Income Tax Slabs New Tax Regime: வருமான வரி விதிகளால் தலை சுத்துதா? ரூ.12.75 லட்சம் வரி விலக்கு என்றால் என்ன? எப்படி கணக்கிடலாம்?
Income Tax Slabs New Tax Regime: பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ரூ.12.75 லட்சம் வரையிலான வரி விலக்கு பலனை பெறுவது எப்படி என்படது கீழே விவரிக்கப்பட்டுள்ளது.

Income Tax Slabs New Tax Regime: புதிய வருமான வரி விதிப்பு முறையின் வரு அடுக்குகள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.
ரூ.12.75 லட்சம் வரை வரி விலக்கு:
மத்திய அரசின் 2025-26 நிதியாண்டிற்கான பட்ஜெட்டை, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்தார். அதில் பொதுமக்களிடையே பணப்புழக்கத்தை அதிகரிக்கும் வகையில், ஆண்டு வருமானம் ரூ.12 லட்சம் வரை கொண்டவர்கள் வருமான வரி செலுத்த வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டது. அதோடு, நிலையான விலக்காக ரூ.75,000 தொடரும் என அற்விக்கப்பட்டுள்ளது. அதன்படி, மாதந்திர ஊதியம் மூலம் ரூபாய் 12லட்சத்து 75 ஆயிரத்தை ஆண்டு வருமானமாக பெறுபவர்கள் இனி வருமான வரி செலுத்த வேண்டியதில்லை.
முக்கிய கேள்வி?
வரி விலக்கு அறிவிப்பால் பொதுமக்களிடையே பிரதான கேள்வி ஒன்று எழுந்துள்ளது. ரூ.12 லட்சம் வரையிலான வருமானத்துக்கு வரிவிலக்கு என்றால், ஒருவர் ஆண்டிற்கு ரூ.15 லட்சம் வருமானம் ஈட்டினால் அவருக்கு மீதமுள்ள ரூ.3 லட்சத்துக்கு மட்டுமே வரி விதிக்கப்படுமா? என்பதே அந்த கேள்வியாகும். ஆனால், அதற்கு பதில் இல்லை என்பதே உண்மை. நிலையான விலக்கு வரம்புடன் சேர்த்து, ரூ.12.75 லட்சம் வருமானம் ஈட்டுபவர்களுக்கு மட்டுமே வரி விலக்கு பலன் கிடைக்கும். மற்றவர்களுக்கு ஸ்லாப் வாரியான வரிவிதிப்பு செயல்முறையை பின்பற்றப்படும்.
வருமான வரி கணக்கிடப்படுவது எப்படி?
வருமான வரி கணக்கீடு ஒரு நிர்ணயிக்கப்பட்ட செயல்முறையை பின்பற்றுகிறது. இது மொத்த வருமானத்தை வெவ்வேறு அடுக்குகளாக பிரித்து, அதற்கேற்ற விகிதங்களில் வரி விதிக்கப்படுகிறது. இதன் பொருள் ஒருவர் தனது முழு வருமானத்திற்கும் ஒரே விகிதத்தில் வரி செலுத்த வேண்டியதில்லை. அதோடு, விலக்கு அளிக்கப்பட்ட வருமானத்திற்கும் மேலாக, ஒருவர்ஈட்டும் தொகைக்கு மட்டும் வரி விதிக்கப்படுவதும் இல்லை.
உதாரணமாக, நீங்கள் ஆண்டுக்கு ரூ.15 லட்சம் சம்பாதிப்பவராக கருதுவோம். வரிவிதிப்பு செயல்முறையின் ஒரு பகுதியாக, ரூ.15 லட்சம் வருமானம் முதலில் பிரிக்கப்பட்டு, முதல் ரூ.4 லட்சத்துக்கு வரி விலக்கு அளிக்கப்படும். ரூ.4-8 லட்சம் ஸ்லாப்பின் கீழ் அடுத்த ரூ.4 லட்சத்திற்கு (ரூ. 20,000) 5 சதவிகிதம் வரி விதிக்கப்படும். ரூ.8-12 லட்சம் ஸ்லாப்பில் அடுத்த ரூ.4 லட்சத்துக்கு 10% (ரூ.40,000) வரி விதிக்கப்படும். மீதமுள்ள ரூ. 3 லட்சம் ரூ. 12-16 லட்சம் ஸ்லாப்பில் விழுகிறது. அதற்கு 15 சதவிகிதம் வீதம் ரூ.45,000 வரி வசூலிக்கப்படும். அதாவது, ரூ.15 ஆயிரம் வருமானம் ஈட்டுபவர்கள் ஆண்டுக்கு ரூ. 1,05,000 வரி செலுத்த வேண்டி இருக்கும்.
வருமான வரி அடுக்குகள்:
வரி அடுக்குகளின் திருத்தப்பட்ட கட்டமைப்பை அரசாங்கம் முன்மொழிந்துள்ளது. முதல் ஸ்லாப் ரூ.4 லட்சம் வரை, இதில் வரி பூஜ்யமாக உள்ளது. இது முன்பு ரூ.3 லட்சம் வரை மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது. அடுத்த ஸ்லாப் ரூ.4-8 லட்சம், அங்கு வரி விகிதம் 5%. அதைத் தொடர்ந்து ரூ.8-12 லட்சம் ஸ்லாப்பில் 10%, ரூ.12-16 லட்சம் ஸ்லாப்பில் 15%, ரூ.16-20 லட்சத்தில் 20% மற்றும் 20-24 லட்சம் ஸ்லாப்பில் 25% வரி விதிக்கப்படும். உங்களது வருமானம் ரூ.24 லட்சத்திற்கு மேல் ருந்தால் 30% வரி விதிக்கப்படும்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

