Breast Cancer : இளம் வயதினரையும் தாக்கும் மார்பகப் புற்றுநோய்.. மேமோகிராம் பரிசோதனை செய்ய கூச்சமா? இதைப் படிங்க..
ஆரம்ப கட்டங்களில், அறுவை சிகிச்சைகள் மார்பகத்தைப் பாதுகாப்பதிலும் கட்டியை அகற்றுவதிலும் கவனம் செலுத்துகின்றன.
வயதான பெண்களை விட இளம் பெண்களில் புற்றுநோய் பரம்பரையாக வர வாய்ப்புள்ளது. இருப்பினும், 40 வயதிற்குட்பட்ட பெண்களிலும் குறிப்பாக ஆச்சரியப்படும் விதமாக 30 மற்றும் 20 வயதுடைய பெண்களில் இது மிகவும் பொதுவானதாகி வருகிறது. கவனிக்கத்தக்கபடி இந்த நிலை மற்ற இன பெண்களை விட இந்திய இளம் பெண்களை அதிகம் பாதிக்கிறது, இருப்பினும், இந்தியர்களுக்கு அதிக தாக்கம் ஏற்படுவதற்கான காரணம் தெரியவில்லை. கூடுதலாக, இளம் பெண்கள் தங்களை மார்பக புற்றுநோய்க்கான ஆபத்தில் இருப்பதாக கருதுவதில்லை, ஆனால் இந்த நோய் எந்த வயதிலும் தாக்கலாம். மேலும், புற்றுநோய் பிற்காலத்தில் கண்டுபிடிக்கப்படும் நிலையில் அந்த வகை மார்பக புற்றுநோய்கள் பெரும்பாலும் மிகவும் தீவிரமானவை மேலும் அவற்றுக்குச் சிகிச்சையளிப்பதும் கடினம்.
இளம் வயதினரிடையே மார்பக புற்றுநோயின் நிகழ்வுகள் அதிகரிப்பதற்கான குறிப்பிட்ட காரணங்கள் தெரியவில்லை, ஆனால் பெண்களுக்கு மார்பக புற்றுநோயை உருவாக்கும் வாய்ப்புகளை அதிகரிக்கும் சில ஆபத்து காரணிகள் உள்ளன. இந்த காரணிகளில் மரபணு மாற்றம், மார்பக அல்லது கருப்பை புற்றுநோயின் குடும்ப வரலாறு, இளம் வயதில் மார்பக கதிர்வீச்சு சிகிச்சைக்கு ஆளான வரலாறு, தாமதமாக கர்ப்பம், உடல் பருமன் போன்ற வாழ்க்கை முறை காரணிகள் அடங்கும். இதுதவிர ஆல்கஹாலின் தீங்கு விளைவிக்கும் பயன்பாடு, உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இல்லாதது மற்றும் மாதவிடாய் தொடங்கும் வயது போன்ற இனப்பெருக்க ரீதியான பாதிப்புகள் ஆகியவையும் அடங்கும் என்கிறார் மேதாந்தா மருத்துவமனையின் மூத்த மார்பக அறுவை சிகிச்சை நிபுணர் ராஜீவ் அகர்வால்
அதிக எண்ணிக்கையிலான மார்பக பாதுகாப்பு அறுவை சிகிச்சைகள், மார்பக மறுசீரமைப்பு அறுவை சிகிச்சைகள் மற்றும் செண்டினல் நிணநீர் கணு பயாப்ஸி போன்ற மார்பக புற்றுநோய் சிகிச்சையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளன. இது மார்பகப் புற்றுநோய் சிகிச்சைக்கான வாய்ப்புகளை அதிகரித்துள்ளது.
ஆரம்ப கட்டங்களில், அறுவை சிகிச்சைகள் மார்பகத்தைப் பாதுகாப்பதிலும் கட்டியை அகற்றுவதிலும் கவனம் செலுத்துகின்றன. “மேம்பட்ட நிலைகளில், சென்டினல் நிணநீர் கணு பயாப்ஸியுடன் அல்லது இல்லாமலேயே புற்றுநோய் மீண்டும் வருவதைத் தவிர்க்க முழுமையான மார்பக அகற்றுதல் செய்யப்படுகிறது. பாரம்பரிய அறுவை சிகிச்சைகளே இன்றும் மார்பகப் புற்றுநோய் சிகிச்சைக்கான கோல்டன் ஸ்டாண்டர்டாக உள்ளன,” என்கிறார் டாக்டர் அகர்வால். நவீன மார்பக புற்றுநோய் சிகிச்சைகளில் கதிரியக்க அதிர்வெண் நீக்கம், பரவலாக ஆய்வு செய்யப்பட்ட குறைந்தபட்ச ஊடுருவும் நுட்பம் மற்றும் வீரியம் மிக்க மார்பகக் கட்டிகளை ஒழிப்பதற்கான கிரையோதெரபி ஆகியவையும் அடங்கும்.
முன்னதாக,
இந்தியப் பெண்களில் மார்பக புற்றுநோயின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது. மேலும் 25-40 வயதுக்குட்பட்ட பெண்களில் கண்டறியப்பட்ட புற்றுநோய்களில் மார்பகத்தைத் தாக்கும் புற்றுநோய் மட்டும் 33 சதவிகிதம் ஆகும். மேலும், மார்பக புற்றுநோயின் இறப்பு விகிதமும் மிக அதிகமாக உள்ளது, ஏனெனில் புற்றுநோய் ஒரு மேம்பட்ட கட்டத்தை எட்டும்போது மட்டுமே தொடர்புடைய அறிகுறிகளால் பெண்கள் தங்கள் மருத்துவரை சந்திக்கிறார்கள். ஆரம்பகால கண்டறிதல் நம்மைப் பலவகையில் காக்கும். சரியான நேரத்தில் சிகிச்சை அளிப்பது தொடக்க நிலையில் உள்ள புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்க உதவுகிறது.
மார்பகப் புற்றுநோய் புள்ளிவிவரங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன, மேலும் முன்கூட்டியே கண்டறிதல் சிகிச்சை மற்றும் உயிர்வாழும் விகிதங்களை மேம்படுத்துவதற்கு முக்கியமாகும். இங்குதான் மேமோகிராபி முக்கிய பங்கு வகிக்கிறது. மேமோகிராபி அல்லது மேமோகிராம் என்பது மார்பகப் புற்றுநோயின் ஆரம்பக் அறிகுறிகளைக் கண்டறிய உதவும் மார்பகங்களுக்கான எக்ஸ்ரே.
மேமோகிராம் செயல்முறை என்ன?
எளிதாகப் புரியும்படி சொல்லவேண்டும் என்றால் மேமோகிராம் என்பது மார்பகத்தை எக்ஸ்ரே எடுப்பது போன்றது. " மேமோகிராம் செயல்முறையின் போது, நீங்கள் வெறும் மார்புடன் இருக்குமாறு கேட்கப்படுவீர்கள், பின்னர் தொழில்நுட்ப வல்லுநர் உங்கள் மார்பகத்தை ஒரு ட்ரே போன்ற அமைப்பில் வைப்பார், மற்றொரு ப்ளேட் போன்ற அமைப்பு மெதுவாக உங்கள் மார்பகத்தை சிறிது சுருக்கி, இயந்திரம் உங்கள் மார்பக உட்புறத்தின் படங்களை எடுக்க உதவுகிறது. " என்கிறார் பொது மருத்துவர் சுரேஷ் ஹெச் அத்வானி.
நீங்கள் எப்போது மேமோகிராம் செய்ய வேண்டும்?
மம்மோகிராபி என்பது ஒரு முன்னெச்சரிக்கை அல்லது ஸ்கிரீனிங் சோதனை. மார்பக புற்றுநோயின் அறிகுறிகள்...அதாவது மார்பகத்தில் சிவத்தல் மற்றும் சென்சிட்டிவிட்டி, முலைக்காம்பின் வடிவத்தில் மாற்றம், ஒழுங்கற்ற கட்டிகள் தென்படும்போது மேம்மோகிராபி செய்யப்படுகிறது. 40 முதல் 55 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு ஆண்டுதோறும் மேமோகிராபி செய்ய பரிந்துரைக்கப்படுகிறது, மேலும் 55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை செய்யப்படுகிறது. குறிப்பாக அவர்கள் சராசரி ஆபத்து மண்டலத்தில் இருந்தால். அவர்களுக்கு மார்பக புற்றுநோய்க்கான வாய்ப்பு அதிகம் இருந்தால், குறிப்பாக அவர்களுக்கு மார்பக புற்றுநோயின் குடும்ப வரலாறு இருந்தால், குறிப்பாக அவர்கள் தாய் அல்லது சகோதரிக்கு நோய் இருந்தால் இது பொருந்தும்,” என்று டாக்டர் அத்வானி கூறுகிறார். மேலும், மார்பக புற்றுநோயுடன் தொடர்புடைய கட்டி அல்லது வேறு ஏதேனும் அறிகுறிகளைக் கண்டால் எப்போது வேண்டுமானாலும் மேமோகிராபி செய்யலாம். அறிகுறிகளைக் கண்டறிந்தவுடன் மருத்துவரை அணுகுவதே இதற்குச் சிறந்த வழி.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )