மேலும் அறிய
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
Rohit Sharma: ஓய்வு எப்போது என அதிரடியாக அறிவித்த ரோகித் சர்மா.. இந்தியாவின் அடுத்த கேப்டன் யார்?
Rohit Sharma: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தனது ஓய்வு எப்போது என கூறியுள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அண்களுக்கு இடையிலான உலகடெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நாளை அதாவது ஜூன் 7ஆம் தேதி இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கவுள்ளது. பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ரோகித் சர்மாவின் இடது கட்டை விரலில் காயம் ஏற்படவே அவர் உடனடியாக பயிற்சியை கைவிட்டுவிட்டு வெளியேறினார். இதனால் அவரால் விளையாட முடியுமா முடியாதா என்ற கேள்விகள் அனைவரது மத்தியிலும் இருந்தது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்தித்த ரோகித் சர்மா தனது ஓய்வு குறீத்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.
2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தென்னாப்பிரிக்காவில் நடந்த டெஸ்ட் தொடரில் இந்தியாவின் தோல்வியைத் தொடர்ந்து விராட் கோலி பதவி விலகிய பிறகு, ரோஹித் அனைத்து வடிவங்களிலும் கேப்டனாக பொறுப்பேற்றார். அவர் அணியை முக்கியமான போட்டியில் வழிநடத்தும் போது, ரோஹித்தின் கவனம் வெற்றியை அடைவதிலும், இந்தியாவிற்கு ஒரு பெரிய ஐசிசி கோப்பையை கொண்டு வருவதிலும் அவர் கவனமாக இருப்பதாக பலர் தெரிவித்திருந்தனர்.
செய்தியாளர்கள் தரப்பில் இருந்து, ஓய்வு குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானாக இருந்தாலும் சரி, வேறு யாராக இருந்தாலும் சரி, இதற்கு முன் இருந்த கேப்டன்களும் கூட, இந்திய கிரிக்கெட்டை முன்னோக்கி கொண்டு செல்வதும், முடிந்தவரை பல போட்டிகள், பல சாம்பியன்ஷிப்களை வெல்வதும்தான் அவர்களின் கவனம் இருந்தது. எனக்கும் அப்படித்தான் இருக்கிறது. நான் போட்டிகளை வெல்ல விரும்புகிறேன். சாம்பியன்ஷிப்பை வெல்ல வேண்டும். அதற்காகத்தான் விளையாடுகிறோம் கூறினார். சில ஐசிசி கோப்பைகளை வெல்வது, சில அசாதாரண தொடர்களை வெல்வது நன்றாக இருக்கும். அதன் பின்னர் தான் ஓய்வு குறித்து யோசிப்பேன் அதன் பின்னர் தான் ஓய்வு குறித்து யோசிப்பேன். இப்போதே அதுபற்றி யோசித்து நான் அழுத்ததிற்கு ஆளாக விரும்பவில்லை" என கூறினார்.
மேலும் அவர், ஒரு கேப்டனாக, நான் சொன்னது போல், ஒவ்வொரு கேப்டனும் சாம்பியன்ஷிப்பை வெல்ல விரும்புவார்கள். அதனால் நானும் வித்தியாசமாக இருக்க மாட்டேன். எனக்கும் சாம்பியன்ஷிப்பை வெல்ல வேண்டும். நான் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்யும் போது, நான் ஒன்று அல்லது இரண்டு சாம்பியன்ஷிப்களை வென்றால் நன்றாக இருக்கும்" என கூறினார். ரோகித் சர்மா தனது ஓய்வு குறித்து கூறியுள்ளது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது. இதனால் இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த கேப்டன் யார் என்ற விவாதமும் கிளம்பியுள்ளது. 36 வயதான ரோகித்சர்மா இதுவரை 49 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 9 சதங்கள், 1 இரட்டை சதம், 14 அரைசதங்கள் என மொத்தம் 3 ஆயிரத்து 3379 ரன்களை விளாசியுள்ளார். அதிகபட்சமாக 212 ரன்கள் எடுத்துள்ளார்.
சமீபத்திய விளையாட்டு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் விளையாட்டு செய்திகளைத் (Tamil Sports News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
இந்தியா
தமிழ்நாடு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion