பட்ஜெட் 2024

Budget 2024 LIVE: மோடி 3.0வின் முதல் மத்திய பட்ஜெட்.. எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவாரா நிர்மலா சீதாராமன்?
மோடி 3.0வின் முதல் மத்திய பட்ஜெட்.. மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவாரா நிர்மலா சீதாராமன்?
பாதுகாப்பு துறையில் இந்தியாவின் இலக்கு என்ன?
Budget 2024: பட்ஜெட் என்றால் என்ன? எதற்கு தெரிந்துகொள்ள வேண்டும்? .!
Union Budget 2024: இன்று தாக்கலாகிறது மத்திய அரசு பட்ஜெட் - வருமான வரி விலக்கு உச்ச வரம்பு உயர்த்தப்படுமா?

Budget 2024

லைவ் அப்டேட்டுகள்

ஆந்திர மாநிலத்தின் தேவைகளை அறிந்து பட்ஜெட்டில் அறிவிப்புகள் - பிரதமருக்கு நன்றி தெரிவித்த சந்திரபாபு நாயுடு

பட்ஜெட் டைம்லைன்

2023-24

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த இந்த பட்ஜெட், அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றும் நோக்கத்துடன் சமர்பிக்கப்பட்டது. உள்ளடக்கிய மேம்பாடு, வளர்ச்சிக்கான கடைசி மைலை அடைவது, உள்கட்டமைப்பு முதலீடு, திறனை கட்டவிழ்த்துவிடுதல், பசுமை வளர்ச்சி, இளைஞர் சக்தி மற்றும் நிதித்துறை ஆகியவற்றை உள்ளடக்கி வளர்ச்சிப் பணிகள் முடுக்கிவிடப்பட்டன. இந்திய ரயில்வேக்கு புதிய உச்சமாக ரூ.2.4 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

நிர்மலா சீதாராமன்

Read More

2022-23

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த இந்த பட்ஜெட்டானது, மூலதன முதலீட்டை 33 சதவிகிதம் அதிகரித்து ரூ.10 லட்சம் கோடியாக உயர்த்தியது. வளர்ச்சி திறனை மேம்படுத்தவும், வேலை வாய்ப்பை உருவாக்கம், உட்கட்டமைப்பு மேம்படுத்தவும், தனியார் முதலீடுகளின் அதிகரிக்கவும், உலகளாவிய தலையீடுகளுக்கு எதிராகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

2021-22

கொரோனா நெருக்கடியை தொடர்ந்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட், சுகாதாரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தியது மற்றும் தடுப்பூசிக்கான ஒதுக்கீட்டை ரூ.35,000 கோடியாக உயர்த்தியது. பட்ஜெட்டில் பெட்ரோல் மீது லிட்டருக்கு ரூ.2.5 மற்றும் டீசல் மீது ரூ.4  செஸ் வரி விதிக்கப்பட்டது.

2020-21

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சமர்ப்பித்த பட்ஜெட், ஆண்டுக்கு 15 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு புதிய வருமான வரி விகிதங்களை முன்மொழிந்தது. புதிய வருமான வரி முறையானது விருப்பமானது மற்றும் வரி செலுத்துவோரின் தனிப்பட்ட விருப்பத்தின்படி வரி கட்டமைப்பை தேர்வு செய்ய அனுமதித்தது. அடுத்த 5 ஆண்டுகளில் உட்கட்டமைப்புக்காக ரூ.100 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும் என்றும் அறிவித்தது.

2019-20

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முதல்முறையாக தாக்கல் செய்த இந்த பட்ஜெட்,  நடுத்தர குடும்பத்தினருக்கு வரிச் சலுகை அளிப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தது.  கல்வி, சுகாதாரம் மற்றும் சிறு, குறு தொழில்துறைக்கான ஆதரவையும் உயர்த்தியது. பான் மற்றும் ஆதார் கார்t ஒன்றுக்கொன்று நிகரானதாக அறிவிக்கப்பட்டது.

தேர்தலுக்கு முன்னதாக நிதியமைச்சர் பியூஷ் கோயல் தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட், விவசாயிகளுக்கு கிசான் சம்மன் நிதி போன்ற திட்டங்களுடன் உடனடி நிவாரணம் அளிப்பதில் கவனம் செலுத்தியது.

பியூஷ் கோயல்

2018-19

அருண் ஜெட்லி தாக்கல் செய்த பட்ஜெட்டில், பொதுமக்களுக்கு மருத்துவக் காப்பீடு வழங்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு சிறு, குறு தொழில்துறையை பெருமளவில் முறைப்படுத்துவதும் பட்ஜெட்டில் உள்ளடக்கப்பட்டது. மேலும் அந்தத் துறைக்கு 2022-க்குள் ரூ.3,794 கோடி மூலதன ஆதரவு மற்றும் தொழில்துறை மானியம் ஒதுக்கப்பட்டது.

அருண் ஜெட்லி

2017-18

மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்த பட்ஜெட்டில், பட்ஜெட் தாக்கல் செய்யும் தேதி முன்னேற்றம், ரயில்வே பட்ஜெட்டை பொது பட்ஜெட்டுடன் இணைப்பது மற்றும் திட்டம் & திட்டமற்ற செலவினங்களை ரத்து செய்தல் ஆகிய 3 முக்கிய சீர்திருத்தங்கள் இடம்பெற்றன.

2016-17

நிதியமைச்சர் அருண் ஜெட்லி சமர்ப்பித்த இந்த பட்ஜெட், பின்தங்கியவர்களுக்கு உதவும் மூன்று முக்கிய திட்டங்களை அறிமுகப்படுத்தியது. அதன்படி,  பிரதான் மந்திரி ஃபசல் யோஜனா, சுகாதார காப்பீட்டுத் திட்டம் மற்றும் பிபிஎல் குடும்பங்களுக்கு எல்பிஜி இணைப்பை உறுதி செய்வது ஆகிய 3 திட்டங்கள் தொடங்கப்பட்டன.

2015-16

மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்த இந்த பட்ஜெட், நிதி ஒருங்கிணைப்பை இலக்காகக் கொண்டிருந்தது.  பாதுகாப்பு, உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான திட்டங்களுக்காக திட்டமிடப்படாத செலவினங்கள் அதிகரிக்கப்பட்டன.

2014-15

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் முதல் பட்ஜெட்டை, நிதியமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்தார். இது இளைஞர்களுக்கான திறன் இந்தியா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. மேலும், பட்ஜெட்டில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக ரூ.7,060 கோடியும், பாதுகாப்புக்கு ரூ.2,29,000 கோடியும் ஒதுக்கப்பட்டு, நிதிப்பற்றாக்குறையை 4.1 சதவிகிதமாக குறைப்பதை இலக்காகக் கொண்டது.

நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு நிதியமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட், நிதி நிலைத்தன்மையை இலக்காகக் கொண்டிருந்தது. இதில் வரி மாற்றங்கள் எதுவும் இல்லை, ஆனால் உற்பத்தித் துறையில் நிவாரணம் அளிக்கும் நோக்கில் கலால் வரி குறைப்பு தொடர்பான அறிவிப்புகள் இடம்பெற்று இருந்தன.

ப.சிதம்பரம்

2013-14

பணக்காரர்கள் மற்றும் பெரிய நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் புதிய வரிகளில் இருந்து அதிக வருவாயை ஈட்டுவதோடு,  நிதியாண்டுக்கான செலவினங்களை அதிகரிப்பதை உள்ளடக்கிய பட்ஜெட்டை நிதியமைச்சர் ப.சிதம்பரம் வெளியிட்டார். குறிப்பிட்ட பத்து ஆண்டுகளில் நாட்டின் மிக மோசமான மந்தநிலைக்கு மத்தியில், நிதிப்பற்றாக்குறையைக் குறைத்து வளர்ச்சியை மீட்டெடுப்பதை இந்த பட்ஜெட் இலக்காகக் கொண்ட்ருந்தது.

2012-13

நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியால் சமர்ப்பிக்கப்பட்ட பட்ஜெட் திட்டச் செலவை அதிகரித்தது மற்றும் வருமான வரி விலக்கு வரம்பை உயர்த்தியது. சேவை வரி விகிதத்தை 10 சதவிகிதத்தில் இருந்து 12 சதவிகிதமாக உயர்த்தி, உள்நாட்டு உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை அதிகரிக்க நடவடிக்கை எடுத்தது.

பிரணாப் முகர்ஜி

2011-12

நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி சமர்ப்பித்த பட்ஜெட், சமூக நலன் மற்றும் உட்கட்டமைப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தியது.  அதே நேரத்தில் நிதி நிலைத்தன்மையை நோக்கமாகக் கொண்டிருந்தது. கல்விக்கான செலவு 24 சதவிகிதமும், சுகாதாரத்துக்கான செலவு 20 சதவிகிதமும் உயர்த்தப்பட்டது.

2010-11

நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்த இந்த பட்ஜெட்,  உட்கட்டமைப்பை அதிகரிப்பதற்கும், செலவினங்களை அதிகரித்து வேலைகளை உருவாக்குவதற்கும், கிராமப்புற வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் வழிவகை செய்தது. பத்திரங்களுக்குப் பதிலாக எரிபொருள் மற்றும் உரத்திற்கான பண மானியங்களை வழங்குவதன் மூலம் அரசு அமைப்பை எளிதாக்கியது.

2009-10

நிதி நெருக்கடியால் சமூகத்தில் பாதிக்கப்படக்கூடிய பிரிவினரைப் பாதுகாக்கும் வேளையில், பொருளாதார வளர்ச்சிக்கு முன்னுரிமை அளித்த பட்ஜெட்டை நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி நாடாளுமன்றத்தில் சமர்பித்தார். கல்வி, உட்கட்டமைப்பு மற்றும் கிராமப்புற மேம்பாட்டிற்கான அதிகரித்த செலவினங்களுடன், தனிநபர்கள் மற்றும் வணிகங்களுக்கான வரிக் குறைப்புகளும் அதில் இடம்பெற்றன.

தேர்தலை முன்னிட்டு 2009-10ம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை, உலகளாவிய நிதி நெருக்கடிக்கு மத்தியில் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்தார். அதில்,  திட்டச் செலவினங்கள் உயர்த்தப்பட்டன.  மேலும்,  நடுத்தர வர்கத்திற்கு உதவும் வகையில் விவசாயம், உட்கட்டமைப்பு, வீட்டுக் கடன்கள் மற்றும் கல்விக்கான வருமான வரி விலக்குகள் அதிகரிக்கப்பட்டன.

2008-09

மக்களவை தேர்தல் நடைபெற இருந்த ஓராண்டிற்கு  முன்னதாக ப. சிதம்பரம் தாக்கல் செய்த இந்த பட்ஜெட்டானது, விவசாய கடன் தள்ளுபடி, வருமான வரி விதிப்பில் மாற்றம், புடிய ஐஐடி-க்கள் மற்றும் பல்கலைக்கழகங்களை நிறுவுவதில் அதிக ஆர்வம் காட்டியது.

2007-08

தொடர்ந்து நான்காவது முறையாக நிதியமைச்சர் சிதம்பரத்தால் சமர்ப்பிக்கப்பட்ட பட்ஜெட்டானது, தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம் விரிவாக்கம் மற்றும் நீர்ப்பாசன திட்டத்தின் மூலம் கிராமப்புற வளர்ச்சியை மேம்படுத்தியது. அதோடு, கல்வி துறைக்கான செலவு 34 சதவீதம் உயர்த்தப்பட்டது.

2006-07

மௌலானா ஆசாத் அறக்கட்டளைக்கு இரண்டு மடங்கு நிதியுதவியுடன், கல்வியில் கவனம் செலுத்தும் பட்ஜெட்டை நிதியமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்தார். சிறுபான்மைத் திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. மேலும், அரசு மற்றும் தனியார் நிறுவங்களின் கூட்டு திட்டத்தால் உள்கட்டமைப்பு பெரிய முதலீடுகளைக் கண்டது.

2005-06

தொடர்ந்து இரண்டாவது முறையாக ப. சிதம்பரத்தால் சமர்ப்பிக்கப்பட்ட பட்ஜெட்டில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கில், உள்நாட்டு நிறுவனங்கள், தனிநபர்கள் மற்றும் முதலீடுகளுக்கான வரிக் குறைப்பு அறிவிப்புகள் இடம்பெற்றன. சுங்கக் கட்டணங்களும் குறைக்கப்பட்டதோடு,  கல்வி, சுகாதாரம் மற்றும் உள்கட்டமைப்புக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டது.

2004-05

புதிதாக அமைக்கப்பட்ட UPA அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்தார். அதில்,  சுகாதார மறுசீரமைப்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டு இருந்தது. தேசிய சுகாதார காப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதோடு, முதலீட்டைக் கவரும் வகையில் தொலைத்தொடர்பு, விமானப் போக்குவரத்து மற்றும் காப்பீடு ஆகியவற்றில் அந்நிய நேரடி முதலீடுக்கான வரம்புகள் அதிகரிக்கப்பட்டது.

வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் கடைசி பட்ஜெட்டை நிதியமைச்சர் ஜஸ்வந்த் சிங் தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் ஐந்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. வறுமைக் குறைப்பு, விவசாய ஊக்குவிப்பு, உள்கட்டமைப்பு மேம்பாடு, நிதி ஒருங்கிணைப்பு மற்றும் திறமையான உற்பத்தி ஆகியவைக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது.

ஜஸ்வந்த் சிங்

2003-04

மத்திய நிதியமைச்சர் ஜஸ்வந்த் சிங், தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். முக்கியமான பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை (எம்எஸ்பி) உயர்த்தியது. விவசாயத் துறைக்கு ஊக்கமளிக்கப்பட்டது. ஜவுளித் தொழிலை மீட்டெடுக்க பாலியஸ்டர் மீது கலால் வரி குறைக்கப்பட்டது.

2002-03

நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா தாக்கல் செய்த ஐந்தாவது பட்ஜெட்டில் விவசாயம், சர்க்கரை மற்றும் மருந்துகள் மீதான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டது.

யஷ்வந்த் சின்ஹா

2001-02

நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா தாக்கல் செய்த நான்காவது பட்ஜெட்டில் உள்கட்டமைப்பு, தொழில்நுட்பம் மற்றும் கிராமப்புற மேம்பாட்டுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

2000-01

நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவின் மூன்றாவது பட்ஜெட். 21ஆம் நூற்றாண்டின் முதல் பட்ஜெட், நிதி பற்றாக்குறையை சரி செய்வதில் கவனம் செலுத்தியது. வரிச்சலுகைகள் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைக்கு ஊக்கமளித்தது.

1999-2000

மத்திய நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா, தனது இரண்டாவது பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 1999ஆம் ஆண்டு வரை, மத்திய பட்ஜெட் பிப்ரவரி மாதத்தின் கடைசி நாளில் மாலை 5 மணிக்கு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், 1999 ஆம் ஆண்டில், மத்திய பட்ஜெட் காலை 11 மணிக்கு தாக்கல் செய்யப்படும் சின்ஹா அறிவித்தார்.

1998-99

பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தது. கடந்த 1998ஆம் ஆண்டு, ஜூன் 1ஆம் தேதி, அப்போதைய நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

1997-98

இந்திய ஊடகங்களால் இந்த பட்ஜெட் கனவு பட்ஜெட் என அழைக்கப்பட்டது. கடந்த 1997ஆம் ஆண்டு, பிப்ரவரி 28ஆம் தேதி, அப்போதைய நிதி அமைச்சர் ப. சிதம்பரத்தால் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. வருமான வரி விகிதத்தை குறைத்தல், கார்ப்பரேட் வரி மீதான கூடுதல் கட்டணத்தை நீக்குதல், கார்ப்பரேட் வரி விகிதத்தை குறைத்தல் உள்ளிட்ட பொருளாதார சீர்திருத்தங்களை கொண்ட நிதிநிலை அறிக்கையாக அமைந்தது.

ப. சிதம்பரம்

1996-97

கடந்த 1996ஆம் ஆண்டு, மார்ச் 19ஆம் தேதி, பிரதமர் தேவகவுடா தலைமையில் ஐக்கிய முன்னணி அரசு ஆட்சியில் இருந்தபோது, அந்தாண்டு பட்ஜெட்டை நிதியமைச்சர் ப. சிதம்பரம் தாக்கல் செய்தார்.

1995-96

இது, நரசிம்ம ராவ் அரசின் கடைசி பட்ஜெட். கடந்த 1995ஆம் ஆண்டு, மார்ச் 15ஆம் தேதி, மன்மோகன் சிங், பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

மன்மோகன் சிங்

1994-95

கடந்த 1994ஆம் ஆண்டு, பிப்ரவரி 28ஆம் தேதி, நிதியமைச்சர் மன்மோகன் சிங் தனது நான்காவது பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

1993-94

கடந்த 1993ஆம் ஆண்டு, பிப்ரவரி 27ஆம் தேதி, நிதியமைச்சர் மன்மோகன் சிங் தனது மூன்றாவது பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

1992-93

கடந்த 1992ஆம் ஆண்டு, பிப்ரவரி 29ஆம் தேதி, நிதியமைச்சர் மன்மோகன் சிங் தனது இரண்டாவது பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

1991-92

கடந்த 1991ஆம் ஆண்டு, ஜூலை 24ஆம் தேதி, காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தது. பி.வி. நரசிம்மராவ் பிரதமரானார். முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் மன்மோகன் சிங்குக்கு நிதி அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. மன்மோகன் சிங் தாக்கல் செய்த முதல் நிதிநிலை அறிக்கை, இந்தியாவின் திசைவழி போக்கையே மாற்றி அமைத்தது. பல்வேறு சீர்திருத்தங்களை அவர் கொண்டு வந்தார்.

1990-91

1990ஆம் ஆண்டு, மார்ச் 19ஆம் தேதி, மூன்றாவது அணி ஆட்சிக்கு வந்தது. வி.பி. சிங் பிரதமரானார். அந்தாண்டு, பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் எப்.எம். மது தாண்டவதே தாக்கல் செய்தார்.

எப்.எம். மது தாண்டவதே

1990ஆம் ஆண்டு, மார்ச் 19ஆம் தேதி, மூன்றாவது அணி ஆட்சிக்கு வந்தது. வி.பி. சிங் பிரதமரானார். அந்தாண்டு, பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் எப்.எம். மது தாண்டவதே தாக்கல் செய்தார்.

Read More

1989-90

கடந்த 1989ஆம் ஆண்டு, பிப்ரவரி 28ஆம் தேதி, சங்கர்ராவ் சவான் புதிய நிதியமைச்சராக பதவியேற்று, மக்களவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது, ராஜீவ் காந்தி பிரதமராக பதவி வகித்தார்.

சங்கர்ராவ் சவான்

1988-89

கடந்த 1988ஆம் ஆண்டு, பிப்ரவரி 29ஆம் தேதி, அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி தலைமையில், நிதியமைச்சர் என். டி. திவாரி மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதுவே, அவர் தாக்கல் செய்த ஒரே பட்ஜெட் ஆகும்.

என். டி. திவாரி

1987-88

கடந்த 1987ஆம் ஆண்டு, பிப்ரவரி 28ஆம் தேதி, பிரதமரும் மத்திய நிதியமைச்சருமான ராஜீவ் காந்தி மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

ராஜீவ் காந்தி

1986-87

கடந்த 1986 ஆம் ஆண்டு, பிப்ரவரி 28 ஆம் தேதி, வி.பி.சிங் மீண்டும் மத்திய பட்ஜெட்டை மக்களவையில் தாக்கல் செய்தார்.

வி.பி.சிங்

1985-86

கடந்த 1985ஆம் ஆண்டு, மார்ச் 16ஆம் தேதி, அப்போதைய நிதியமைச்சர் வி.பி.சிங் மத்திய பட்ஜெட்டை மக்களவையில் தாக்கல் செய்தார். இந்திரா காந்தியின் படுகொலைக்குப் பிறகு, ராஜீவ் காந்தி பிரதமரானார். வி.பி. சிங் நிதி அமைச்சரானார்.

1984-85

கடந்த 1984ஆம் ஆண்டு, பிப்ரவரி 29ஆம் தேதி, இந்திரா காந்தியின் பிரதமராக இருந்தபோது, அப்போதைய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, தனது கடைசி பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

1983-84

கடந்த 1983ஆம் ஆண்டு, பிப்ரவரி 28ஆம் தேதி, நிதிநிலை அறிக்கையை அப்போதைய மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்தார்.

1982-83

கடந்த 1982ஆம் ஆண்டு, பிப்ரவரி 27ஆம் தேதி, நிதிநிலை அறிக்கையை அப்போதைய மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்தார். அப்போது, பிரதமராக பதவி வகித்தவர் இந்திரா காந்தி.

1981-82

கடந்த 1981ஆம் ஆண்டு, பிப்ரவரி 28ஆம் தேதி, நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் ஆர். வெங்கட்ராமன் தாக்கல் செய்தார்.

ஆர். வெங்கட்ராமன்

1980-81

இந்த நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் ஆர். வெங்கட்ராமன், மக்களவையில் தாக்கல் செய்தார். அப்போது, பிரதமராக பதவி வகித்தவர் இந்திரா காந்தி.

1979-80

இந்த நிதிநிலை அறிக்கையை துணை பிரதமரும் மத்திய நிதியமைச்சருமான சரண் சிங் தாக்கல் செய்தார்.

சிறப்பம்சம்:

இந்த ஆண்டு பட்ஜெட்டில் 7வது நிதிக்குழுவின் பரிந்துரைகள் ஏற்கப்பட்டன. மத்திய கலால் வரிகளில் மாநிலங்களின் பங்கு 20லிருந்து 40 சதவீதமாக இருமடங்காக அதிகரிப்பதிலும் கவனம் செலுத்தப்பட்டது.

சரண் சிங்

இந்த நிதிநிலை அறிக்கையை துணை பிரதமரும் மத்திய நிதியமைச்சருமான சரண் சிங் தாக்கல் செய்தார். சிறப்பம்சம்: இந்த ஆண்டு பட்ஜெட்டில் 7வது நிதிக்குழுவின் பரிந்துரைகள் ஏற்கப்பட்டன. மத்திய கலால் வரிகளில் மாநிலங்களின் பங்கு 20லிருந்து 40 சதவீதமாக இருமடங்காக அதிகரிப்பதிலும் கவனம் செலுத்தப்பட்டது.

Read More

1978-79

இந்த நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் ஹிருபாய் எம். படேல் தாக்கல் செய்தார்.

சிறப்பம்சம்:

சட்டவிரோத நடவடிக்கைகளை களைய, 1000, 5,000 மற்றும் 10,000 ரூபாய் நோட்டுகளை ஒழிக்க அறிவிக்க ஜனதா அரசு முடிவு செய்தது. இந்த அறிவிப்பு வெளியான ஒரு மாதத்திற்குள் இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட் உரையின் முக்கிய குறிக்கோளே இந்த நடவடிக்கையின் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதாக அமைந்தது.

ஹிருபாய் எம். படேல்

இந்த நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் ஹிருபாய் எம். படேல் தாக்கல் செய்தார். சிறப்பம்சம்: சட்டவிரோத நடவடிக்கைகளை களைய, 1000, 5,000 மற்றும் 10,000 ரூபாய் நோட்டுகளை ஒழிக்க அறிவிக்க ஜனதா அரசு முடிவு செய்தது. இந்த அறிவிப்பு வெளியான ஒரு மாதத்திற்குள் இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட் உரையின் முக்கிய குறிக்கோளே இந்த நடவடிக்கையின் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதாக அமைந்தது.

Read More

1977-78

இந்த நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் ஹிருபாய் எம். படேல் தாக்கல் செய்தார்.

சிறப்பம்சம்:

இந்த பட்ஜெட்டில், பொருளாதார கொள்கைகள் மற்றும் திட்டங்களில் அடிப்படை மாற்றம் தேவை என வலியுறுத்தப்பட்டது.

ஹிருபாய் எம். படேல்

இந்த நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் ஹிருபாய் எம். படேல் தாக்கல் செய்தார். சிறப்பம்சம்: இந்த பட்ஜெட்டில், பொருளாதார கொள்கைகள் மற்றும் திட்டங்களில் அடிப்படை மாற்றம் தேவை என வலியுறுத்தப்பட்டது.

Read More

1976-77

இந்த நிதிநிலை அறிக்கையையும் மத்திய நிதியமைச்சர் சி. சுப்பிரமணியமே தாக்கல் செய்தார்.

சிறப்பம்சம்:

கடந்த ஆண்டு, 247 கோடி ரூபாய் நிதி பற்றாக்குறை மதிப்பிடப்பட்ட நிலையில், இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டில் 490 கோடி ரூபாய் நிதி பற்றாக்குறை மதிப்பிடப்பட்டது.

சி. சுப்பிரமணியம்

இந்த நிதிநிலை அறிக்கையையும் மத்திய நிதியமைச்சர் சி. சுப்பிரமணியமே தாக்கல் செய்தார். சிறப்பம்சம்: கடந்த ஆண்டு, 247 கோடி ரூபாய் நிதி பற்றாக்குறை மதிப்பிடப்பட்ட நிலையில், இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டில் 490 கோடி ரூபாய் நிதி பற்றாக்குறை மதிப்பிடப்பட்டது.

Read More

1975-76

இந்த நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் சி. சுப்பிரமணியம் தாக்கல் செய்தார்.

சிறப்பம்சம்:

வருவாய் ரூ.10,521 கோடியாகவும், செலவு ரூ.10,768 கோடியாகவும் மதிப்பிடப்பட்டு, ரூ.247 கோடி பற்றாக்குறை ஏற்பட்டது.

சி. சுப்பிரமணியம்

இந்த நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் சி. சுப்பிரமணியம் தாக்கல் செய்தார். சிறப்பம்சம்: வருவாய் ரூ.10,521 கோடியாகவும், செலவு ரூ.10,768 கோடியாகவும் மதிப்பிடப்பட்டு, ரூ.247 கோடி பற்றாக்குறை ஏற்பட்டது.

Read More

1974-75

இந்த நிதிநிலை அறிக்கையையும் மத்திய நிதியமைச்சர் யஷ்வந்த்ராவ் சவானே தாக்கல் செய்தார்.

சிறப்பம்சம்:

இந்த நிதிநிலை அறிக்கையின் மூலம் இந்தியாவின் வருமான வரி முறையை மறுசீரமைப்பதற்கான களத்தை அமைக்க அரசாங்கம் இலக்கு
நிர்ணயித்தது. இதன் விளைவாக, அதிகபட்ச வருமான வரி விகிதத்தை 97.75 சதவீதத்திலிருந்து 75 சதவீதமாக அரசு குறைத்தது.

யஷ்வந்த்ராவ் சவான்

இந்த நிதிநிலை அறிக்கையையும் மத்திய நிதியமைச்சர் யஷ்வந்த்ராவ் சவானே தாக்கல் செய்தார். சிறப்பம்சம்: இந்த நிதிநிலை அறிக்கையின் மூலம் இந்தியாவின் வருமான வரி முறையை மறுசீரமைப்பதற்கான களத்தை அமைக்க அரசாங்கம் இலக்கு நிர்ணயித்தது. இதன் விளைவாக, அதிகபட்ச வருமான வரி விகிதத்தை 97.75 சதவீதத்திலிருந்து 75 சதவீதமாக அரசு குறைத்தது.

Read More

1973-74

இந்த நிதிநிலை அறிக்கையையும் மத்திய நிதியமைச்சர் யஷ்வந்த்ராவ் சவானே தாக்கல் செய்தார்.

சிறப்பம்சம்:

அந்த ஆண்டில் நிதிப்பற்றாக்குறை ரூ.550 கோடியாக இருந்ததால், இந்த பட்ஜெட் கருப்பு பட்ஜெட் என அழைக்கப்பட்டது. இந்தியா கடுமையான நிதி நெருக்கடியில் இருந்த காலம் அது.

யஷ்வந்த்ராவ் சவான்

இந்த நிதிநிலை அறிக்கையையும் மத்திய நிதியமைச்சர் யஷ்வந்த்ராவ் சவானே தாக்கல் செய்தார். சிறப்பம்சம்: அந்த ஆண்டில் நிதிப்பற்றாக்குறை ரூ.550 கோடியாக இருந்ததால், இந்த பட்ஜெட் கருப்பு பட்ஜெட் என அழைக்கப்பட்டது. இந்தியா கடுமையான நிதி நெருக்கடியில் இருந்த காலம் அது.

Read More

1972-73

இந்த நிதிநிலை அறிக்கையையும் மத்திய நிதியமைச்சர் யஷ்வந்த்ராவ் சவானே தாக்கல் செய்தார்.

சிறப்பம்சம்:

இந்த பட்ஜெட்டில், வளர்ச்சி மற்றும் சமூக நலன்களின் வேகத்தை விரைவுபடுத்துவதற்காக, மத்திய அரசின் திட்டங்களுக்கான பட்ஜெட் ஒதுக்கீட்டை ரூ.1455ல் இருந்து ரூ.1787 ஆக அரசு உயர்த்தியது.

யஷ்வந்த்ராவ் சவான்

இந்த நிதிநிலை அறிக்கையையும் மத்திய நிதியமைச்சர் யஷ்வந்த்ராவ் சவானே தாக்கல் செய்தார். சிறப்பம்சம்: இந்த பட்ஜெட்டில், வளர்ச்சி மற்றும் சமூக நலன்களின் வேகத்தை விரைவுபடுத்துவதற்காக, மத்திய அரசின் திட்டங்களுக்கான பட்ஜெட் ஒதுக்கீட்டை ரூ.1455ல் இருந்து ரூ.1787 ஆக அரசு உயர்த்தியது.

Read More

1971-72

இந்த நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் யஷ்வந்த்ராவ் சவான் தாக்கல் செய்தார்.

சிறப்பம்சம்:

இந்த பட்ஜெட்டில், புதிய வரி கொள்கையை அரசு அறிவித்தது. அதன்படி, ரூபாயில் வாங்கும் அனைத்து விமான டிக்கெட்டுகளுக்கும் 20 சதவீத கூடுதல் வரி விதிக்கப்பட்டது.

யஷ்வந்த்ராவ் சவான்

இந்த நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் யஷ்வந்த்ராவ் சவான் தாக்கல் செய்தார். சிறப்பம்சம்: இந்த பட்ஜெட்டில், புதிய வரி கொள்கையை அரசு அறிவித்தது. அதன்படி, ரூபாயில் வாங்கும் அனைத்து விமான டிக்கெட்டுகளுக்கும் 20 சதவீத கூடுதல் வரி விதிக்கப்பட்டது.

Read More

1970-71:

இந்த நிதிநிலை அறிக்கையை பிரதமரும் மத்திய நிதியமைச்சருமான இந்திரா காந்தி தாக்கல் செய்தார்.

சிறப்பம்சம்:

சுதந்திர இந்தியாவின் வரலாற்றில், முதல்முறையாக ஒரு பெண் நிதியமைச்சர் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். (பின்னர், 2019ஆம் ஆண்டு, வரலாற்றில் இரண்டாவது பெண் நிதி அமைச்சர் (நிர்மலா சீதாராமன்) பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

இந்திரா காந்தி

இந்த நிதிநிலை அறிக்கையை பிரதமரும் மத்திய நிதியமைச்சருமான இந்திரா காந்தி தாக்கல் செய்தார். சிறப்பம்சம்: சுதந்திர இந்தியாவின் வரலாற்றில், முதல்முறையாக ஒரு பெண் நிதியமைச்சர் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். (பின்னர், 2019ஆம் ஆண்டு, வரலாற்றில் இரண்டாவது பெண் நிதி அமைச்சர் (நிர்மலா சீதாராமன்) பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

Read More

1968-69

இந்த நிதிநிலை அறிக்கையையும் மத்திய நிதியமைச்சர் மொரார்ஜி தேசாயே தாக்கல் செய்தார்.

