Vetrimaaran in TVK Function | தவெக-வில் இணையும் வெற்றிமாறன்?சம்பவம் செய்த தொண்டர்கள்! இது நம்ம LIST-லயே இல்லயே
தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது ஆண்டு தொடக்க விழா இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயத்தில் இயக்குனர் வெற்றிமாறன் பங்கேற்றது பேசுப்பொருளாக மாறியுள்ளது.
நடிகர் விஜய் தனது கட்சியை கடந்த வருடம் பிப்ரவரி இரண்டாம் தேதி டெல்லி தேர்தல் ஆணையத்தில் தமிழக வெற்றி கழகம் என்று கட்சியின் பெயரை பதிவு செய்தார். இன்று கட்சி தொடங்கி ஓராண்டு நிறைவு பெற்ற நிலையில் இரண்டாம் ஆண்டு அடியெடுத்து வைக்கின்ற காலகட்டத்தில் தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்கள் இதனை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
இதில் மதுரை மாவட்டம் அழகர் கோவில் சாலையில் மாத்தூர் விளக்கில் மாபெரும் இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது, சிறிய மாடு பெரிய மாடு என இரண்டு பிரிவாக போட்டிகள் நடைபெற்றது.
மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளர் விஜய் அண்பன் கல்லாணை தலைமையில் இந்த போட்டி நடைபெற்றது போட்டியில் வெற்றி பெற்ற மாடுகளுக்கு எல் இ டி டிவி பீரோ கிரைண்டர் மிக்ஸி ஃபேன் கட்டில் போன்ற பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த போட்டியில் இறை திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார் தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்கள் வெற்றிமாறனுக்கு மாலை அணிவித்து உற்சாகமாக வரவேற்றனர். இந்த மாட்டு வண்டி பந்தயத்தை ஏராளமான பொதுமக்கள் சாலை ஓரங்களில் நின்று பார்த்து ரசித்தனர்.
இந்தநிலையில் இயக்குநர் வெற்றிமாறன் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளது பேசுபொருளாக மாறியுள்ளது. சமூக வளைதளங்களில் வெற்றிமாறன் கலந்து கொண்ட வீடியோவை பகிர்ந்து தவெகவில் வெற்றிமாறன் இணையபோகிறாரா? அல்லது 2026 தேர்தலில் விஜய்-க்கு ஆதரவு தர போகிறாரா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.




