சிறப்பம்சம்:

கணவன்/மனைவி இறந்துவிட்டால், அவர்களை திருமணம் செய்து கொண்ட இணையர்களுக்கு இறந்தவரின் சொத்தில் இருந்து குறிப்பிட்ட தொகையை வழங்க வேண்டும். ஆனால், இதை வைத்து வரி முறைகேடு நடப்பதாக புகார் எழுந்த நிலையில், பட்ஜெட்டில் இது ரத்து செய்யப்பட்டது.

மொரார்ஜி தேசாய்

இந்த நிதிநிலை அறிக்கையையும் மத்திய நிதியமைச்சர் மொரார்ஜி தேசாயே தாக்கல் செய்தார். சிறப்பம்சம்: கணவன்/மனைவி இறந்துவிட்டால், அவர்களை திருமணம் செய்து கொண்ட இணையர்களுக்கு இறந்தவரின் சொத்தில் இருந்து குறிப்பிட்ட தொகையை வழங்க வேண்டும். ஆனால், இதை வைத்து வரி முறைகேடு நடப்பதாக புகார் எழுந்த நிலையில், பட்ஜெட்டில் இது ரத்து செய்யப்பட்டது.

Read More

1967-68

இந்த நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் மொரார்ஜி தேசாய் தாக்கல் செய்தார்.

சிறப்பம்சம்: நிதிநிலை அறிக்கையில் அனைத்து அம்சங்களையும் பரிசீலித்த பிறகு, சுமார் 68 கோடி ரூபாய் பற்றாக்குறை ஏற்படும் என நிதி அமைச்சர் மதிப்பிட்டார்.

மொரார்ஜி தேசாய்

இந்த நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் மொரார்ஜி தேசாய் தாக்கல் செய்தார். சிறப்பம்சம்: நிதிநிலை அறிக்கையில் அனைத்து அம்சங்களையும் பரிசீலித்த பிறகு, சுமார் 68 கோடி ரூபாய் பற்றாக்குறை ஏற்படும் என நிதி அமைச்சர் மதிப்பிட்டார்.

Read More

1966-67

இந்த நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் சசீந்திர சவுத்ரி தாக்கல் செய்தார்.

சிறப்பம்சம்: 2,407 கோடி ரூபாய் செலவு ஏற்படும் என்றும் 2,617 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்படும் என்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, 210 கோடி ரூபாய் உபரியாக இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.

சசீந்திர சவுத்ரி

இந்த நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் சசீந்திர சவுத்ரி தாக்கல் செய்தார். சிறப்பம்சம்: 2,407 கோடி ரூபாய் செலவு ஏற்படும் என்றும் 2,617 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்படும் என்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, 210 கோடி ரூபாய் உபரியாக இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.

Read More

1965-66

நிதி அமைச்சர் கிருஷ்ணமாச்சாரி தாக்கல் செய்த பட்ஜெட்டில், மத்திய அரசு தன்னார்வ வெளிப்படுத்தல் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதன்படி, கணக்கில் வராத பணத்தை அரசிடமே (Voluntary Disclosure Scheme) ஒப்படைக்கலாம். வரி ஏய்ப்பைத் தடுக்கவும் கறுப்புப் பணத்தை ஒழிக்கவும் இந்தத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.

கிருஷ்ணமாச்சாரி

1963-64

இந்திய நிதியமைச்சர் மொரார்ஜி தேசாய் அறிமுகம் செய்த பட்ஜெட்டில், சூப்பர் லாப வரி அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் உள்ள பணக்காரர்கள் உள்ளிட்ட தனிநபர்களுக்கும் நிறுவனங்களுக்கும் கூடுதல் வரி விதிக்கப்பட்டது. இது நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்பை ஏற்படுத்தியது.

1958-59

பிரதமரும் வெளியுறவுத்துறை மற்றும் நிதி அமைச்சருமான ஜவஹர்லால் நேரு இந்த பட்ஜெட்டைத் தாக்க செய்தார். சுதந்திர இந்திய வரலாற்றில் முதல்முறையாக ஒரு பிரதமர் பட்ஜெட் தாக்கல் செய்தார். பரிசு வரி என்ற புதிய வரிவிதிப்பு இந்த பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்பட்டது.

ஜவஹர்லால் நேரு

1957-58

இந்திய நிதியமைச்சர் டி.டி.கிருஷ்ணமாச்சாரி வழங்கிய பட்ஜெட்டில், புதிதாக நேரடி வரிவிதிப்பாக, செல்வ வரியை (Wealth Tax) அரசு அறிமுகம் செய்தது.

டி.டி.கிருஷ்ணமாச்சாரி

இந்திய நிதியமைச்சர் டி.டி.கிருஷ்ணமாச்சாரி வழங்கிய பட்ஜெட்டில், புதிதாக நேரடி வரிவிதிப்பாக, செல்வ வரியை (Wealth Tax) அரசு அறிமுகம் செய்தது.

Read More

1955-56

நிதியமைச்சர் தேஷ்முக் தாக்கல் செய்த பட்ஜெட்டில், திருமணமானவர்களுக்கும் ஆகாதவர்களுக்கும் வெவ்வேறு வரி விலக்கு வரம்புகளை அரசாங்கம் முன்மொழிந்தது. இதன்படி, திருமணமான தம்பதிகளுக்கு ரூ.2,000, திருமணமாகாத தனி நபர்களுக்கு 1,000 ரூபாயும் வரம்பு நிர்ணயிக்கப்பட்டது.

சி.டி. தேஷ்முக்

1953-54

நிதியமைச்சர் தேஷ்முக் தாக்கல் செய்த பட்ஜெட்டில், தனிநபர் வருமான வரி செலுத்துவோருக்கு குறைந்தபட்ச வருமான வரி விலக்கு வரம்பு உயர்த்தப்பட்டது. குறிப்பாக ரூ 3,600 இல் இருந்து ரூ 4,200 ஆக இந்தத் தொகை அதிகரிக்கப்பட்டது.

1951-52

இந்திய நிதியமைச்சர் சி.டி. தேஷ்முக் தாக்கல் செய்த இந்த பட்ஜெட் முதல்முறையாக பற்றாக்குறை பட்ஜெட்டாக இருந்தது. பட்ஜெட்டின் கீழ் மதிப்பிடப்பட்ட மொத்த வருவாய் ரூ. 369.89 கோடியாக இருந்த நிலையில், மொத்தம் செலவு ரூ.375.43 கோடி என மதிப்பிடப்பட்டது. ரூ.5.54 கோடி பற்றாக்குறையாக இருந்தது.

1950-51

திட்டக் குழு அமைக்கப்படுவது இந்த பட்ஜெட்டில்தான் அறிவிக்கப்பட்டது. பிரதமர் தலைமையில், இந்தியாவின் வளர்ச்சிக்கான நன்கு வரையறுக்கப்பட்ட திட்டங்கள் திட்டக் குழுவில் அறிமுகம் செய்யப்படும் என்று நிதியமைச்சர் ஜான் மத்தாய் தெரிவித்தார்.

டாக்டர் ஜான் மத்தாய்

1949-50

நிதியமைச்சர் டாக்டர் ஜான் மத்தாய் தாக்கல் செய்த இந்த பட்ஜெட்டில், அரசு மூலதன ஆதாய வரியை ரத்து செய்தது. இருப்பினும், அது 1956-57 பட்ஜெட்டில் மீண்டும் கொண்டு வரப்பட்டது.

1948- 49

இந்த பட்ஜெட்டையும் நிதியமைச்சர் ஆர்.கே.சண்முகம் செட்டி தாக்கல் செய்தார்.  இந்த பட்ஜெட்டில்தான்,

ஆர்.கே.சண்முகம் செட்டியார்

இந்த பட்ஜெட்டையும் நிதியமைச்சர் ஆர்.கே.சண்முகம் செட்டி தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில்தான், "இடைக்கால பட்ஜெட்" என்ற வார்த்தையை அவர் முதன்முதலில் பயன்படுத்தினார். இதுவே பின்னர் நடைமுறையாக மாறியது.

Read More

1969-70

இந்த நிதிநிலை அறிக்கையையும் மத்திய நிதியமைச்சர் மொரார்ஜி தேசாயே தாக்கல் செய்தார்.

சிறப்பம்சம்:

இந்த பட்ஜெட்டில், புதிய தொழில் நிறுவனங்கள் மற்றும் கப்பல்களுக்கு வரி தள்ளுபடி நீட்டிக்கப்படுவதாக அரசு அறிவித்தது.

மொரார்ஜி தேசாய்

இந்த நிதிநிலை அறிக்கையையும் மத்திய நிதியமைச்சர் மொரார்ஜி தேசாயே தாக்கல் செய்தார். சிறப்பம்சம்: இந்த பட்ஜெட்டில், புதிய தொழில் நிறுவனங்கள் மற்றும் கப்பல்களுக்கு வரி தள்ளுபடி நீட்டிக்கப்படுவதாக அரசு அறிவித்தது.

Read More

1947- 48

சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் ஆர்.கே.சண்முகம் செட்டி தாக்கல் செய்தார். பட்ஜெட்டின் கீழ் செலவினமாக ரூ.197.39 கோடி ஒதுக்கப்பட்டது, இதில் சுமார் ரூ 92.74 கோடி அல்லது 46 சதவீதம், பாதுகாப்பு சேவைகளுக்கு ஒதுக்கப்பட்டது.

வருமான வரி அடுக்குகள்

Tax Rate Old Regime New Regime (FY'25)
Nil upto 2.5 lakh upto 3 lakh
5% 2.5 lakh to 5 lakh 3 lakh to 7 lakh
10% - 7 lakh to 10 lakh
15% - 10 lakh to 12 lakh
20% 5 lakh to 10 lakh 12 lakh to 15 lakh
30% Above 10 lakh Above 15 lakh

அமைச்சக பட்ஜெட் ஒதுக்கீடு (₹ crore)

Ministry 2022-23 2023-24 2024-25 FY'23 vs FY'24 (%)
Defence 5,25,166 5,93,537 6,21,940.85 4.7%
Road Transport and Highways 1,99,108 2,76,351 2,78,000 0.59%
Railways 2,04,000 2,40,000 1,08,000 -55%
Food and Public Distribution 2,15,960 2,05,514 2,13,020 3.65%
Home Affairs 1,85,777 2,02,868 1,50,983 -25.5%
Chemical and Fertilizers 1,05,262 1,78,481 1,64,150.81 -8.02%

துறைரீதியான அறிக்கை

வருமான வரி

Pan Card Holders: பான் கார்ட் உரிமையாளர்களே..! டிச.31 கடைசி தேதி, தவறினால் உங்களுக்கு சிக்கல் தான்..!

Taxpayer and investor alert: முதலீட்டாளர்கள் கவனத்திற்கு..! அக்.1 முதல் மாறப்போகும் 10 விதிகள், கூடுதல் செலவா? வரவா?

விவசாய பட்ஜெட்

Agriculture Budget 2024: நாடே எதிர்பார்க்கும் பட்ஜெட்! விவசாயிகளின் எதிர்பார்ப்புகள் என்னென்ன? ஓர் அலசல்

தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்: முக்கிய ஹைலைட்ஸ் இதோ

பாதுகாப்புத்துறை பட்ஜெட்

Defence Budget 2024: பாதுகாப்பு துறையை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்து செல்ல புதிய திட்டம்.. மத்திய நிதியமைச்சர் அறிவிப்பு!
பாதுகாப்பு துறையை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்து செல்ல புதிய திட்டம்.. மத்திய நிதியமைச்சர் அறிவிப்பு!
Defence Budget 2024: பாதுகாப்புத்துறை - மோடி ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளில் வெளியான முக்கிய அறிவிப்புகள்

ரயில்வே பட்ஜெட்

Railway Budget 2024: தொடரும் விபத்துகளுக்கு முற்றுப்புள்ளி.. ரயில் பாதுகாப்புக்கு என தனி பட்ஜெட் ஒதுக்கப்படுமா?
தொடரும் விபத்துகளுக்கு முற்றுப்புள்ளி.. ரயில் பாதுகாப்புக்கு என தனி பட்ஜெட் ஒதுக்கப்படுமா?
முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நிதி ஒதுக்கீடு.. தமிழ்நாட்டுக்கு கிடைத்த சூப்பர் திட்டங்கள்

ஆட்டோமொபைல் பட்ஜெட்

Honda EV SUVs: அடுத்தடுத்து களமிறங்கும் மின்சார வாகனங்கள்! பட்ஜெட்டில் சலுகைகள் கிடைக்குமா?

ரியல் எஸ்டேட் பட்ஜெட்

Real Estate Budget: வீடு வாங்க போறீங்களா? இடைக்கால பட்ஜெட்டில் ரியல் எஸ்டேட் துறைக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்..!
வீடு வாங்க போறீங்களா? இடைக்கால பட்ஜெட்டில் ரியல் எஸ்டேட் துறைக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்..!

லேட்டஸ்ட் செய்தி

"பட்ஜெட்டில் மாற்றாந்தாய் போக்கு" நாளை மறுநாள் தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. ஆர்ப்பாட்டம்
"உங்களுக்கு வந்தா ரத்தம்.. எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா?" மக்களவையில் தயாநிதி மாறன் விளாசல்!
Railway Budget: தமிழ்நாடு ரயில்வேக்கு பட்ஜெட்டில் ரூ. 6,362 கோடி ஒதுக்கிய மத்திய அரசு - அமைச்சர் அஷ்வினி
சுதந்திரத்திற்கு பிறகு அமைந்த மிக மோசமான அரசு இதுதான்.! ஒன்றிய அரசை கடுமையாக விமர்சித்த எம்பி தயாநிதிமாறன்.!
FM Nirmala Sitharaman: பட்ஜெட் உரையில் தமிழ்நாடு பெயரை ஏன் குறிப்பிடவில்லை ? நிர்மலா சீதாராமன் விளக்கம்
Budget 2024 LIVE Updates: ஆந்திர மாநிலத்தின் தேவைகளை அறிந்து பட்ஜெட்: பிரதமருக்கு நன்றி தெரிவித்த சந்திரபாபு நாயுடு
பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு வழக்கமாகச் சொல்லும் திருக்குறள் கூட இல்லை - சு.வெங்கடேசன் எம்.பி !
Budget 2024: இறால் ஏற்றுமதி வரிச்சலுகை...! யாருக்கு லாபம்??? மீனவ பிரதிநிதி கருத்து..!
Budget Receipt: இந்தியா எவ்வளவு கடன் வாங்க திட்டம்? - வரவு , செலவு எவ்வளவு தெரியுமா?
CM Stalin: தமிழ்நாட்டிற்கு இழைக்கப்பட்ட மாபெரும் துரோகம் : பட்ஜெட் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனம்
முத்ரா கடன் திட்டம்- தொகை இரட்டிப்பு: சிறு,குறு, நடுத்தர தொழில் துறைக்கான புதிய அறிவிப்புகள்!
"இன்னும் நிறைய திட்டங்களை காப்பி அடித்திருக்கலாம்" மத்திய பட்ஜெட் குறித்து சிதம்பரம் விமர்சனம்!
வரவேற்பும், ஏமாற்றமும் அளிக்கும் பட்ஜெட் - கோவை தொழில் துறையினர் கருத்து
Budget 2024: ஏமாற்றம்! பாரபட்சம்! தமிழ்நாட்டின் மீதான காழ்ப்புணர்ச்சி இந்த பட்ஜெட் - இபிஎஸ் சரமாரி விமர்சனம்
பெண்களே உங்க பெயரில் சொத்து வாங்குங்க..! கூடுதல் கட்டண குறைப்பு திட்டங்கள் இதோ உங்களுக்காக..!
Budget 2024 Highlights: பட்ஜெட் 2024-25ல் நிதியமைச்சரின் டாப் 7 அறிவிப்புகள்: உங்களுக்காக..!
Budget 2024: இறக்குமதி வரியை குறைத்தும் எட்டாக்கனியாகவே இருக்கும் தங்கம்! சாமானியர்கள் வேதனை!
மத்திய பட்ஜெட்டில் வருமான வரியின் புதிய திட்டத்தில் உள்ளோருக்கு அதிரடி சலுகைகள் அறிவிப்பு

புகைப்பட கேலரி

வீடியோக்கள்

Budget 2024 : வருமான வரியில் மாற்றமா? மோடி 2.0 கடைசி பட்ஜெட்! எகிறும் எதிர்பார்ப்புகள்

பட்ஜெட் ஷார்ட்ஸ்

வெப் ஸ்டோரீஸ்

Advertisement

தலைப்பு செய்திகள்

Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!

DMK Meeting: விஜயை சமாளிப்பது எப்படி? உள்ளாட்சி தேர்தல் - இன்று கூடுகிறது திமுக செயற்குழு கூட்டம், ஸ்டாலின் உத்தரவு என்ன?

Pushpa 2 Collection: அடங்காத வசூல்! அரண்டு போன பாலிவுட்! கோடிகளை குவிக்கும் புஷ்பா 2!

Bose Venkat : நீங்க எல்லாம் விஜயை விமர்சிக்கலாமா..சாதிப் பெயரை பெருமயாக சொன்ன போஸ் வெங்கட்
Bose Venkat : நீங்க எல்லாம் விஜயை விமர்சிக்கலாமா..சாதிப் பெயரை பெருமயாக சொன்ன போஸ் வெங்கட்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
DMK Meeting: விஜயை சமாளிப்பது எப்படி? உள்ளாட்சி தேர்தல் - இன்று கூடுகிறது திமுக செயற்குழு கூட்டம், ஸ்டாலின் உத்தரவு என்ன?
DMK Meeting: விஜயை சமாளிப்பது எப்படி? உள்ளாட்சி தேர்தல் - இன்று கூடுகிறது திமுக செயற்குழு கூட்டம், ஸ்டாலின் உத்தரவு என்ன?
Pushpa 2 Collection: அடங்காத வசூல்! அரண்டு போன பாலிவுட்! கோடிகளை குவிக்கும் புஷ்பா 2!
Pushpa 2 Collection: அடங்காத வசூல்! அரண்டு போன பாலிவுட்! கோடிகளை குவிக்கும் புஷ்பா 2!
Bose Venkat : நீங்க எல்லாம் விஜயை விமர்சிக்கலாமா..சாதிப் பெயரை பெருமயாக சொன்ன போஸ் வெங்கட்
Bose Venkat : நீங்க எல்லாம் விஜயை விமர்சிக்கலாமா..சாதிப் பெயரை பெருமயாக சொன்ன போஸ் வெங்கட்
Breaking News LIVE: கேரள மருத்துவ கழிவுகள் இன்று முதல் அகற்றம்! தமிழ்நாட்டில் தொடரும் மழை!

GST Rate: எதிர்பார்த்தவர்களுக்கு ஆப்படித்த நிதியமைச்சர் - இன்சூரன்ஸ் மீதான ஜிஎஸ்டி ரத்துக்கு ”நோ” - காரணம் என்ன?

GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்:  நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு

Nellai Murder: ”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
Embed widget